search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FRIENDSHIP CEREMONY"

    • ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் போலீசாருக்கான குடும்ப நல்லுறவு விழா நடைபெற்றது
    • கணவன் மனைவி இருவரும் வேலையில் இருப்பவர்கள் எப்படி? ஒற்றுமையாக இருந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் காவலர்களுக்கான நல்லுறவு குடும்ப விழா நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி முன்னிலை வகித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குடும்ப ஒற்றுமை, காவலர்களின் தனிப்பட்ட பிரச்சனை, வேலை சம்பந்தமான மன அழுத்த பிரச்சனை, குடியிருப்புகளில் போதுமான வசதிகள் கிடைக்கிறதா? காவலர்களின் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவைகள் பற்றி காவலர்கள் குடும்பங்கள் ஒன்றிணைந்து நல்லுறவுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் போலீசாரிடம் குறைகள் பற்றியும், கணவன் மனைவி நல்லுறவு பற்றியும், குடும்ப ஒற்றுமை பற்றியும் நல்ல நல்ல கருத்துக்கள் பற்றியும் காவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் காவலர்களுக்கு ஏதும் குறை ஏதும் இருந்தால் தெரிவிக்க வேண்டும் எனவும், சிறுசிறு உதாரணங்களைக் கூறி, கணவன் மனைவி இருவரும் வேலையில் இருப்பவர்கள் எப்படி? ஒற்றுமையாக இருந்து குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    ஆண் பெண் இன பாகுபாடின்றி இருவரும் ஒற்றுமையாக வேலைகளை பகிர்ந்து குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விளக்கம் அளித்து பேசினார். இதில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய எழுத்தர் புண்ணியகோடி, சிஐடி பிரிவு ரமேஷ், முதல் நிலை காவலர்கள் பாஸ்கர், விஜயகுமார் மற்றும் ஜெயங்கொண்டம் காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து நிலை போலீசார்களும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

    ×