என் மலர்

  நீங்கள் தேடியது "European Union"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன.
  • போருக்கு பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்து முடக்கப்பட்டுள்ளது.

  பிரஸ்சல்ஸ்:

  உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

  உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

  இதற்கிடையே, ரஷியா மீது சர்வதேச நாடுகள் வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

  இந்நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷியாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

  அந்த வகையில் ரஷியா, உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது.
  • உக்ரைன், மால்டோவாவை வேட்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

  பிரஸ்ஸல்ஸ்:

  நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும்.

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

  இதற்கிடையே, உக்ரைன் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று விண்ணப்பம் கொடுத்துள்ளது. அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

  இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு தொடங்கியது. இதில் உக்ரைன் மற்றும் மால்டோவாவை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகள் அங்கீகரித்தன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எல்.ஜி. நிறுவனம் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. #LG  ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.

  காப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.  காப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

  எல்.ஜி. பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 

  புகைப்படம் நன்றி: LetsGoDigital
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிட்டன் பிரதமர் தெரசா மே முன்வைத்த பிரெக்சிட் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் போன நிலையில் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இணைந்திருக்க 6 லட்சம் மக்கள் கையொப்பமிட்டுள்ளனர். #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
  லண்டன்:

  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வரும் 29-ந் தேதி முடிவடைகிறது. 
   
  ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்சிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

  கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

  அதேபோல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இங்கிலாந்து எம்.பி.க்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்துகிறார்கள்.

  ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்போ ‘பிரெக்சிட்’ நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என கைவிரித்துவிட்டது. எனவே எம்.பி.க்களை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் சில சட்டப்பூர்வ மாறுதல்களை தெரசா மே கொண்டுவந்தார்.

  அதனை தொடர்ந்து, கடந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. எனினும் அந்த ஒப்பந்தத்தையும் எம்.பி.க்கள் நிராகரித்து விட்டனர்.

  அதேசமயம், பிரெக்சிட் நடவடிக்கையை தாமதப்படுத்தும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. எனினும் சிறப்பான ஒரு ஒப்பந்தத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள தெரசா மே, ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

  நாடாளுமன்றத்தில் ‘பிரெக்சிட்’ ஒப்பந்தம் மீது 3-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த அனுமதி கிடையாது என சபாநாயகர் ஜான் பெர்கோவ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

  இந்த நிலையில், பிரிட்டன் நாட்டு சட்டத்தின்படி ஒரு விவகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் மக்கள் கையொப்பமிட்டால் அதை பாராளுமன்றம் பரிசீலனை செய்யலாம் என்ற நிலை உள்ளது.

  இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ என்பவர் பிரிட்டன் அரசு மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் மூலமாக கையெழுத்து வேட்டை நடத்தினார்.

  'ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது மக்களின் முடிவு என்று பிரிட்டன் அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த அரசுக்கு நாம் நிரூபித்தாக வேண்டும். 

  எனவே, அனைவரும் தவறாமல் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்’ என பிரிட்டன் நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின் 50-வது பிரிவை பயன்படுத்தி ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்பை தவிடுப்பொடியாக்கும் வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய மார்கரேட் அன்னி நியூசம் ஜியார்ஜியாடோ குறிப்பிட்டிருந்தார். 

  இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று பெருவாரியாக வாக்களித்தனர். வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 'பெட்டிஷன்ஸ்’ இணையதளம் நேற்றிரவு திடீரென்று முடங்கியது.

  இன்றைய நிலவரப்படி 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்  ஐரோப்பிய கூட்டமைப்பில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாக்களித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக விரைவில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Brexit #Bremain #UKgovernment #EuropeanUnion
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய கூட்டமைப்பு கண்டிப்புடன் கூறியது. #PulwamAttack #EuropeanUnion
  இஸ்லாமாபாத்:

  காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. இது ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.

  இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை அறிவுறுத்தின.

  இந்த நிலையில் பாகிஸ்தான் தங்கள் மண்ணில் உள்ள பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

  இது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

  ஐரோப்பிய கூட்டமைப்பின் துணைத்தலைவரும், வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர்மட்ட பிரதிநிதியுமான பெடெரிகா மோகேரினி, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி முகமது குரேஷியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

  அப்போது இருவரும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருவது குறித்து தீவிரமாக விவாதித்தனர். இருநாடுகள் இடையிலான மோதல் போக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி பெடெரிகா மோகேரினி வலியுறுத்தினார்.

  மேலும், ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மட்டும் இன்றி, தங்கள் மண்ணில் இருக்கும் ஒவ்வொரு பயங்கரவாதிகள் மீதும் பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என அவர் கண்டிப்புடன் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பதே ஐரோப்பிய கூட்டமைப்பின் கருத்தாக உள்ளது.

  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் உள்பட பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் புதிய உத்தரவை பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #EuropeanUnion #Apple


  ஆப்பிள் நிறுவன ஐபோன்கள், பல்வேறு நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் கேபிள்கள் அந்தந்த நிறுவனத்தின் விருப்பப்படி அவர்களது சாதனங்களில் வழங்கி வருகின்றன.

  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஐரோப்பிய யூனியன் விரைவில் சில மாற்றங்களை அமல்படுத்த இருக்கிறது. அந்த வகையில் சர்வதேச மொபைல் போன் சந்தையில் உற்பத்தியாகும் மொபைல்களுக்கு பொதுவான சார்ஜிங் போர்ட்டை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

  இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் மொபைல் போன் நிறுவனங்களை பொதுப்படையான மொபைல் சார்ஜிங் போர்ட்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த ஐரோப்பிய யூனியன், இம்முறை நிரந்தர தீர்வை எட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு ஆண்டும் உலகில் 51,000 டன் மின்சாதன கழிவு தேங்குவதே ஐரோப்பிய யூனியனின் நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மக்கள் புதிய சாதனங்களை பயன்படுத்த துவங்கும் போது பழைய மொபைல் போன் சார்ஜர்களை வீசிவிடுகின்றனர். மேலும் இது நுகர்வோருக்கு பாதகமாக இருப்பதாகவும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.  முன்னதாக ஆப்பிள், சாம்சங், நோக்கியா மற்றும் ஹூவாய் என மொத்தம் 12 பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பொதுப்படையான மொபைல் சார்ஜர்களை உற்பத்தி செய்ய 2009-ம் ஆண்டிலேயே ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டிருந்தது. எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை.

  மொபைல் போன் நிறுவனங்கள் இதற்கு முறையாக செவிசாய்க்காததால் ஐரோப்பிய யூனியன் இம்முறை கடின முடிவுகளை எடுக்க இருக்கிறது. முறையான அணுகுமுறைக்கு சரியான தீ்ர்வு கிடைக்காததால், யூனியன் விரைவில் வெவ்வேறு ஆப்ஷன்களை செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு கட்டணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.

  தற்சமயம் மொபைல் போன்களில் மிகவும் பிரபலமாகவும், எதிர்காலத்திற்கும் சிறப்பானதாக தெரியும் மொபைல் சார்ஜிங் கேபிள் மற்றும் ஸ்லாட்டாக யு.எஸ்.பி. டைப்-சி இருக்கிறது. இதனால் ஐரோப்பிய யூனியன் யு.எஸ்.பி. டைப்-சி ரக சார்ஜர்களை பொதுப்படையாக அறிவித்து, ஐரோப்பிய யூனியனில் விற்பனையாகும் மொபைல்களில் யு.எஸ்.பி. டைப்-சி அவசியம் இருக்க வேண்டும் என உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.

  இதுபோன்ற சூழலில் ஆப்பிள் நிறுவனமும் தனது சாதனங்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். பின் ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி வழங்குவதை தவிர வேறு வழியிருக்காது. #EuropeanUnion #Apple
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல மாதங்கள் விவாதத்துக்கு பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை சட்ட வடிவமாக்கி பிரிட்டன் பாராளுமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #Brexitbecomeslaw #UKleaveEU
  லண்டன்:

  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, வரும் 29-3-2019-க்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே மும்முரம் காட்டி வருகிறார்.

  இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் வருவதானால் விசா நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என பரவலான கருத்து நிலவிய நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வருபவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டது.


  இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவுக்கு சட்ட வடிவம் கொடுக்கும் மசோதா மீது பிரிட்டன் பாராளுமன்றத்தில் பல மாதங்களாக விவாதம் நடைபெற்று வந்தது. மசோதாவை ஆதரித்தும், எதிர்த்தும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காரசாரமாக உரையாற்றினர்.

  இந்நிலையில், 1972-ம் ஆண்டில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைவது தொடர்பாக உருவாக்கப்பட்ட சட்டத்திற்கு மாற்றாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் சட்டம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் அவையில் மேஜைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். #Brexitbecomeslaw #UKleaveEU
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில், அமெரிக்க பொருட்களுக்கு ரூ.22 ஆயிரத்து 120 கோடி அளவில் ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்து எடுத்த நடவடிக்கை அமலுக்கு வந்தது. #TrumpExtraTariffs #EuropeanUnion
  டப்ளின்:

  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

  டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, மெக்சிகோ மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

  எனவே இந்த நடவடிக்கைக்கு எதிராக உலகளவில் கண்டனங்கள் குவிந்தன. ஆனால் அவற்றை டிரம்ப் நிராகரித்தார். அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் ஏற்பட்டு இருக்கிற தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

  டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி தருகிற வகையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற விவசாய பொருட்கள், இரும்பு, உருக்கு பொருட்கள் என மொத்தம் 29 பொருட்கள் மீதான வரியை அதிரடியாக இந்தியா உயர்த்தியது.

  பாதாம்பருப்பு, அக்ரூட் பருப்பு உள்ளிட்டவை வரி உயர்த்தப்பட்ட பொருட்களில் அடங்கும். ஆகஸ்டு 4-ந் தேதி அமலுக்கு வர உள்ள இந்த வரி உயர்வு 241 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,638 கோடி) மதிப்பிலானது ஆகும்.

  அடுத்த அடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த வரி விதிப்பு நேற்று அமலுக்கு வந்தது.

  வரி விதிக்கப்படுகிற பொருட்களில் போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்டவை அடங்கும்.

  இந்த வரி விதிப்பு தொடர்பாக டப்ளின் நகரில் உள்ள அயர்லாந்து நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷனர் ஜீன் கிளவுட் ஜங்கர் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “அமெரிக்காவின் வரி விதிப்பு, எல்லா தர்க்கத்துக்கும், வரலாற்றுக்கும் எதிராக அமைந்து உள்ளது. எனவே எங்களின் பதிலடி, தெளிவானது. சரியாக அளவிடப்பட்டது” என்று கூறினார்.

  மேலும், “அமெரிக்க வரி விதிப்பை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வோம்” என்றும் கூறினார்.

  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்காக, புகையிலை, ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், வேர்க்கடலை தூள் உள்ளிட்டவை அமைந்து உள்ளன. இவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றியம் 25 சதவீதம் வரி விதித்து உள்ளது.

  மேலும், அமெரிக்க காலணிகள், துணி வகைகள், சலவை எந்திரங்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

  அமெரிக்க வரி விதிப்பும், அதற்கு பதிலடி தருகிற விதத்தில் பிற நாடுகளின் வரி விதிப்பும் உலகளாவிய வர்த்தக போராக மாறுகிற ஆபத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளன. #TrumpExtraTariffs #EuropeanUnion
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா-ஐரோப்பா காலாச்சாரங்களுக்கு பாலமாக திகழ்ந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஐரோப்பிய யூனியன் விருது வழங்கப்பட்டுள்ளது. #AmitabhBachchan #EuropeanUnion
  மும்பை:

  இந்தி திரைப்பட உலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனிக்கு ஐரோப்பிய யூனியன் சார்பாக விருது வழங்கப்பட்டது.

  ஐரோப்பிய யூனியன் சார்பாக நேற்று மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஐரோப்பிய யூனியன் தூதரகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பச்சனுக்கு, இந்தியா-ஐரோப்பிய கலாச்சாரங்கள் மேம்படும் வகையில் பணியாற்றி, பாலமாக விளங்கியதற்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் அமிதாப் பச்சனுடன் அவரது மகள் ஸ்வேதா பச்சன் கலந்து கொண்டார்.  இதுகுறித்து டுவிட் செய்துள்ள அமிதாப், விருது வழங்கியதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு நன்றி தெரிவித்தார். #AmitabhBachchan #EuropeanUnion
  ×