search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineering admission"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு 2.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு இணையவழியில் வரும் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கு 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10968 இடங்கள் உள்ளன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் 175 இடங்கள் உள்ளன.

    தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உட்பட சிறப்புபிரிவுக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் நடைபெற உள்ளது. அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ம்தேதி முதல் பல சுற்றுகளாக நடக்க உள்ளது. 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்கல்வி, தொழில் முறைக்கல்வி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு
    • மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந்தேதி வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்றே தொடங்கியது.

    https://www.tneaonline.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. மாணவர்கள் இதில் சொந்தமாக விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையங்களில் மாணவர்கள் உதவி பெறலாம்.

    மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்பட உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அதில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் கடைசி நாள் ஜூலை 19-ந் தேதி ஆகும். அதே நாளில் என்ஜினீயரிங்கில் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவும் நிறைவடைகிறது.

    இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமவாய்ப்பு எண் ஜூலை 22-ந்தேதி ஒதுக்கீடு செய்யப்படும். சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும்.

    மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந்தேதி வெளியிடப்படும். இதையடுத்து ஆகஸ்டு 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சேவை மையம் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

    மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்டு 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கலந்தாய்வு நடை பெறும்.

    பொதுக்கல்வி, தொழில் முறைக்கல்வி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்டு 22-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் 15, 16-ந்தேதி களில் நடைபெறும்.

    • இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.
    • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. இதனை https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் அல்லது பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.

    இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்(ரேண்டம் எண்) ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்.

    மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, மதுரை, கோவை மண்டலத்தில் என்ஜினீயரிங் சேர்க்கையில் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சியில் எப்போதும் தனி அக்கறை கொண்டுள்ள அம்மாவின் அரசு, தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், உலக தரத்திற்கு இணையான தொழிற்கல்வியினை பெற்று தங்களது திறமைகளையும், செயல் திறன்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது.

    இந்தியாவிலேயே தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் 4 வளாகங்களிலும், சென்னை தவிர தமிழ்நாடு முழுவதும் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் பயிற்றுவித்து வருகின்றன. ஆனால், திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம் புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

    அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் துவங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.



    அதனை ஏற்று, ஏழை, எளிய மாணவர்களும் உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, தற்போது திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் ஏற்கனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டத்திலும் நான்கு இள நிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    எனவே, இந்த வருடத்திற்கான (2018-19) பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டத்திற்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

    இதன் மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை, எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணாக்கர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    ×