search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Lakshmi"

    • சமாதியில் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி
    • பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

    புதுவைக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்களும் சுற்றுலா பயணிகளும் மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து லட்சுமி யானையிடம் ஆசி வாங்குவதை வழக்கமாக கொண்டிரு ந்தனர்.

    அதோடு லட்சுமி யானைக்கு வாழைப்பழம், அருக்கம்புல், போன்றவற்றை வழங்கி மகிழ்வார்கள், குழந்தைகளும் ஆவலோடு யானை மீது அமர்ந்து மகிழ்வார்கள்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் யானையின் வசிப்பிடமான ஈஸ்வரன் கோவில் வீதியிலிருந்து அதிகாலை நடை பயிற்சி சென்றபோது காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மயங்கி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. யானையின் உடலை பார்த்து பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். யானையின் உடலுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    யானையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது இந்தியா முழுவதுமே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யானை உடல் அடக்கம் செய்யும் வரை பொதுமக்கள் சோகமாகவே இருந்தனர். தொடர்ந்து யானை நினைவு இடத்தில் தினமும் பக்தர்கள் பால் ஊற்றி வணங்கி வந்தனர்.

    இந்த நிலையில் யானை லட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று நடைபெற்றது. வனத்துறை அருகே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யானை லட்சுமி நினைவிடத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்கள் சிறப்பு பூஜை செய்து புனித நீரை யானையின் நினைவிடத்தின் மீது ஊற்றி சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏராளமானோர் யானை லட்சுமிக்கு பிடித்தமான ஆப்பிள், ஆரஞ்சு, அண்ணாச்சி, கொய்யா , வாழை போன்ற பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய் ஆகியவற்றை வைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மணக்குள விநாயகர் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • யானை லட்சுமி காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்
    • யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் யானை லட்சுமியின் உடல், கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு அடக்கம் செய்யப்பட்டது.



    இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது. 5 வயதாக இருந்தபோது, 1996ல் தொழிலதிபர் ஒருவர் கோவிலுக்கு யானையை பரிசாக அளித்தார். வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். இந்த யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது. இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பாக பழகிவந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். யானையைப் பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள். யானை லட்சுமியின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ×