search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Results"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு மாநிலங்களில் மூன்றில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
    • தெலுங்கானாவில் 10 இடங்களில் முன்னணி வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், தேசிய மகளிர் அணி உறுப்பினருமான நடிகை குஷ்பு 4 மாநில தேர்தல் முடிவு குறித்து கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்க இருக்கிறது. 4 மாநிலத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி மக்கள் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த 4 மாநிலத் தேர்தல் செமி பைனல் (அரையிறுதி) ஆட்டம் போன்றது என்று வர்ணித்தனர். தற்போது அவர்கள் அரையிதிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கு 400 இடங்களில் வெற்றி பெறுவதாகும். அதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது. ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல்.
    • ஆனால், நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. மிசோரம் மாநிலம் வாக்கு எண்ணிக்கை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சத்தீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    என்றபோதிலும், அந்தந்த கட்சித் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும் நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    இன்று வாக்கு எண்ணிக்கையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின் வாக்கு எந்திரங்கள் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன் திரண்டுள்ளனர். அவர்கள் கைகளில் பதாதைகளுடன் நின்றுள்ளனர். மேலும், சிலர் பட்டாசு வெடித்து தற்போதே கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

    ஒரு காங்கிரஸ் தொண்டர் ஹனுமான் வேடமணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.

    • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
    • ஜெயா நகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பா.ஜ.க. சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.

    முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார்.

    இதற்கிடையே, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார்.

    தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஜெயா நகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    • மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
    • தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

    பெங்களூருவின் ஜெயாநகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பாஜக சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து தான் தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார். தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 224 தொகுதிகள் அடங்கிய கர்நாடக சட்டமன்றத்தில் ஜெயாநகரில் மட்டும் இன்னும் முடிவு தெரியாமல் உள்ளது. 

    • காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
    • ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.

    ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

     

    மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.

    இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் பெங்களூரு வருகின்றனர். முதல்வரை தேர்வு செய்த பின் அடுத்த வாரத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. 

    • பல்வேறு தொகுதிகளில் முன்னிலை பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி விட்டது.
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

     

    பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, அம்மாநில மக்களுக்கு தனது நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் மேலும் கூறியதாவது..,

    "வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வெறுப்பு உணர்வு இல்லாமல் கர்நாடக தேர்தலில் போட்டியிட்டோம். மக்களின் சக்தி வெற்றி பெற்று இருக்கிறது. இதே நிலை மற்ற மாநிலங்களிலும் தொடரும். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் விரைந்து நிறைவேற்றப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதா அமைத்த நல்லரசு தொடரவும், அ.தி.மு.க. வின் அடிப்படை வாக்கு வங்கியை நிலைநாட்டியும், தமிழக சட்டமன்றப் பேரவையில் அ.தி.மு.க.வின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



    பாராளுமன்ற பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னமே தங்கள் இதயம் கவர்ந்த சின்னம் என்பதை எடுத்துக் கூறும் வகையிலும், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதை நிலைநாட்டும் வகையிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு எங்கள் இதயமார்ந்த நன்றி.

    அகில இந்திய அளவில் பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளாக தேச பக்தியும், மக்கள் தொண்டும் தனது இரு கண்களாகக்கொண்டு எழுச்சிமிகு நல்லாட்சியை நடத்திய பிரதமர் நரேந்திரமோடியின் உழைப்புக்குக் கிடைத்த சிறப்பான வெற்றி இது.

    இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் இந்தத் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகத்தை வலுப்படுத்தி இருக்கின்றார்கள். நம் தேசத்தின் குடிமக்கள் அனைவருமே பாராட்டுக்கும், வணக்கத்திற்கும் உரியவர்களே.

    தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க.வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

    வாக்காளப் பெருமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என்று உறுதி கூறுகிறோம். இன்னும் சிறப்புடன் பணியாற்றி, அனைத்துத் தொகுதி மக்களின் அன்பையும், நல்லாதரவையும் பெறுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் நாம் இழந்திருந்தாலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வுக்கு எதிர்காலமே இல்லை என்று ஆரூடம் சொன்னவர்களின் கூற்றை அடியோடு புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க. வாக்கு வங்கி பத்திரமாக உள்ளது என்ற உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

    அ.தி.மு.க.வினர் அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றுமையாய் உழைக்க வேண்டிய நேரம் இது. தவறான வழிகாட்டுதல்களாலும், சுயநலம் கொண்டு தனி மனிதர்கள் சிலர் உருவாக்கிய தோற்றப் பிழைகளாலும் திசை மாறிய அ.தி.மு.க.வினர் அனைவரும் ஜெயலலிதாவின் உழைப்பையும், ‘எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. மக்கள் தொண்டாற்றும் ’என்று அவர் சூளுரைத்ததையும் நினைவில்கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காகவும், சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்ட கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் அரும்பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க.வை காத்திட தொடர்ந்து உழைப்போம். வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

    91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது.

    காலை 8.30 மணிக்கு அதாவது ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.

    9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

    10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.



    காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.

    காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

    காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.

    பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.

    இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

    421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது.

    எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில், தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முந்துகிறது.



    இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது. தற்போதைய முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணிக்கு சிக்கல் உருவாகும்.

    அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், அவர்களின் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படும் பட்சத்தில், இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங



    வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

    வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
    கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறியநிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் துல்லியத்தன்மை, உண்மைத்தன்மை ஆகியவை தொடர்பாக எங்களில் சிலரிடையே சச்சரவு ஏற்படலாம்.

    ஆனால், எண்ணற்ற கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒரே மாதிரி இருக்கும்போது, தேர்தல் முடிவுகளும் அதே மாதிரிதான் இருக்கும். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எந்த பங்கும் இருக்காது. கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகளும் இருந்தால், இதை வைத்து எதிர்க்கட்சிகள் செய்த பிரச்சினையும் தோல்வி அடையும்.

    2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை சேர்த்து பார்த்தால், இந்திய ஜனநாயகம் நன்றாக முதிர்ச்சி அடைந்திருப்பது தெளிவாகும்.

    யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்பு, தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. சிந்தனை திறனுள்ள மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்குகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி குடும்பம் ஒரு சுமையாக ஆகிவிட்டது. இனிமேல், அந்த குடும்பம், காங்கிரசுக்கு ஒரு சொத்தாக இருக்காது. கழுத்தை பிடித்த ‘அல்பட்ராஸ்’ பறவையாக இருக்கும். அந்த குடும்பம் இல்லாவிட்டால், கூட்டம் சேராது. அந்த குடும்பம் இருந்தால், ஓட்டு கிடைக்காது.

    பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல், 2014-ம் ஆண்டு தேர்தலிலும் எடுபடவில்லை. இந்த தேர்தலிலும் எடுபடவில்லை.

    தலைவர்கள் தகுதி அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறார்கள். சாதி அல்லது குடும்ப பின்னணி அடிப்படையில் அல்ல. பிரதமர் மோடியின் செயல்பாடு சார்ந்த விஷயங்கள், வாக்காளர்களிடம் ஆதரவை பெற்றுள்ளன. அவர்கள் எதிர்க் கட்சி கூட்டணியை நம்ப தயாராக இல்லை.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

    பா.ஜனதாவைச் சேர்ந்த குஜராத் மாநில துணை முதல்-மந்திரி நிதின் பட்டேல் கூறியதாவது:-

    மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இது எல்லா கருத்துக்கணிப்புகளிலும் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×