search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational Qualification"

    • வி.ஏ.ஓ. பதிவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகங்கை

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.

    • விழுப்புரத்தில் 25-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.08.2022 வியாழக்கிழமை அன்று சிறிய அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடை பெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார்துறை வேலைவாய்ப்பு நிறுவனம் கலந்து கொண்டு 3,000-ற்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள். 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநர்கள். வேலைநாடுநர்களின் வயது வரம்பு 18 முதல் 20 -க்குள் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத் தைச் சார்ந்த மேற்குறிப்பி ட்ட தகுதிகளையுடைய பெண் வேலைநாடுநர்கள் 25.08.2022 அன்று காலை 9.00 மணியளவில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    முகாமில் தேர்வு செய்யப்படும் வேலைநாடு நர்களுக்கு 3 மாதகால பயிற்சி, மாத சம்பளமாக ரூ.15,000/-, உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதி மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் இந்நிறுவனத்தால் செய்து தரப்படும். இதற்காக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படமாட்டது. இம்முகாமில் பணியாணை பெறும் எந்தவொரு மனுதாரருக்கும் அவரது வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு இரத்து செய்யப் படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தனியார்துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் வேலைநாடு நர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்து உள்ளார்.

    • மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், கல்வி தகுதி தேவை இல்லை.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரையிலுள்ள வக்ப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்ப டவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு மதுரை மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (எல்.எல்.ஆர்.) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், கல்வி தகுதி தேவை இல்லை. மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 110 வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் 1.பேஷ் இமாம், 2.அரபி ஆசிரியர்கள், 3.மோதினார் 4.முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.

    ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமான சான்று, புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, சாதி சான்று, ஓட்டுநர் உரிமம் / எல்.எல்.ஆர்., வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்புகண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்/விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×