என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dwaine Pretorius"
- முன்னாள் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி.
- என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியவர் அதனால் நான் பாப் டூ பிளஸ்சிஸூக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன் என்றார்.
கேப்டவுன்:
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். 33 வயதான பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவு ஒன்றை எடுத்தேன். அது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என குறிக்கோளுடன் இருந்தேன். அது எப்படி நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கடவுள் எனக்கு திறமையையும் வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் கொடுத்தார். மீதமுள்ளவை அவரது கைகளில் இருந்தன என்றார்.
இனி டி20 மற்றும் பிற குறுகிய வடிவத்திலான கிரிக்கெட்டில் எனது கவனத்தை திருப்ப உள்ளேன். இதைச் செய்வதன் மூலம், எனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நான் சிறந்த சமநிலையைப் பெற முடியும். எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.
முன்னாள் கேப்டன் பாப் டூ பிளஸ்சிஸூக்கு எனது நன்றி. முதல் முறையாக சர்வதேச அணியில் இருந்து என்னை விடுவித்த பிறகு மீண்டும் என்னை அணிக்குள் கொண்டு வந்தவர் மற்றும் என்னை ஆதரித்து சிறந்த வீரராக மாற்ற உதவியர் அதனால் நான் அவருக்கு மிகுந்த நன்றி சொல்கிறேன் என்றார்.
2016- ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி உள்ளார். இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார். 2021-ம் ஆண்டு பாகிஸ்தானிக்கு எதிரான டி20 போட்டியில் இவர் 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
- இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
- கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் ஆல்ரவுண்டரான டுவைன் பிரிடோரியசுக்கு இடது கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்தத் தொடரில் அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் அவர் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்