என் மலர்

  நீங்கள் தேடியது "durgai amman"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த அலங்காரத்தில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
  • வழிபாட்டில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வரலட்சுமி விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

  திருச்செந்தூர்:

  திருச்செந்தூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற துர்க்கை அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட இந்த அலங்காரத்தில் ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 ஆகிய ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த பணத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.1 லட்சம் ரூபாய் ஆகும்.

  வழிபாட்டில் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வரலட்சுமி விரதமிருந்து அம்மனை வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன.
  • ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் இந்த துர்க்கையை வழிபடுவார்கள்.

  பார்வதிதேவியின் அம்சமாக பார்க்கப்படுபவள், துர்க்கை தேவி. வட மாநிலத்தில் துர்க்கை வழிபாடு மிகவும் பிரசித்திப்பெற்றது. தென்னிந்தியாவிலும் பெரும்பாலான சிவாலயங்கள் மற்றும் அம்பாள் கோவில்களில் துர்க்கையை தரிசிக்க முடியும். இந்த துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாக வேதங்கள் சொல்கின்றன. அவை:- சைலபுத்திரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா, காத்யாயனி, காளராத்திரி, மகாகவுரி, சித்திதாத்ரி. இவர்கள் ஒன்பது பேரும் 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களைப் பற்றிய தகவல்களை சிறிய குறிப்புகளாக பார்ப்போம்.

  சைலபுத்திரி

  நவ துர்க்கைகளில் முதன்மையானவள், சைலபுத்திரி. 'மலைமகள்' என்பது இதன் பொருள். ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் முதல் நாளில் இந்த துர்க்கையை வழிபடுவார்கள். யோகிகள் அனைவரும், தங்களுடைய யோக சாதனைகள் கைகூடி வர இந்த துர்க்கையைத்தான் வழிபடுவார்கள். இந்த அன்னையின் வாகனம் - நந்தி, ஆயுதம்- சூலம்.

  பிரம்மச்சாரிணி

  'பிரம்ம' என்பதற்கு 'தபசு' என்று பொருள். 'பிரம்மச்சாரிணி' என்பதற்கு 'தவம் இயற்றுபவள்' என பொருள் கொள்ளலாம்.

  இந்த துர்க்கையை நவராத்திரியின் இரண்டாவது நாளில் வழிபடுவார்கள். வலது கரத்தில் கமண்டலமும், தண்டமும் தாங்கி எளிமையாக காட்சி தரும் இந்த அன்னைக்கு, வாகனம் இல்லை. இவள், சிவபெருமானை மணம்புரியும் பொருட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்ததாக வரலாறு சொல்கிறது. இந்த அன்னை, ஞான வடிவானவள். தன்னை வழிபடுபவர்களுக்கு பொறுமையைத் தருபவள்.

  சந்திரகாண்டா

  துர்க்கையின் மூன்றாவது வடிவம் இது. 'காண்டா' என்பதற்கு 'மணி' என்று பொருள்.

  தன்னுடைய முன் நெற்றியில், மணி போல சந்திரனை சூடியிருப்பதால் இந்த துர்க்கைக்கு 'சந்திரகாண்டா' என்று பெயர். இந்த அன்னைக்கு, சிவபெருமானைப் போல மூன்று கண்கள், 10 கரங்கள் உண்டு. வாகனம்- சிங்கம். போருக்கு தயாரான கோலத்தில் இந்த துர்க்கை காணப்படுகிறாள். நவராத்திரியின் மூன்றாம் நாளில் இந்த துர்க்கையை வணங்குவார்கள்.

  கூஷ்மாண்டா

  நவராத்திரியின் நான்காம் நாளில் வழி படப்படும் துர்க்கை, 'கூஷ்மாண்டா.' 'கூ' என்பது 'சிறிய' என்றும், 'உஷ்மா' என்பது 'வெப்பம்' என்றும், 'ஆண்டா' என்பது 'உருண்டை' என்றும் பொருள்படும்.

  வெப்பமயமான சிறிய உருண்டையான இந்த உலகை படைத்தவள் என்று பொருள்படும் வகையில் 'கூஷ்மாண்டா' என்று இந்த துர்க்கை அழைக்கப்படு கிறாள். எட்டுக் கரங்களைக் கொண்ட இந்த அன்னைதான், சூரிய மண்டலத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கி இருக்கிறாள். அன்னையின் வாகனம்- சிங்கம்.

  காளராத்திரி

  நவராத்திரியின் 7-ம் நாள் வழிபாட்டுக்குரியவள், 'காளராத்திரி' தேவி. இந்த துர்க்கையின் வடிவம்தான், நவ துர்க்கைகளிலேயே உக்கிரமானது என்கிறார்கள்.

  'காள' என்பதற்கு 'நேரம்' என்றும், 'மரணம்' என்றும் பொருள். 'ராத்திரி' என்பது இரவைக் குறிக்கும். 'காளராத்திரி' என்பதற்கு 'காலத்தின் முடிவு' என்று பொருள் கூறுகிறார்கள். இந்த துர்க்கையின் வடிவம், எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. கருமை நிற மேனியைக் கொண்ட இந்த துர்க்கை நான்கு கரங்களைக் கொண்டவள். இரண்டு கரங்களில் வஜ்ராயுதம், வாள் ஏந்தியும், மற்ற இருகரங்களில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் காட்சி தருகிறாள். கழுதையை வாகனமாகக் கொண்டவள்.

  ஸ்கந்த மாதா

  'ஸ்கந்த' என்பது முருகப்பெருமானைக் குறிக்கும். முருகனுக்கு தாய் என்பதால் இந்த அன்னைக்கு 'ஸ்கந்தமாதா' என்று பெயர்.

  நவராத்திரி விழாவில் 5-வது நாளில் வணங்கப்படும் தெய்வம் இவள். நான்கு கரங்களைக் கொண்ட இந்த துர்க்கை, இரண்டு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி தவம் செய்பவளாக காட்சி தருகிறாள். இதனால் இந்த தேவியை 'பத்மாசினி' என்றும் அழைக்கிறார்கள். மன அமைதியைத் தருபவளாக இந்த அன்னை சித்தரிக்கப்படுகிறாள்.

  காத்யாயனி

  முன்னொரு காலத்தில் 'காதா' என்ற முனிவர், தவம் இருந்து அன்னையை தன்னுடைய மகளாகப் பெற்றார். இதனால் இவளுக்கு 'காத்யாயனி' என்ற பெயர் வந்தது.

  இத்தேவியை 'மகிஷாசூரமர்த்தினி' என்றும் கூறுகிறார்கள். தீய சக்திகளை வேரோடு அழிக்கும் இந்த அன்னை, நவராத்திரியின் 6-ம் நாளில் வணங்கப்படுகிறாள். நான்கு கரங்களில் ஒரு கரத்தில் தாமரையும், மறு கரத்தில் வாளும் தாங்கியிருக்கிறாள். மற்ற இருகரங்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வகையில் உள்ளன.

  மகாகவுரி

  'மகா' என்பதற்கு 'பெரிய' என்றும், 'கவுரி' என்பதற்கு 'தூய்மையானவள்' என்றும் பொருள்.

  இந்த துர்க்கை, மிகுந்த வெண்மை நிறத்துடன் காணப்படுவதால் 'மகா கவுரி' என்று அழைக்கப்படுகிறாள். நான்கு கரங்களைக் கொண்ட இந்த தேவி, ஒரு கரத்தில் சூலமும், மறு கரத்தில் மணியும் தாங்கியிருக்கிறாள். மற்ற இரு கரங்களும் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றன. இந்த துர்க்கையின் வாகனம்- வெள்ளை நிற காளை.

  சித்திதாத்ரி

  நவராத்திரியின் இறுதிநாளில் இந்த அன்னையை ஆராதனை செய்வார்கள். 'சித்தி' என்பது 'சக்தி'யைக் குறிக்கும். 'தாத்ரி' என்பதற்கு 'தருபவள்' என்று பொருள்.

  அஷ்டசித்திகளை அருள்பவள் என்பதால், அன்னைக்கு இந்தப் பெயர் வந்தது. தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் இந்த தேவி, நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். கதை, சக்கரம், தாமரை, சங்கு ஏந்தியிருக் கிறாள். சிங்கத்தை வாகனமாகக் கொண்டவள். இந்த அன்னையை வழிபடுபவர்கள், வாழ்வில் பேரானந்தத்தை அடைவர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட துர்காதேவி கவசத்தை சொல்லலாம்.
  • கணவன் மனைவி சேர்ந்து வாழவும், திருமண தடைகள் நீங்கவும் இந்த கவசத்தை சொல்லலாம்.

  ச்ருணு தேவி ப்ரவக்ஷயாமி கவசம் ஸர்வஸித்திதம்

  படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

  அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்

  ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

  உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ

  சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

  ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ

  ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

  அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ

  ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

  கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ

  மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

  ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா

  ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.
  திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கையை விரதம் வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

  ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல்  - 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

  திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 -  முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும்

  செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் - 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்
  புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோ தரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்  

  வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல்  - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும்

  வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து ராகுகால நேரமான காலை 10.30 முதல்  - 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் .

  சனி: காலை 9 -  முதல் 10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் .
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி மகா சண்டிஹோமம் நடந்தது.
  திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரசாமி கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையொட்டி மகா சண்டிஹோமம் நடந்தது. 29-வது ஆண்டாக கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த யாகத்தில் கன்யாபூஜை, சுகாசினி பூஜை, வடுக பூஜை, கோபூஜை ஆகியவை நடைபெற்றன.

  யாக குண்டத்தில் பக்தர்கள் கொடுத்த பழங்கள், தேங்காய்கள், வஸ்திரங்கள் போடப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கிட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

  சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அனை வருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
  ×