search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "duration"

    • பெரம்பலூரில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது
    • மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அக் 20 -2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் பல காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    தக்காளி

    ரூ.120 ஆக நீடிப்பு

    சமீப காலமாக சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து அதே விலை நீடித்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 70 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனையாகிறது .

    பீன்ஸ் ரூ. 105

    உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு, உருளை கிழங்கு 34, பெரிய வெங்காயம் 25-30, பச்சை மிளகாய் 70-75, கத்திரி 30-36, வெண்டைக்காய் 30-32, முருங்கைக்காய் 30-40, பீர்க்கங்காய் 40-44, சுரக்காய் 20-25, புடலங்காய் 24-26, பாகற்காய் 50-55, தேங்காய் 20-28, முள்ளங்கி 18-20, பீன்ஸ் 95-105, அவரை 50-55, கேரட் 56-62, மாங்காய் 25-30, வாழைப்பழம் 30-55, கீரைகள் 20-24, பப்பாளி 20-24, கொய்யா 30-45, மாம்பழம் 40-60, ஆப்பிள் 180, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.   

    • தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது.
    • இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் மேட்டூர், காடையம்பட்டி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    இதில் மேட்டூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரத்தில் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மா பேட்டை, புதிய பஸ் நிலை யம், 5 ரோடு பகுதிகளில் மழை பெய்தது. இதில் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மேட்டூர்-34, காடையாம்பட்டி-9, சேலம் - 8.7, பெத்தநாயக்கன் பாளையம் - 5, ஓமலூர்- 4.6, ஆத்தூர்- 4 ஏற்காடு - 4, கெங்கவல்லி - 2, எடப்பாடி - 1, சங்ககிரி - 12 என சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 73.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இன்று கனமழை பெய்யும்

    இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதி களில் மேலடுக்கில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் மேலும் மழை தீவிரமடைந்துள்ளது.

    இதையொட்டி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்க

    செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர்.

    சேலம், ஜூன்.12-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்படிப்புகளில் சேர சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஏராளமானோர் ஆர்வத் துடன் விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி கடந்த 9-ந்தேதி வரை எனவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பட்டயப்படிப்புகளுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ெதாடர்ந்து வேளாண்மை, தோட்டக்கலை, மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
    • ஏற்காட்டில் 17.4 மில்லி மீட்டர், மேட்டூரில் 14.2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக வீரகனூர், ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோசண நிலை நிலவியது. ஏற்காட்டில் கோடை விழா நடைபெற்று வருவதால் ஏராளமான சுற்றுலாப் பணிகள் இருந்தனர். அங்கு நேற்று பெய்த சாரல் மலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏற்காட்டில் 17.4 மில்லி மீட்டர், மேட்டூரில் 14.2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    • சேலம் மாவட்டத்தில் 3 -வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
    • 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 3 -வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தம்மம்பட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வெளிகள் உ ள்பட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    இேத போல ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    43.30 மி.மீ. மழை

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டி யில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது ஓமலூர் 5, எடப்பாடி 3, ஆத்தூர் 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 43.30 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • காடையாம்பட்டி, மேட்டூரில் கன மழை அதிக பட்சமாக 36 மி.மீ. பதிவானது.
    • இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக காடையாம்பட்டி, மேட்டூர், சங்கிகிரி மற்றும் ஓமலூரில் நேற்றிரவு கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம் பட்டியில் 36 மி.மீ. மழை பெய்துள்ளது.

    மேட்டூரில் 35.8, ஓமலூர் 31, சங்ககிரியில் 29.2, எடப்பாடியில் 6.2, சேலம் 4.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 143 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது.
    • விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது.

    சேலம்:

    இந்திய அரசின் சி.எஸ். ஐ.ஆர். நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி கடந்த 10-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் முதுநிலை பட்டதாரிகளின் கோரிக்கையை ஏற்றும், அவர்களின் நலன் கருதியும் நெட் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்பு செய்து, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு நாளை மறுநாள் (17-ந்தேதி) கடைசி நாள் ஆகும். அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த வருகிற 17-ந்தேதி இரவு 11.50 மணி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. மேலும் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதனை திருத்திக்கொள்ள வருகிற 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தகவலை இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • ஏற்காட்டில் அதிக பட்சமாக 32 மி.மீ. பதிவு

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    ஏற்காட்டில் கன மழை

    குறிப்பாக ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் பகுதியில் சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்த வழியாக செல்லும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேற்றிரவு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் அந்த ஓடையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அதே வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    இதே போல மேட்டூர், தம்மம்பட்டி உள்பட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் 

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காடையாம்பட்டி, மேட்டூர் பகுதிகளில் கன மழை பெய்தது.

    இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம்பட்டியில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 22.2, ஓமலூர் 10.4, எடப்பாடி 1.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையுமம் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    ×