search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drug eradication"

    • விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
    • போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கடலூர்:

    ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப் பொருள் ஒழிப்பு தினமான இன்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தான் போட்டியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்து கொண்டார்.

    இந்த போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு டவுன்ஹாலில் இருந்து பாரதி சாலை, பீச் ரோடு வழியாக சென்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் முடித்தனர். அப்போது கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் குருமூர்த்தி, உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    • காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் வரும் 26ந் தேதி நடைபெறும், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளது. என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அறிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில், வரு கின்ற 26-ந் தேதி, காரைக் காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற 26-ந் தேதி, காரைக்காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படு கிறது. காரைக்கால் மாவட்டத்தில், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது நமது கடமை. அன்றையதினம் பொது மக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், பேரணி உள்ளிட்ட வைகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பது சம்பந்தமாக விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும். இது குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி களும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார்.

    கூட்டத்தில் பயிற்சி கலெக்டர், துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவ்ஹால் ரமேஷ் மற்றும் நலவழித்துறை, சுகாதா ரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, காரைக் கால் நகராட்சி ஆணையர் மற்றும் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

    • வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டும்' என்றார்.

    பின்னர் 'ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி' என்ற சாதனை மலரை அமைச்சர் வெளியிட்டார். முன்னதாக திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமையில், கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.

    போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி முழக்கம் எழுப்பியபடி பேரணி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை நடைபெற்றது. இதில் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஹரிகோவிந்தராஜ், ராஜேந்திரன் ரவிக்குமார், மதியரசி, கிரிஜா, சவரிராயம்மாள், கோகிலவாணி மற்றும் வக்கீல் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஹரி கிருஷ்ணன், பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி, இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பிருந்தா மற்றும் கல்லூரி ஐ.கியூ.ஓ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர். வள்ளியூர் காவல் துறை சார்பில் பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    • சமயநல்லூர் சரக பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • போதையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    வாடிப்பட்டி

    சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை, சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் போதைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. போதையினால் ஏற்படும் தீமைகள், நோய்கள், பாதிப்புகள், ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி உறுதிமொழிகள், கருத்தரங்குகள், வினாடி-வினாபோட்டி, பேச்சு, ஓவிய, கட்டுரைபோட்டி நடத்தப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அதேபோல் பள்ளிகள், கோவில்கள், பஸ்நிலையங்கள், மார்கெட்டுகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ''காவல்துறைஅறிவிப்பு'' என்ற தலைப்பின்கீழ் போதைபொருட்களான கஞ்சா, புகையிலை, குட்கா, மது போன்றவை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தெரியவந்தால் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், காவல்நிலையங்களின் தொலைபேசி, கைபேசி எண்களை குறிப்பிட்ட பதாதைகள் வைக்கப்பட்டு சமயநல்லூர் போலீஸ்சரகம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும் என விஜயகாந்தி கோரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

    சென்னை:

    தமிழகத்தில் போதை மருந்து நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போதை பொருளை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். முதல்வரின் நடவடிக்கை தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

    அவ்வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

    புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய திமுக, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, மதுபானங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும் போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை.

    இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.

    • மராத்தானில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போலீஸ் துணைகமிஷனர் சீனிவாசன் பேசும்போது போதை இல்லா சமூகம் உருவாக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

    நெல்லை:

    போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் வண்ணம் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினிமராத்தான் பாளையில் இன்று நடைபெற்றது.

    இதனை நெல்லை கிழக்கு மண்டல துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் துணைகமிஷனர் சீனிவாசனும் மராத்தான் ஓடினார். பாளை தனியார் கல்லூரியில் தொடங்கிய மராத்தான் அண்ணா விளையாட்டரங்கம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தது.

    அப்போது பேசிய துணைகமிஷனர் சீனிவாசன் போதை இல்லா சமூகம் உருவாக ஒன்றிணைந்து செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.

    மேலும், மாணவர்களிடம் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் இன்ஸ்பெக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×