search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver arrested"

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்

    உடுமலை:

    உடுமலை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட சிறப்பு தனிப்படை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி, தலைமை காவலர் கோவிந்தராஜு ஆகியோர் தலைமையில் போலீசார் மாரிமுத்து, ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தளி பேரூராட்சி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது தளி பேரூராட்சி பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் (வயது 43) என்பவர் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தனிப்படையினர் செல்வகுமாரை தளி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மொத்தம் 45.7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 1000 லிட்டர் கள்ளத்தனமாக விற்க செல்லும் பொழுது போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையான போலீசார் விடியற்காலை மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் சித்தாமூர் செல்லும் பிரதான சாலையின் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த மினி லாரி சோதனை செய்த போது மிகப் பெரிய 11 பேரல்களில் 1000 லிட்டர் டீசல் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் என்பவரிடம் விசாரிக்கும் பொழுது தனது வாகனங்களுக்கு டீசல் வாங்கி செல்வதாக கூறியுள்ளார்.இந்த டீசல் வாங்கியதற்கான ரசீது கேட்ட பொழுது அவர் இல்லை எனவும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளிக்கவே போலீசார் தீவிர விசாரணை செய்ததில் தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை டீசரை கள்ளத்தனமாக குறைந்த விலைக்கு வாங்கி வந்தவாசி பகுதிக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது பிடிபட்டார் என்பது தெரியவந்தது.

    அதனைத் தொடர்ந்து மினி லாரியையும் 11 பேரல் டீசலையும் கைப்பற்றி லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் வேல்முருகன் (வயது 44) பிடித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் சிவம் தியேட்டர் அருகே சட்டவிரோதமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் பயிற்சி எஸ்ஐ தனபால் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது,அவ்வழியாக ஆட்டோவில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ்(வயது39) என்பதும், ஆட்டோ டிரைவராக இருப்பதும் தெரியவந்தது.

    மேலும், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் வாகனத் தணிக்கையில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் அடுத்த கந்திலி பகுதியை சேர்ந்த ஆனந்தன் ( வயது 25) என்பதும், இவர்

    லோடு ஆட்டோவில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 15 அட்டை பெட்டிகளில் 1440 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரிந்தது. மேலும் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், ஆனந்தனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மது போதையில் தகராறு
    • போலீசார் விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி அக்கிரெட்டிபுதூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவரது தம்பி சந்திரசேகர் (35) ஆட்டோடிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு, அண்ண னிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த சந்திரசேகர், அண்ணன் அசோக்குமாருடன் தகராறில் ஈடுப்பட்டார். இதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    ஆவேசமடைந்த சந்திரசேகர், அசோக்குமாரின் ஆள்காட்டி விரலை கடித்து துப்பிவிட்டார். வலி தாங்காமல் துடித்த அசோக்குமாரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து அசோக்குமார் காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன்.
    • அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார்.

    விளாத்திகுளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (வயது48). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கலைஞானபுரம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக நாகஜோதியின் கார் டிரைவரான கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் மற்றும் அவரது சகோதரர் குழந்தைக்கனி, உறைகிணறு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தர கணபதி 4 பேரை கைது செய்து குளத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர் மைக்கேல்ராஜ் கூறியதாவது:-

    எனது பணத்தேவைக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் ரூ. 2 லட்சம் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தேன். ஆனால் என்னிடம் அடிக்கடி நாகஜோதி பணத்தை திருப்பி கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் நாகஜோதியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

    சம்பவத்தன்று காலை நாகஜோதிக்கு போன் செய்து விளாத்திகுளத்தில் எனக்கு ஒருவர் பணம் வரவேண்டியுள்ளது என்றும், என்னுடன் வந்தால் அதை வாங்கி உங்கள் கடனை கொடுத்துவிடுகிறேன் எனக்கூறி நாகஜோதியை அழைத்து வந்தேன். பின்னர் நாகஜோதியை விளாத்திகுளம் அழைத்து வந்தேன். சூரங்குடியில் எனது சகோதரர் குழந்தைக்கனி, உறவுக்காரர்காளான மிக்கேல் ராஜ் என்ற மாரி மற்றும் சுந்தர கணபதி ஆகிய 3 பேரை காரில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளம் நோக்கி சென்றேன்.

    சூரங்குடியில் இருந்து கார் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குமாரசக்கனபுரம் கிராமம் அருகில் காரில் வைத்தே கயிற்றைக்கொண்டு நாகஜோதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

    பின்னர் நாகஜோதியின் உடலை காரின் உள்பகுதியில் இருந்து தூக்கி டிக்கியில் வைத்து கலைஞானபுரம் காட்டுப்பகுதிக்கு உடலை கொண்டு சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி காருடன் நாகஜோதியை எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை பிடித்து கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே பச்சைவேலி கிராமப் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட அழகிய கூழாங்கற்கள் இருந்தது.இதனையடுத்து லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 23) என்பவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அழகிய கூழாங்கற்களை கடத்திவந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவது தொடர்நிகழ்வாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே மட்டிகை கிராமத்தில் இருந்து அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு நிறுத்தப்ப ட்டிருந்த லாரியை 2 பேர் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு ப்பின் முரணாக பதில் கூறினர். அப்போது திடிரென ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், வெள்ளைக்கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் துரை (வயது 35) என்பதும், இவர் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் கோவிலாங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தராஜ் (40). லாரி உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அழகிய கூழாங்கற்களை எடுத்துச் சென்று விற்க திட்டமிட்டு, லாரியில் ஏற்றியுள்ளனர். கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த திருநாவலூர் போலீசார், லாரி உரிமையாளர் ஆனந்தராஜ், டிரைவர் துரை மீது வழக்குபதிவு செய்தனர். டிரைவர் துரையை கைது செய்த போலீசார், தப்பியோடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

    • கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.
    • தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது.

    கொளத்தூர்:

    மாதவரம், மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை சாலை அருகே கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர் சுப்பிரமணி, போலீஸ்காரர் கருப்பையா ஆகியோர் நேற்று இரவு அங்கு சென்று பார்த்தபோது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 13 லாரிகள் இருந்துள்ளன. ஒரு லாரியில் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருப்பது போல் டீசல் போடும் பம்பு அமைக்கப்பட்டு அந்த லாரியில் இருந்த டீசல் மற்ற லாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது.

    இதுகுறித்து அங்கிருந்த நாமக்கல்லை சேர்ந்த தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் அவரது கூட்டாளிகள் இரண்டு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இது போலீசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஸ்ரீதரிடம் டிரைவராக இருந்த முக்கிய கூட்டாளியான தினேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ரவுடி தினேசை அதிரடியாக கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அயாஸ் அஹமத். இவரு டைய மகன் அப்ரார் அஹ மத் (வயது 19). தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக் கிள் மீது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக் குள்ளானது. இதில் அப்ரார் அஹமதுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நீங்கள் மற்றும் பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய டாக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதன்பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மறியல் போராட்டம் கார ணமாக சுமார் 2 மணி நேரத் துக்கும் மேலாக வாணியம்பா டியில் இருந்து ஆந்திரா செல் லும் சாலையில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துவிபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த துடன், டிரைவர் அஜீத் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×