search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi visit"

    • பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வரும் திங்கள் கிழமை டெல்லி செல்கிறார்.
    • டெல்லி பயணத்தில் காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

    பாட்னா:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார்.

    வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

    மேலும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

    பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ்குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
    • மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

    சென்னை:

    மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இம்மாதம் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.

    தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

    மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ம் தேதி டெல்லி செல்கிறார். #EdappadiPalaniswamy #Delhi
    சென்னை:

    கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    இதற்கிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை மறுநாள் (20-ம் தேதி) பார்வையிட உள்ளேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 22ம் தேதி டெல்லி செல்கிறார்.

    டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி, கஜா புயல் குறித்த சேத விவர அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து நிவாரண நிதி கோர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #EdappadiPalaniswamy #Delhi
    டெல்லி சென்றுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இது அரசியல் பயணம் அல்ல என்றும் தனிப்பட்ட பயணம் என்றும் கூறி யூக செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். #OPS #OPSInDelhi #OPSMeetsNirmalaSitharaman
    சென்னை:

    பாராளுமன்ற வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்களித்தது, தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் வருமான வரி சோதனைகள், எதிர்க்கட்சிகள் கூறும் ஊழல் புகார்கள் என பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் முனுசாமி ஆகியோரும் சென்றுள்ளனர்.



    டெல்லியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று பிற்பகலில் சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் டெல்லி சென்றடைந்ததும் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது டெல்லி பயணம் குறித்தும், அரசியல் தொடர்பாகவும் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    ‘இந்த பயணம் முழுக்க முழுக்க தன் தனிப்பட்ட பயணம். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட என் சகோதரர் மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு ராணுவ விமானம் அளித்தனர். எனவே, இதற்கு நன்றி தெரிவிக்க மட்டுமே மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை’ என தெரிவித்தார் ஓ.பி.எஸ். #OPS #OPSInDelhi #OPSMeetsNirmalaSitharaman
    பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமியின் அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி டெல்லி வருகிறார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi
    புதுடெல்லி:

    பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணியசாமி குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணியசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரமணியசாமி இன்று பதிவிட்டுள்ளார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi 
    ×