என் மலர்

  நீங்கள் தேடியது "Delhi Womens Hostel"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விடுதியில் தங்கி இருந்த பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டது ஏன்? இதில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க டெல்லி மகளிர் ஆணையம், போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.

  புதுடெல்லி:

  சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக பாதுகாவலர் உடை அணிந்திருக்கும் நபர், சில பெண்களை அடித்து உதைத்து சித்ரவதை செய்யும் காட்சிகள் வைரலாகி வந்தது.

  இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

  இதையடுத்து இந்த சம்பவம் எங்கு நடந்தது என போலீசார் விசாரித்தனர். இதில் டெல்லி கரோல்பார்க் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

  அந்த விடுதியின் பாதுகாவலர்தான் அங்கு தங்கியிருந்த பெண்களை தாக்கி சித்ரவதை செய்திருப்பதும் தெரியவந்தது.

  இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த பெண்கள் சித்ரவதை செய்யப்பட்டது ஏன்? இதில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க டெல்லி மகளிர் ஆணையம், போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.

  ×