search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspects"

    • கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
    • மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும்,

    ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலைவாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 10 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதையும், அதே பகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை ப்பள்ளியினையும்,

    ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளதையும், ஊசிமலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்க ப்படவுள்ள இடத்தினையும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளிக்கு செல்வதற்கான சாலையில் கான்கிரீட் தளம் அமை யவுள்ள இடத்தி னையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ ர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை பெற்று வீடு திரும்பியவரிடம் தொலை பேசியில் நலம் விசாரித்து, மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக சோளகனை பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஆகியவற்றை தங்கு தடையின்றி கிடை த்திட நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொ டர்ந்து அரசுபொது த்தேர்வில் 12-ம் வகுப்பில் பர்கூர் அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் பயின்ற மாணவி ஜோதிகா 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.

    தொடர்ந்து பர்கூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், வெண்ணெய் மற்றும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணி, விளக்கு, பூந்தொட்டி உள்ளிட்ட பொரு ட்களையும் பார்வையிட்டார். மேலும் மாட்டின ஆராய்ச்சி நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்புடைய அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்த், இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர்.ராஜசேகர், உதவிபொறியாளர் சிவபிரசாத், பர்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் மலையன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.

    • ஜி.கல்லுப்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் கலந்துரை யாடினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி, பணி தளத்தில் குடிநீர் வசதி மற்றும் முதலுதவி பெட்டி வசதிகள், பொது நிதிதிட்டத்தின் கீழ் ரூ.9.85 லட்சம் அமைக்கப்பட்டுள்ள சிமிண்ட் சாலை பணி , பிரதமமந்திரி வீடு திட்ட த்தின்கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டுமானபணி, அறிஞர் அண்ணாது வக்கபள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு அமைக்க ப்பட்டுள்ள காய்கறி தோட்ட த்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஓடைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று வதற்கான உரிய நடவடிக்கை களை வருவாய்த்துறை யினருடன் இணைந்து மேற்கொண்டு ஓடைப்பகுதி களை ஊராட்சி கட்டு ப்பாட்டில் வைக்குற மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலை வர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஊராட்சி பகுதி களில் வசிக்கின்ற பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

    முன்னதாக ஜி.கல்லு ப்பட்டி யில் செயல்பட்டுவரும் அன்புகுழந்தைகளிடத்தில் தங்கி பயிலுகின்ற குழந்தை களின் எண்ணிக்கை, பணி யாளர்களின் எண்ணிக்கை, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு , வழங்க ப்படும் உணவு, குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் , இல்லத்தின் செயல்பாடுகள், அரசின் வழிகாட்டு நெறிமுறை களின்படி செயல்படுகிறதா என்பதுகுறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைதொடர்ந்து புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி யில் மாணவ-மாணவி களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணி க்கை, வருகை பதிவேடு வழங்கப்படும் உணவு அதன் தரம் மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாணவ-மாணவி யர்களிடம் கலந்துரை யாடினார்.

    • கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
    • ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கோவை,

    பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணிகள் முன்னேற்ற நிலை குறித்து அவ்வப்போது கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்ெகாண்டு வருகின்றார்.

    அதனடிப்படையில் பொள்ளாச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் 48 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி ஆண்கள், மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி, ரூ.148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமான பணிகள், பொள்ளாச்சி கோயம்புத்தூர் சாலை சி.டி.சி மேடு, அருகே ரூ.7 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் கிராந்தி குமார்பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    • மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.
    • பவானி ஆறு மாசடைந்து வருவதால் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரில் ஆய்வு செய்தார்.

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரானது பவானி ஆற்றில் இருந்து எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பவானி ஆறு மாசடைந்து வருவதால் தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இத்திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் மூலமாக குழுவினர் திட்ட மதிப்பீடு செய்து அந்த அறிக்கையினை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு சமர்ப்பித்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் அமைய உள்ள புதிய நீரேற்று நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 3.5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேற்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நகராட்சி ஆணையர் வினோத்திடம் கேட்ட றிந்தார்.

    பின்னர் சத்தியமூர்த்தி நகர் சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டப்பணி களுக்காக தோண்டப்பட்ட குழிகளால் பழுதடைந்த சாலையினையும் பார்வை யிட்டார். அப்போது மக்களின் குறைகளை கேட்டறிந்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் மணி நகரில் கலைஞர் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 87 லட்சத்து 39 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அறிவு சார் மைய கட்டிட கட்டுமான பணிகளையும் ஆய்வுபார்வையிட்டார்.

    ஆய்வின் போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி, நகர் மன்றத்தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், கடமலை - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட கண்டமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ- மாணவிகளின் எண்ணி க்கை, காலை உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களின் இருப்பு, சமையல் பாத்திரங்களின் எண்ணிக்கை, தண்ணீர் வசதி, மின் வசதி, வழங்க ப்படும் உணவின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவிகளின் கல்வி யினை ஊக்கப்படு த்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட வும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கிட உத்தர விட்டு செயல்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்திற்குட்பட்ட கடமலை - மயிலாடும்பாறை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் 51 அரசு தொடக்க ப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை தினந்தோறும் அரசின் அட்டவணைப்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கிட தலைமை ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது என தெரி வித்தார்.

    அதனைத்தொடர்ந்து கண்டமனூர் ஊராட்சி க்குட்பட்ட புதுராமசந்தி ராபுரம் கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வீரகாளியம்மன் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான மாவு அரைக்கும் ஆலையின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பராமரிக்கப்படும் பதிவேட்டில் உரிய பதிவு களை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவல ர்களை அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட உப்புக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சிப்பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.17.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 உறை கிணறு கட்டுமானப்பணி, கொண்டல் நாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள பணி,

    ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகத்திட்ட ரேசன் கடைகட்டுமானப்பணி ஆகிய பணிகளை பார்வயிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் வளர்ச்சி த்திட்ட ப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, உப்புக்கோட்டை ஊராட்சி க்குட்பட்ட மகளிர் சுகாதார வளாகம் உப்புக்கோட்டை ஊராட்சி மன்ற அலு வலகத்தில் வளர்ச்சித்திட்ட ப்பணிகள் குறித்த பதிவேடு களை ஆய்வுசெய்தார். காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உரிய பதிவு களை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவல ர்களை அறிவுறுத்தினார்.

    • ஜெயமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • எவ்வித புகார்களுக்கும்‌ இடமளி க்காத வகையில் பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரிய குளம் வட்டத்திற்குட்பட்ட ஜெயமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது நெல் கொள்முதல் நிலை யத்திற்கு விவசாயிகளிட மிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளின் எண்ணி க்கை, இருப்பு அதற்கான பதிவேடுகள், அச்சமயத்தில் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட நெல்லின் ஈரப்பதம், விவசாயிகளிடம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சம்மந்த மாக ஏதும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் விவசாயிகளிடம் கேட்டறிந்து தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயி களின் நலனை பாது காத்திடும் வகையில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை பாது காத்து வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் நெல்பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறை களின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான தொகையினை உடனு க்குடன் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயி களிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை எவ்வித புகார்களுக்கும் இடமளி க்காத வகையில் பணிகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டு ள்ளது என தெரிவித்தார்.

    • அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சித்திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் செயல் பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தி ற்குட்பட்ட குன்னூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ரேசன் கடை ஆகியவற்றின் செயல்பாடு கள் குறித்து கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வகுப்பறை களுக்கு நேரடியாக சென்று மாணவ, மாணவிகளிடம் கல்வி பயிலும் முறை குறித்து கலந்துரையாடினார்.

    அதனைத்தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க ப்படும் உணவு வகைகள் அதன் தரம் ஆகியன குறித்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகள் அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    • காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி அருகே காமாட்சி புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வைப்பறை, விவசாயிகளுக்கு உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஷஜீவனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ெதரிவித்ததாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நலனை காத்திடும் வகையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின சார்பில் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதனடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    காமாட்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, இருப்பு எண்ணிக்கை, அதற்கான பதிவேடுகள் மற்றும் விலைப்பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சங்கத்தின் மூலம் மாதந்தோறும் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்பட்டு பயடைந்து வருகின்றனர்.

    மேலும், விவசாயிகளுக்கு தரமான உரங்களை விநியோகம் செய்திடவும், இருப்பு தொடர்பான விபரங்களை உரிய பதிவேடுகளில் தினசரி பதிவு செய்திடவும், பருவ காலங்களுக்கு தேவையான உரத்தினை இருப்பு வைத்து விநியோகம் செய்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி, கோடாங்கிபட்டி ஊராட்சி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி, சருத்துப்பட்டி ஊராட்சி, தென்கரை பேரூராட்சி மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    அரிசி குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கை, இதுவரை பொங்கல் பரிசு த்தொகுப்பு வழங்கப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் பச்சரிசியின் தரம், இருப்பு மற்றும் கரும்பின் அளவு அதன் தடிமன் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் பொங்கல் பரிசுத்தொகு ப்பின் சர்க்கரை, பச்சரிசி, கரும்பு ஆகியவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் மற்றும் முழு கரும்பு ஒன்று அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிடாமல் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவித்து, அதனை மாற்று வதற்கான உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    • ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம், கம்பத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரசந்தை கட்டுமானப்பணி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப்பணிகளை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கம்பம் நகராட்சிப்பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் 262 எண்ணம் உட்புற கடைகள், 23 எண்ணம் கொண்ட வணிக வளாகக் கட்டிடம், உணவகக்கட்டிடம் ஆகிய பணிகள் 4375 ச.மீட்டரில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தைக்கான கட்டுமானப்பணி,

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சம் மற்றும் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, இதில் ரூ.3.33 லட்சம் பொது மக்களின் பங்களிப்புடன் 4 வகுப்பறை கட்டிடம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும் 2 வகுப்பறை கட்டிடம், ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றது.

    இக்கட்டிடத்தில் பூச்சு வேலை மற்றும் தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.

    தமிழக அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை செயல்படுத்தி, அதன்மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.

    அதனடிப்படையில், நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் படித்து பயன்பெறும் வகையில் நூலகங்கள் கட்டுதல், ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் நிகழ்ச்சிகள் நடத்திட சமுதாயக்கூடங்கள் கட்டுதல், சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையிலும்,

    உள்ளூர் விவசாயிகள் வெளியூர் சென்று சிரமப்படாத வகையில் உள்ளூரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு சந்தைகள் அமைத்தல், பொது மக்கள் எளிதில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வகையில் சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனைப்போன்று, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், பொது சுகாதார கழிப்பறை கட்டுதல், பொது மயானத்தில் சுற்று சுவர் கட்டுதல், இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்தல், சாலை அமைத்தல், பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கம்பம் நகராட்சிப்பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கு, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி, சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம், ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கதிர்நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    க.விலக்கு பகுதியில் தமிழ்நாடு மருந்து சேவை கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மருந்து கிடங்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதற்கு வைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அதற்கான பதிவேடுகள், மருந்து, மாத்திரைகளில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், மருந்து கிடங்கின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மருத்துவ உபகர ணங்கள், அதன் செயல்பாடு கள், உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம்,

    மருந்து, மாத்திரைகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்தும், அங்கு செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தில் டாக்டர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சித்த சிகிச்சை முறை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    ராஜதானியில் செய ல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகளின் இருப்பு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கதிர்ந ரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் இம்மாதம் குடும்ப அட்டைதார ர்களுக்கு வழங்கிட வரப்பெற்ற முதல் தவணை அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் விபரம், விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை குறித்தும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    ×