search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christian"

    • மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பினர் ஜெப நடைபயணம் மேற்கொண்டனர்.
    • தஞ்சை மாவட்டத்தில் மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

    தஞ்சாவூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரங்கள் நீடித்து வருகிறது.

    இதனால் அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று தஞ்சை மிஷனரி தெருவில் அகில இந்திய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி ஜெப நடை பயணம் நடந்தது.

    இதற்கு கூட்டமைப்பின் சேர்மன் பிஷப் மோகன்தாஸ் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது :-

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதியும், சமாதானமும் ஏற்பட வேண்டும். இயல்பு நிலை திரும்ப வேண்டும். இதனை வலியுறுத்தி அனைத்து கிறிஸ்தவ கூட்ட மைப்பு சார்பில் ஜெப நடை பயணம் மேற்கொண்டோம்.

    மேலும் தஞ்சை மாவட்ட த்தில் கிறிஸ்துவ பணி மேற்கொண்ட மிஷனரிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

    இந்த ஜெப நடை பயணத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டி பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர் .

    • கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
    • 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளான தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது.

    தேவாலய கட்டிடம் கட்டி 10 முதல் 15 ஆண்டுகள் இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்க ளுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழி வுகளுடன் சிறுபான்மை யினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி 2 தவணை களாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினார் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
    • கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று சேல்சம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

    இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினார் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்ள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த திருச்சபைகளின் பரிதுரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரம், திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று சேல்சம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • நவம்பர் 2-ந் தேதியான இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
    • கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதியை கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கிறார்கள்.

    இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியான இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இருக்கும் புல், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்து சுண்ணாம்பு மற்றும் வர்ணம் பூசி சீரமைத்தனர். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, எரியவிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதனையொட்டி கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையில் கல்லறை திருநாள் காலை முதல் அனுசரிக்கப்பட்டது . சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் உறவினர்கள் தங்களது முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவியும் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் அஞ்சலி செலுத்தினர். மேலும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது . ஏழை எளிய மக்களுக்கு உதவிகளும் வழங்கி சென்றனர்.

    இங்கிலாந்தில் புற்றுநோயால் மரணம் அடைந்த தலைமை ஆசிரியை இறுதிச்சடங்கில், மாணவர்கள் தீட்டிய ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் தலைமை ஆசிரியை உடல் அடக்கம் செய்யப்பட்டது. #SueEast #Cancer #SchoolHeadteacher
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டில் பாத் என்ற இடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சூ ஈஸ்ட் (வயது 58). இவர் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் விரும்பும் பாணியில் பாடங்கள் கற்றுத்தந்து அவர்களின் அன்பை அமோகமாக பெற்றார்.

    இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியது. அதிலிருந்து மீள்வதற்கு அவர் போராடினார். ஆனால் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை.



    உயிருக்காக போராடியபோது அவர் தனது மாணவ, மாணவிகளுக்கு நெஞ்சை உருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர், தான் புற்றுநோயால் அவதியுற்று வருவதையும், தான் விரைவில் மரணம் அடையப்போவதையும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

    1952-ம் ஆண்டு சி.எஸ். லெவிஸ் எழுதி வெளியான ‘தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர்’ நாவலில் குறிப்பிட்டிருந்தபடி, “மரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமமானது” என சுட்டிக்காட்டி இருந்தார்.



    இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் அவரிடம் படித்த, படித்துக்கொண்டிருந்த சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    அத்துடன் தங்களுக்கு பிரியமான ஆசிரியை நிரந்தரமாக ஓய்வு எடுப்பதற்கான சவப்பெட்டியின் மீது அலங்கரிப்பதற்கு அவர்கள் வண்ண ஓவியங்களை தீட்டி, அந்த தாள்களை எடுத்து வந்திருந்தனர். அந்த தாள்கள், சவப்பெட்டியின் மீது ஒட்டி அலங்கரிக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனையும், உடல் நல்லடக்கமும் நடந்தது. அதில் மாணவ, மாணவிகள், சக ஆசிரியைகள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர். #SueEast #Cancer #SchoolHeadteacher
    ×