search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cholera outbreak"

    • காலரா தொற்றால் டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடும் பாதிப்புகள் ஏற்படும்.
    • கடந்த 6-ம் தேதி முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜாம்பியா நாட்டில் காலரா வியாதி பரவலாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,526 ஆக உள்ளது. 613 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றில் லுசாகா மாகாணத்தில் தொற்றுகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன.

    ஜாம்பியாவில் காலரா பெருந்தொற்று பரவலால் 35 லட்சம் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளனர்.

    அந்நாட்டில் மழைக்காலம் வரும் மே மாதம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதிப்புகளும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளம், காலரா பரவலை அதிகரிக்கச் செய்யும். காலரா தொற்றால் டயோரியா மற்றும் நீரிழப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

    இந்நிலையில், ஜாம்பியா நாட்டுக்குத் தேவையான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடங்கிய 3.5 டன் எடையிலான உதவி பொருட்கள் இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு 2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய தூதர் வழியே ஜாம்பிய அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    இதனை மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி உள்ளார்.

    கடந்த 6-ம் தேதி முதல் முறையாக மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது.
    • இதனால் நூற்றுக்கணக் கானோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்தது.

    இதனால் நூற்றுக்கணக் கானோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    அரசு மருத்துவமனை, சமுதாய நல வழி மையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவும் பிறப்பித்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் அரசு முறை பயணமாக இன்று காரைக்கால் சென்றனர். அவர்களை அமைச்சர் சந்திரபிரியங்கா வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு லோகேஷ்வரன், துணை கலெக்டர் ஆதர்ஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகள் அவர்களை வரவேற்று அழைத்துச் செனறனர்.

    திருநள்ளாறு சாலையில் வேலப்பர் அருகே உள்ள குடிநீர் தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல்- அமைச்சர் ரங்கசாமி குடிநீரில் குளோரினை அதிகமாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மருத்துவ ஆலோசனைகள் வழங்க கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது.

    காரைக்கால் மாவட்ட மக்கள் 04368 236565 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மருத்துவ ஆலோ–சனைகளை பெறலாம்.

    குடிநீரில் அசுத்த நீர் கலந்து வந்தால், இணைப்பில் பழுது இருந்தால் உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, 1077, 04368 228801, 227704 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

    • காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல்.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    பாதிக்கப்பட்ட நோயாளிகள் மாவட்ட அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில் சிலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

    காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

    காலரா பரவல் எதிரொலியாக காரைக்காலில் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். இந்த 3 நாட்கள் விடுமுறையின்போது பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×