search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengalpattu"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

    பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாணியம்பாடியில் காலை 7.35 மற்றும் 7.42 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. 

    • பூஞ்சேரியில் இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்
    • நரிக்குறவ பெண் அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.

    செங்கல்பட்டு:

    முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    'அஸ்வினி சேகர் உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது. அஸ்வினி சேகருக்கு ரூ.5 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் கடன் வழங்க ஆணை உள்ளது. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அஸ்வினி சேகர் தெரிவித்ததால், தாமதம் ஆகிறது. அஸ்வினி சேகருக்கு கடை ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு தேவை' என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நரிக்குறவ பெண் அஸ்வினி கூறியிருந்தார்.
    • புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை தீபாவளியன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், கோவில் அன்னதானத்தின்போது அவமதிக்கப்பட்ட நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினிக்கும் கடனுதவி ஆணையை வழங்கினார்.

    ஆனால், முதல்வர் வழங்கிய கடனுதவி தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என அஸ்வினி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அவர் பேசிய வீடியோ பதிவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

    "விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா?' என அண்ணாமலை கூறி உள்ளார்.

    நரிக்குறவ பெண் புகாரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் விளக்கம் அளித்துள்ளார். பூஞ்சேரியில் நரிக்குறவர் மற்றும் இருளர் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.5 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 54 இலவச வீட்டுமனை பட்டாக்கள், 35 சாதி சான்றிதழ்கள், 6 முதியோர் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சுற்றுவட்ட ரெயில் சேவை 10 நாட்களில் தொடங்குகிறது.
    சென்னை:

    சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை தொடங்க வேண்டும் என ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு மின்சார ரெயில்கள் வரப்பிரசாதமாக உள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-அரக்கோணம், கடற்கரை- அரக்கோணம் மார்க்கங்களில் தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை, ரெயில் நிலையத்துக்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் கடற்கரை- செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே சுற்று வட்ட ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேக்கு பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கான திட்டத்தை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தயார் செய்து ரெயில்வே வாரிய ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. அதன் பேரில் ரெயில்வே வாரியம் சுற்று வட்ட ரெயில்கள் இயக்க ஒப்புதல் அளித்தது.

    இதைதொடர்ந்து சென்னை கடற்கரை- திருமால்பூர், திருமால்பூர்- கடற்கரை மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல் கடற்கரை-காஞ்சிபுரம், காஞ்சிபுரம்- கடற்கரை மின்சார ரெயில்கள் திருமால்பூர் வரை நீட்டிக்கப்படும்.

    தற்போது தக்கோலம்- அரக்கோணம் இடையே ரெயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் சுற்றுவட்ட ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    இதனால் புறநகர் பயணிகள் கடற்கரையில் இருந்து நேரடியாக செங்கல்பட்டு- அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும். இதனால் புறநகர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    செங்கல்பட்டில் அதிமுக தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, திம்மராஜ குளம், ஜி.எஸ்.டி. சாலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையால் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதன் திறப்பு விழாவை வரும் நாட்களில் நடத்த அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் கீற்று கொட்டகை முழுவதும் தீப்பற்றி கரும் புகை ஏற்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த சேர்கள் மற்றும் பேனர்கள்எரிந்து நாசமானது.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    டி.எஸ்.பி. கந்தன் மற்றும் போலீசார் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் குமார் செங்கல்பட்டுபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் அலுவலகத்தை மர்ம கும்பல் தீ வைத்து எரித்து இருப்பதாக கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு அருகே விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. டிரைவர் கஜேந்திரன் பஸ்சை ஓட்டினார்.

    காஞ்சீபுரத்தை அடுத்த அரையம்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 38) கண்டக்டராக இருந்தார். சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியளவில் அரசு பஸ் செங்கல்பட்டு அருகே உள்ள ராஜாகுளிபேட்டை பகுதியில் வந்து கொண்டு இருந்தது.

    அப்போது முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது திடீரென பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க சீட்டில் இருந்த கண்டக்டர் சுதாகர் படுகாயம் அடைந்தார்.

    அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மேலும் 6 பயணிகளுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் புத்தேரி தெருவை சேர்ந்த கங்காதரன், மகேஷ்வரன், முருகவேல், உமா, நிர்மலா தேவி ஆகியோர் ஒரு காரில் திருச்செந்தூர் சென்றனர்.

    நேற்று அங்கிருந்து 5 பேரும் அதே காரில் காஞ்சீபுரம் திரும்பினார்கள் முருகவேல் காரை ஓட்டினார். இன்று காலை 7 மணியளவில் காஞ்சீபுரம்- வந்தவாசி சாலையில் வந்து கொண்டிருந்தது. மானாம்பதி கூட்டு சாலையில் வந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி லாரியின் கீழே சிக்கிக் கொண்டது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் வந்த முருகவேல், கங்காதரன், மகேஷ்வரன், உமா, நிர்மலாதேவி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    சென்னையில் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

    சென்னை-செங்கல்பட்டு, சென்னை-அரக்கோணம், சென்னை-கும்மிடிப்பூண்டி ஆகிய 3 வழித்தடங்களில் இருந்து புறநகர் பகுதி மக்கள் ரெயில்கள் மூலம் சென்னை வந்து செல்கின்றனர்.

    சென்னை-செங்கல்பட்டு இடையே தினமும் 224 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 5.5 லட்சம் பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள்.

    அதுபோல சென்னை- அரக்கோணம் இடையே தினமும் 151 புறநகர் ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் சுமார் 4.5 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே தினமும் 74 புறநகர் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 1.2 லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். மொத்தத்தில் தினமும் செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 11 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.

    நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் புறநகர் ரெயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. புறநகருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் பயணிகள் கூறி வருகிறார்கள்.

    இதையடுத்து கூடுதல் புறநகர் ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய தென்னக ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ரெயில்வே கால அட்டவணை வருகிற 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    புதிய கால அட்டவணைப்படி செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு புறநகர் ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக கடற்கரை-செங்கல்பட்டு இடையே ரெயில்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது சென்னை சென்ட்ரலில் ஆவடி, திருவள்ளூர் வரை பல்வேறு சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த புறநகர் ரெயில்சேவையை அரக்கோணம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் பஸ் ஸ்டிரைக் நடந்தபோது புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டது. அப்போது தென்னக ரெயில்வேக்கு கணிசமான அளவுக்கு வருவாய் கிடைத்தது. எனவே புறநகர் ரெயில் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

    வருகிற 15-ந்தேதி புதிய கால அட்டவணை வெளியிடப்படும் போது எந்த அளவுக்கு ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற முழு விவரம் தெரிய வரும்.
    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு, அக். 28-

    செங்கல்பட்டை அடுத்த கரும் பாக்கத்தை சேர்ந்த வர் சூர்யா (வயது 20). முள்ளிப் பாக்கம், புதுநக ரில் வசித்து வந்தவர் பிரதாப் (19). இருவரும் நண்பர்கள்.

    இன்று அதிகாலை 2 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள ஒரே மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறு மாறாக ஓடி சாலையோர பனை மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சூர்யா வும், பிரதாப்பும் பலத்த காயம் அடைந்து உயி ருக்கு போராடினர். அவர் களைஅவ்வழியே சென்ற வர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பல னின்றி சூர்யாவும், பிரதாப் பும் பரிதாபமாக இறந்த னர். இது குறித்து செங்கல் பட்டு தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மறைமலை நரை அடுத்து பனங்காட்டுரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவருடைய மகன் ஹேமச்சந்திரன் (14). இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு அரசு பஸ்சில் சென்றார். பள்ளி அருகே சென்றதும் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கினார்.

    அப்போது மாணவர் ஹேமச்சந்திரன் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிழந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் 90 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அதேபோல் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 47

    ஸ்ரீபெரும்புதூர் - 49.90

    செய்யூர் - 22.30

    திருக்கழுக்குன்றம் - 64.20

    மகாபலிபுரம் - 49.20

    திருப்போரூர் - 31.07

    வாலாஜாபாத் - 14.50

    திருவள்ளூர் மாவட்டதில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்து வரும் கன மழையால் சாலை முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருவள்ளூர் நகரில் எம்ஜிஆர் சிலை, ஜெயா நகர் செல்லும் சாலை, பஜார் வீதி உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது.கிராமப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழையினால் பொது மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி 57 அம்பத்தூர் - 51

    பூந்தமல்லி - 43

    திருவள்ளூர் - 41

    ஆர்.கே.பேட்டை - 15

    மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான 4 மாடுகள் நேற்று இரவு 11 மணிக்கு அதே தெருவில் சென்றது. அப்போது உயர் அழுத்த மின்வயர் திடீரென்று அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் 4 மாடுகளும் பலியாகின.

    செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால், அலுவலகங்களில் இருந்து பலர் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள மஹேந்திரா சிட்டி பகுதியில் இன்று மாலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வை உணர்ந்ததும் அங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வெளியே வந்து சாலைகளில் குவிந்தனர்.

    அங்குள்ள மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தன. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
    செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #TamilNaduCM
    சென்னை:

    செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு, பேசியதாவது:-

    இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழ்நாட்டில் தான் சர்வதேச தரத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் 60 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    இங்கு பட்டப்படிப்பு பிரிவு, பட்ட மேற்படிப்பு பிரிவு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுடன் கூடிய மருத்துவமனை, மாணவர் விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு, இதற்குத் தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இங்கே இயற்கையான சூழ்நிலையில், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறைகளான யோகா சிகிச்சை, இயற்கை உணவு சிகிச்சை, நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், காந்த சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, நிற சிகிச்சை போன்ற பல சிகிச்சைகள் அளிக்கப்படும்.

    தமிழ்நாட்டில் உள்ள 985 துணை சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக, 82 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப் படும்.

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனைத்து சிறப்பு துறைகளும் ஒரே அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்படும் வகையில், தற்போது கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்தில், 4-வது தளம் முதல் 6-வது தளம் வரை, மேலும் மூன்று தளங்கள் 55 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்திலேயே அனைத்து துறைகளும் செயல்படும் விதத்தில், தற்போது கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்திற்கு மேல், 5-வது தளம் முதல் 8-வது தளம் வரை, மேலும் நான்கு தளங்கள், 42 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சீர்காழி, திருத்தணி, ஓமலூர், திருச்செந்தூர், பரமக்குடி, பண்ருட்டி, ஆரணி ஆகிய அரசு வட்ட மருத்துவமனைகளுக்கு பெருகி வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்திட, 30 கோடி ரூபாய் செலவில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்படும். மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக் காக, பிரேக்கி தெரப்பியுடன் கூடிய சி.டி. ஸ்டிமுலேட்டர் மற்றும் பங்க்கர் கருவிகள் 22 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

    தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைத் திட்டத்தின் கீழ், 20 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் 19 வட்ட மருத்துவமனைகள் என 64 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வரும் அவசர கால சிகிச்சை மையங்களுக்கு, நவீன மருத்துவக் கருவிகள், 21 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். நடப்பாண்டில் 96 ஆயிரத்து 200 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம் ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். நடப்பாண்டில், காஞ்சீபுரம், நீலகிரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில், மாணவியர் விடுதிகள் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குனரகத்தின் கீழ், 12 அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், நடப்பாண்டில் எழும்பூர், பூந்தமல்லி மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள துணை செவிலியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, 17 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TNAssembly #TamilNaduCM 
    ×