search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Catholic Instrument"

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காதொலிக் கருவியை கலெக்டர் வழங்கினார்.
    • மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு ரூ.30 ஆயிரம் மதிப்பில் 6 மாற்றுதிறனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் நவீன காதொலிக் கருவிகள், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஆகியவைகளை வழங்கினார். மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.

    இந்த முகாமில் வங்கி கடனுதவி, உதவி உபகரணம், பராமரிப்பு உதவித்தொகை, உயர் ஆதரவு தேவைபடுவோருக்கான உதவித்தொகை மற்றும் பிற துறைகளின் மூலம் வழங்கப்படும் உதவி களுக்கென மாற்றுதிறனாளிகளி டமிருந்து 88 மனுக்கள் பெறப்பட்டது.

    முன்னதாக இளை யான்குடி வட்டத்திற்கு ட்பட்ட தன்னார்வலர் அப்துல்மாலிக் ஏற்பாடு செய்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு பனைவிதை மற்றும் மரக்க ன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல், வட்டாட்சியர் அசோக்கு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×