search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case record"

    • புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.
    • சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி அவர் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது பொம்மிடி என்ற பகுதியில் பி.பள்ளி பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக அண்ணாமலை சென்றார்.

    அவரை உள்ளே விடாமல் வாலிபர்கள் சிலர் வழி மறித்து தகராறு செய்தனர். மணிப்பூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி, நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும், அன்னையின் சிலைக்கு மாலை அணி வித்து வணங்கக்கூடாது என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொம்மிடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அண்ணாமலையுடன் தகராறு செய்து மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் போது அண்ணாமலையும் வாலிபர்களுடன் காட்டமாக பேசினார்.

    மணிப்பூர் சம்பவத்தை ஏன் இங்கு தொடர்புபடுத்தி பேசுகிறீர்கள். அது வேறு, இது வேறு என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் போலீசார் தலையிட்டதை தொடர்ந்து வாலிபர்கள் கலைந்து சென்றனர்.

    பின்னர் அண்ணாமலை கிறிஸ்தவ ஆலயத்துக்குள் சென்று வழிபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் 153-ஏ சாதி மத உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 504-அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், 505 (2), வழிபாட்டு தலங்களில் வெறுப்புணர்வோடு நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார்.
    • முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆமூர் மாரியம்மன் கோவிலை சேர்ந்வர் அரிகிருஷ்ணன் (வயது 20). இவருக்கு கடந்த 8 மாதத்திற்கு முன்பாக சந்தியா (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பெரிய செவலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது ஆமூர் செல்லும் பாதை அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனம் திடீரென எதிர்பாராமல் திரும்பியது. இதில் நிலைதடுமாறிய அரிகிருஷ்ணன், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பான புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அரிகிருஷ்ணனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 8 மாதத்தில் சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூரில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றார். வேப்பூர் கூட்ரோடு அருகே மணலை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன் நிலை தடுமாறி, டிப்பர் லாரியின் பின்னால் மோதினார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த இளவரசனை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இளவரசனை பரிசோதித்த டாக்டர்கள், இவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இது தொடர்பான புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
    • மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    நாமக்கல்:

    காந்திஜெயந்தியை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    ஆய்வு

    காந்திஜெயந்தியை முன்னிட்டு இவ்விதிமுறைகள் முைறயாக பின்பற்றப்படுகிறதா? என்பது தொடர்பாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை உதவி கமிஷனர் திருநந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன்படி ஓட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறைகள், கடைகள் உள்ளிட்ட மொத்தம் 82 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 60 நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் திருநந்தன் உத்தரவின் பேரில் 60 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • ஜோதி அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார்.
    • ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி ஜோதி (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள பண்ணை குட்டையில் இறங்கும்போது திடீரென்று கால் தவறி தண்ணீரில் விழுந்தார். இதில் தண்ணீர் முழ்கி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதி உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர்.
    • தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இன்று காலை ஒருவர் ஆற்றின் கரையோரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு திடீரென தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென அந்த நபர் மாயமானர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நபரை கூச்சலிட்டு கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர் நீரிலிருந்து வெளியில் வரவில்லை.

    இதனை தொடர்ந்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் மூழ்கியவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த நபர் தண்ணீரில் மூழ்கி இறந்தது கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த தொழிலாளி பன்னீர்செல்வம் (வயது 40) என்பது தெரிய வந்தது. ஆற்றில் மூழ்கி பலியான பன்னீர்செல்வம் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
    • புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.

    • பிரதிஷா கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை.
    • சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி ெரயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரதிஷா (19), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தாயார் லதா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் ெரயில்வே காலனியை சேர்ந்த சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை வலை வீசி தேடி வருகிறார்.


    • சிவக்குமார் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிஞ்சி ரமேடு பெரியார்தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (50). இவர் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் இரும்பு மேஜையின் டிராவை உடைத்து உள்ளே இருந்த ரூ.37,490 ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவக்குமார் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • விஜயகுமார் மனைவி ரஞ்சிதா உள்பட 5 பேர் நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைபேட்டையில் பொன்னையன் என்பவருக்கு சொந்தமான நாட்டு சர்க்கரை அரைக்கும் ஆலை உள்ளது. இங்கு கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் மனைவி ரஞ்சிதா (23) உள்பட 5 பேர் நேற்று நாட்டு சக்கரை அரைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ரஞ்சிதா ஆலையில் தேங்கிய குப்பைகளை ஆலையின் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் கொட்டு வதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கிருந்த நல்ல பாம்பு ரஞ்சிதாவின் வலது கையில் கடித்தது.

    இதில் மயங்கி விழுந்த ரஞ்சிதாவை அருகி லிரு ந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
    • இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி மகன் நாகராஜ் (வயது 42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு பணம் வரவில்லை. வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கூறி பிரச்சினை செய்து விட்டு அரசூர் - பண்ருட்டி சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்பு ரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பஸ் கண்ணாடியை உடைத்து பஸ் டிரைவர் கண்டக்டரை தாக்கினார்.

    பஸ் செல்லாதவாறு வயர்களையும் பிடுங்கி எறிந்தார். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்த நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நாகராஜை தேடி வருகின்றனர்.

    தியாகதுருகம் அருகே நிலத்தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியதுரை (25) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று மணிகண்டன் பிரச்சினைக்குரிய இடத்தை சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் திட்டி, தாக்கிக் கொண்டனர். இதில் மணிகண்டன் மற்றும் கலியதுரை ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கலியதுரை, அவரது தந்தை பெரியசாமி, தாய் கலியம்மாள் ஆகியோர் மீதும், இதே போல் கலியதுரை கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் ராதா, அம்சவள்ளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×