search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carlos Alcaraz"

    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.
    • இதில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் கார்லோஸ் 1-6 என முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது .

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் காலிறுதியில் வென்றனர்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே

    மோதினார். இதில் மெத்வதேவ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார். இதில் கார்லோஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சின்னரும், கார்லோசும் மோத உள்ளனர்.

    • கார்லோஸ் அல்காரஸ் கால்இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார்.
    • அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதியில் ஜெர்மனியை சேர்ந்த 12-வது வரிசையில் இருக்கும் அலெக்சாண்டர் சுவரேவை எதிர் கொண்டார். இதில் அல்காரஸ் 6-3, 6-2 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.


    இந்நிலையில் காலிறுதியில் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் சுவரேவ் மோதிய ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனி கண்டு களித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அல்காரஸ் அரைஇறுதியில் மெட்வதேவை 9-ந் தேதி சந்தித்தார். 

    • கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
    • இகா ஸ்வியாடெக் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    டொராண்டோ:

    கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் பென் ஷெல்டனை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-2, 7-5 என்ற செட்டில் இத்தாலியின் அர்னால்டியை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 4-6, 3-6 என்ற நேர்செட்டில் மான்பில்சிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), மெக்டொனால்டு (அமெரிக்கா), ஜானிக் சின்னெர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    2-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் பெட்ரா மார்டிச்சை (குரோஷியா) தோற்கடித்தார். இதே போல் கிவிடோவா (செக்குடியரசு), டேனிலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு), லேலா பெர்னாண்டஸ் (கனடா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்.

    லண்டன்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 

    கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து 29-வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    இதேபோல, பெண்கள் ஒற்றையரில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், கஜகஸ்தானின் ரிபாகினா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக உச்சிமுகர்ந்த செக் குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவா கிடுகிடுவென 32 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    விம்பிள்டன் தொடரின் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயினை சேர்ந்த 20 வயது வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

    இந்நிலையில் விம்பிள்டன் அமைப்பு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸை வாழ்த்தி விம்பிள்டன் அமைப்பு ஒரு போஸ்டரை வடிவமைத்துள்ளது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்று, கருப்பு நிற சட்டை அணிந்த ஒரு குழுவிற்கு மத்தியில் அல்காரஸ் நின்று அமைதி என்று கூறுவது போல வாய் மீது வைரல் வைத்துள்ளார்.


    அந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்ட விம்பிள்டன் அமைப்பு, விம்பிள்டனின் புதிய சாம்பியன் எனவும், அல்காரஸை மாஸ்டர் என குறிப்பிட்டுள்ளது. அந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

    இதில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோசனுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் பேபியன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றார். உலகின் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்று இன்று நடைபெற்றது.
    • இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

    பாரீஸ்:

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், குரோசிய வீரர் போர்னா கொரிக்குடன் மோதினார்.

    இதில் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் வென்று அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    • பார்சிலோனா ஓபனில் இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
    • இதில் சிட்சிபாசை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார்.

    இதில் கார்லோஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    • இரண்டாவது அரையிறுதியில் அல்காரஸ் இங்கிலாந்து வீரரை வென்றார்.
    • நாளை இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் சிட்சிபாசுடன் அல்காரஸ் மோதுகிறார்.

    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இங்கிலாந்தின் டான் ஈவன்சுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், கார்லோஸ் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    ×