என் மலர்

  நீங்கள் தேடியது "cancer"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீஸ் சீருடை அணிந்து, இடுப்பில் துப்பாக்கி, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த இரண்டு சிறுவர்களுக்கு, போலீஸ் ஏட்டுகள், அதிகாரிகள், ‘சல்யூட்’ அடித்தனர்.
  • சிறுவர்கள் நாள் முழுதும், போலீஸ் அதிகாரியாக பணியாற்றினர்.

  பெங்களூரு:

  தமிழகத்தின் ஓசூரைச் சேர்ந்தவர் மிதிலேஷ்(வயது 14), கேரளாவைச் சேர்ந்தவர் முகமது சல்மான்(14). இவர்கள் இருவரும் புற்றுநோயால் அவதிப்படுகின்றனர். 2 சிறுவர்களும், கர்நாடக மாநிலம், பெங்களூரின் கித்வாய் மற்றும் நாராயணா இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

  உயிருக்கு போராடும் சிறுவர்களுக்கு, எதிர்காலத்தில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவிருந்தது. இதை, 'மேக் எ விஷ்' என்ற தொண்டு அமைப்பு, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற, வடகிழக்கு மண்டல துணை கமிஷனர் பாபா முன்வந்தார்.

  இதையடுத்து சிறுவர்கள் இருவரும் சீருடை அணிந்து, துணை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, துணை கமிஷனர் நாற்காலியில் அமர்ந்து மகிழ்ந்தனர். அதன்பின் கோரமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். காக்கி சீருடை அணிந்து, இடுப்பில் துப்பாக்கி வைத்து, கையில் வாக்கி டாக்கியுடன் வந்த இவர்களுக்கு அதிகாரிகளும், 'சல்யூட்' அடித்து வரவேற்றனர்.

  இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்து, ஒரு நாள் முழுதும் அதிகாரியாக பணியாற்றினர். ரோந்து பற்றி தகவல் கேட்டனர். 'குற்ற சம்பவங்கள் நடக்காமல், மக்கள் பயமின்றி வாழும்படி பார்த்துக் கொள்ளுங்கள்' என, உத்தரவிட்டனர்.

  இதை ஏற்று போலீசார், 'சல்யூட்' அடித்தனர். துணை கமிஷனர் பாபாவும், இன்ஸ்பெக்டர் நடராஜும், அவர்கள் அருகிலேயே நின்று போலீஸ் நடைமுறைகள் குறித்து விளக்கினர். எந்த போலீசார், என்ன வேலை செய்கின்றனர் என்பதை விவரித்தனர். இறுதியில் அவர்களுக்கு பரிசளித்து வழியனுப்பினர்.

  போலீஸ் அதிகாரியின் இந்த மனிதநேய செயலுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

  இதுபற்றி தொண்டுநிறுவனத்தின் மேற்பார்வையாளர் அருண் குமார் கூறுகையில், சில குழந்தைகள் லேப்டாப் கேட்கிறார்கள், ஒரு பிரபலத்தை சந்திக்க அல்லது எங்காவது அழைத்துச் செல்லுங்கள். இதுவரை 77,358 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி உள்ளோம் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காரைக்குடி பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
  • காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார்.

  காரைக்குடி

  காரைக்குடி முடியரசன் சாலையில் உள்ள பிரபு பல் மருத்துவமனையில் இலவச வாய் மற்றும் வாய்வழி புற்றுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

  காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில் வாய்வழி மற்றும் மாக்சில்லோ பேஷியல் நோயியல் நிபுணர் டாக்டர் அருணா சிவதாஸ் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டார்.

  இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டனர். 20 பேருக்கு ஆய்வகத்தில் பயாப்ஸி சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பிரபு டெண்டல் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் பிரபு, டாக்டர் பாஸ்கர சேதுபதி, மருத்துவர்கள் அம்ரிதா, பிரியங்கா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஹரிதாஸ், கண்ணன், தெய்வானை, கலா காசிநாதன், முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் காரை சுரேஷ், அப்துல் கலாம் கிட்ஸ் பள்ளி தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  காரைக்குடி பகுதியில் இதுபோன்ற வாய் புற்றுநோய் இலவச கண்டறியும் முகாம் நடந்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே.
  • பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

  பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம்.

  மார்பக புற்றுநோய் பெண்களிடையே அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். 80 சதவீத மார்பகக் கட்டிகள், புற்றுநோயாக இருப்பதில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதாகும். பெண்கள் தங்கள் மார்பகங்களை மாதம் இருமுறை சுய பரிசோதனை செய்வதன் மூலம், ஏதேனும் மாறுதல்கள் அல்லது புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். இது தொடர்பான மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் விரைவில் குணப்படுத்த முடியும் என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் தமிழ்செல்வி.

  சுய பரிசோதனை செய்யும் முறை:

  * கண்ணாடி முன் நின்று கொண்டு மார்பகங்களை கவனிக்கவும். கைகளைத் தலைக்கு மேல் தூக்கிய நிலையிலோ அல்லது இடுப்பின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டோ மார்பகங்களை சற்று முன்னிறுத்தி உற்று நோக்கவும். மார்பகங்களில் தடிப்பு, வீக்கம், மரு, நிற மாறுபாடு மற்றும் மார்பக காம்புகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

  * கைவிரல்களைத் தட்டையாக வைத்துக் கொண்டு, நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ மார்பகத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேலும் கீழுமாக அழுத்திப் பார்க்கவும். வட்டவடிவத்தில் மார்பகத்தை சுற்றியும், மார்பக காம்புகளையும், அக்குள் பகுதி தொடங்கி அழுத்தியும், தடவியும் பார்க்கவும். இதன் மூலம் கட்டிகள், வீக்கங்கள் மற்றும் மார்பகக் காம்பில் ஏதேனும் திரவம் ரத்தம் கலந்த நிலையில் வெளியேறுகிறதா எனவும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

  * நின்று கொண்டு செய்த அதே சுய பரிசோதனையை, கீழே நேராக நிமிர்ந்து படுத்தவாறும் செய்து பார்க்கவும். வலது தோளுக்கு கீழே தலையணை வைத்துக்கொண்டு, வலது கையை தலைக்கு கீழே வைத்தபடி, வலது மார்பகத்தை இடது கை கொண்டு பரிசோதிக்கவும். இவ்வாறு இடது மார்பகத்தையும் பரிசோதிக்கவும்.

  பரிந்துரைகள்:

  * மார்பக சுய பரிசோதனையை மாதவிடாய் காலத்தின் இறுதி நாட்களில் செய்வது சிறந்தது. பெண்கள் 20 வயது முதல் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.

  * இந்த சுய பரிசோதனையின் மூலம் மார்பகங்கள் உங்களுக்கு பரிச்சயமாகி விடுவதால், மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் எளிதில் தெரிந்துகொண்டு, மருத்துவரை அணுகி தீர்வு காண முடியும்.

  * 29 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

  * 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறை 'மெமோகிராம் பரிசோதனை' செய்து கொள்வது நல்லது.

  * புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் 80 சதவீதம் குணப்படுத்த முடியும். சுய பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம்.
  • ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு.

  கீமோதெரபி இல்லை. ரேடியேசன் இல்லை. சத்திர சிகிச்சை இல்லை. எதுவும் இல்லை. சாதாரணமான ஒரு மருந்து கொடுக்கப்பட்டு புற்று நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு விதப் புற்றுநோய்களையுடைய 14 பேருக்குச் செய்த ஆராய்ச்சியின் முடிவு, மருத்துவ உலகையே துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது.

  மருத்துவ வரலாற்றிலேயே புற்றுநோய் நூறு சதவீதம் முழுமையாக முதன்முறையாக நீக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு. ஆனால், இந்த மருந்து அனைத்துவிதப் புற்று நோய்களையும் இல்லாமல் செய்திருக்கிறது என்பது நம்ப முடியாத அதிசயம்.

  'Dostarlimab' என்னும் மருந்து 500 மில்லிகிராம் அளவில் மூன்று வார இடைவெளியில் ஆறு மாதங்களுக்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்க் கலங்கள் முழுமையாக இல்லாமல் அழிக்கப்பட்டன. வேறு எந்தவித வைத்தியமும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. நிஜமாகவே மகிழ்ச்சியடைய வேண்டிய அற்புதமான நிகழ்வு இது. 'அறிவியல் நின்று வெல்லும்'

  -ராஜ்சிவா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சிகிச்சைக்கு பின், எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

  இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.

  இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்தனர். அவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து கொடுக்கப்பட்டதில் குணமடைந்துள்ளனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்றும் டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள டாக்டர் ஆண்ட்ரியா செரிக் கூறியதாவது:-

  இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து உடலில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என 6 மாதங்களுக்கு செலுத்தப்படும். பொதுவாக புற்றுநோய் செல்கள் உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதற்காகமுகமுடி போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய் செல்களை கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த முகமடியை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக புற்றுநோய் செல்களை அழிக்க வழி செய்கிறது.

  இதனால் இயற்கையாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

  மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது.

  இவ்வாறு ஆண்ட்ரியா செரிக் கூறியுள்ளார்.

  இந்த மருந்து மூலம் சிகிச்சை எடுக்க இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சம் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புற்றுநோய் முற்றிய நிலையில் ராஜஸ்தான் சிறையில் கம்பிகளுடன் இறுதி நாட்களை எண்ணிவரும் விசாரணை கைதி தாயின் மடியில் சாவதற்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
  புதுடெல்லி:

  ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் கள்ளநோட்டு வைத்திருந்ததாக கடந்த ஆண்டில் போலீசார் கைது செய்தனர்.

  ஜெய்ப்பூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வாயில் ஏற்பட்ட புற்றுநோய் மிகவும் முற்றி மூன்றாவது நிலையை எட்டியுள்ள நிலையில் கடந்த 8 மாதங்களாக தினந்தோறும் ‘ரேடியோதரபி’ எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  என் மீதான வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட பல மாதங்கள் ஆகலாம். அதற்குள் புற்றுநோயின் தாக்கத்தாலும் மன உளைச்சலிலும் பைத்தியமாகி நான் இறந்துவிட நேரிடலாம். எனவே, உடல்நிலை கருதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

  கடைசியாக ராஜஸ்தான் ஐகோர்ட்டும் தனது ஜாமீன் மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்து விட்டதால் விரக்தியின் விளிம்பு நிலைக்கு சென்றுவிட்ட அந்த கைதி, ‘எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. வாழ்நாளில் எஞ்சியிருக்கும் சில நாட்களையாவது குடும்பத்தார், உறவினர்களுடன் கழித்து விட்டு, என் தாயாரின் மடியில் தலைவைத்து சாக விரும்புகிறேன்.

  எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என அந்த கைதி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருதா போஸ் ஆகியோரை கொண்ட அமர்வு மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஜூன் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராஜஸ்தான் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.
  யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பை புற்றுநோய் உருவாகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

  பெரும்பாலான சந்தர்ப்பங்களில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்படும். கருப்பை புற்றுநோய் இருந்தால் பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அசாதாரண எடை இழப்பும் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறி.

  இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் அறியவில்லை.

  கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.  1. அசாதாரண ரத்தப்போக்கு

  கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

  2. சிறுநீர் கழிப்பதில் சிரமம்

  சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும்.

  3. உடலுறவின்போது வலி

  பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. மேலும் ப்ரோக்கோலி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

  ப்ரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள் அதிகளவில் இருக்கின்றன. கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) ஆகியவையும் இருக்கின்றன. ப்ரோக்கோலி யின் சிறிய பூ போன்ற பகுதியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இருந்தாலும் இதன் இலைகளிலும் தண்டுகளிலும் அதிக அளவிலான பினாலிக் (Phenolic), ஆன்டிஆக்ஸிடன்ட், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல மூலக்கூறுகள் அடங்கியுள்ளன. அதனால் இப்போது பலரும் ப்ரோக்கோலியின் இலைகளையும் தண்டையும் உணவாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.  

  புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் அனைத்து அம்சங்களையும் கொண்டது ப்ரோக்கோலி. இதில் அதிகளவில் இருக்கும் சல்ஃபோரபேன் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றல் படைத்தது. சிறிய அளவில் இருக்கும் ப்ரோக்கோலி  பெரிய காய்களைவிடச் சிறந்தது. இளசான ப்ரோக்கோலி  புரோஸ்டேட் புற்றுநோய், பெண்களிடம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்த் தாக்குதலைத் தடுக்கிறது என சில ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.

  ப்ரோக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

  கால்சியம் குறைபாடே அதிக ரத்த அழுத்தத்துக்குக் காரணம். ப்ரோக்கோலி  உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும். இதிலிருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்; இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.  ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவுபவை.ப்ரோக்கோலி , நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

  எலும்புகளின் உறுதிக்குக் கால்சியம் அவசியம் தேவை. கால்சியம் சத்து நிறைந்தது ப்ரோக்கோலி. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.

  கொழுப்புச்சத்துகள் இல்லாத உணவுப் பழக்கத்துக்கு வைட்டமின், மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளே சிறந்தவை. அந்த வகையில், கலோரிகள் குறைந்த உணவான ப்ரோக்கோலியை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அரை கப் ப்ரோக்கோலியில் 25 கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன.

  நாம் சாப்பிடும் உணவில் இரும்புச்சத்துக் குறைந்தால், ரத்த செல்களின் அளவு குறையும். இதனால் ரத்தச்சோகை ஏற்படும். ப்ரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க உதவும். தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால், ரத்தச்சோகை வராமல் தடுக்கலாம்.

  ப்ரோக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதிலிருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்துகள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும். இதை ஆவியில் வேகவைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். சமைத்த ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும் குறைந்துவிடும். அதனால் பச்சைக் காய்கறியாக, அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும். சிலருக்கு இதனால் அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் மட்டும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கவும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரே, வாழ்க்கையில் இனி பயமே இல்லை என்று கூறியிருக்கிறார். #SonaliBendre
  தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் சொல்கிறார்:-

  புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.  அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த வடுக்கள் உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.

  கடவுள் எதற்காக என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். எத்தனையோ எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற உணர்வு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனிமேல் எனது வாழ்க்கையில் பயம் என்பது இல்லை.” இவ்வாறு சோனாலி பிந்த்ரே கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.
  குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையினருக்கு புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. சுற்றுச்சூழலின் பங்கு 60 சதவீதம் இருக்கிறது.

  எதனால் வருகிறது புற்றுநோய்? என்று கேட்கலாம். புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கின்றனர். சிகரெட், பீடி, போதைபொருட்கள், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.

  சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் நோய்களின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியும்.

  சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. சில உணவு வகை நோய்களின் பாதையில் கொண்டுபோய் நம்மை நிறுத்திவிடும். அதனால் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் குறித்த தெளிவு இருந்தால்தான், நோயற்ற வாழ்வு சாத்தியம். மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைக்கும் முன்னுரிமை தர வேண்டும்.  பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  சிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளைத்தான் விரும்பி சாப்பிடுவார்கள். இது நாக்குக்கு நல்லதாக இருந்தாலும், உடலுக்கு உகந்தது அல்ல. அதனால் எண்ணெயில் பொரித்த உணவை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவு பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும்.

  சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதும் தவறு. ஒருமுறை சமைத்த பொருளை மீண்டும் அடுப்பில் ஏற்றுவது, நோய்க்கு நாமே அழைப்பு விடுப்பதற்கு சமம். வழக்கமாக, நோயின் தாக்கம் தீவிரமடைந்த பிறகே பலர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.

  புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைக் கண்டதுமே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிகிச்சையை எளிமையாக்கும், உடல்வலியையும் குறைக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள்.
  பெண்கள் உடல் சார்ந்த சில நோய்களையும், ஆரோக்கியப் பிரச்சனைகளையும் அதனால் அதிகரிக்கும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அப்படி பெண்கள் சந்திக்கும் சில நோய்களில் சினைப்பை புற்றுநோயும் ஒன்று. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உடலின் எந்த உறுப்பையும் விட்டுவைக்காமல் தாக்கும் குணம் கொண்டது புற்றுநோய்.

  அப்படி பல்வேறு வகைகளும், பெயர்களும் கொண்ட புற்றுநோய்களில் பாலினம் சார்ந்து தாக்கும் புற்றுநோய்களும் சில உண்டு. குறிப்பாக, பெண்களின் உடல் அமைப்பு காரணமாகவும் சில புற்றுநோய்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமானது கருப்பை, கருப்பை வாய் மற்றும் சினைப்பைபுற்றுநோய்கள். இதில் பெண்களின் உயிரையே பறிக்கும் அளவு அச்சுறுத்தும் காரணியாக சினைப்பை புற்றுநோய் உலக அளவில் 5-வது இடத்தில் இருக்கிறது.

  பெரும்பாலான சினைப்பை புற்றுநோய், சினைப்பையின் புற உறை காரணமாக வருகிறது. சில தீவிர நிகழ்வுகளில் இடுப்பறைக்குள் உள்ள பிற உறுப்புகளான அண்டக்குழாய், கருப்பை, சிறுநீர்பை, பெருங்குடல் போன்ற இடங்களுக்கும் பரவகாரணமாகிறது .

  சினைப்பை புற்றுநோய்க்கான காரணங்கள்?

  சினைப்பை புற்றுநோயை விளைவிக்கக்கூடிய காரணிகளில் குடும்ப வரலாறு(Family history) முக்கிய பங்கு வகிக்கிறது. நெருங்கிய சொந்தத்தில் இருக்கும் ஒருவர் சினைப்பை புற்றுநோய் அல்லது மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கும் பட்சத்தில், இவர்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது.

  மரபியல் காரணியாக, BRCA1 மற்றும் BRCA2 வகை மரபணு மாற்றம் ஏற்படும் பெண்கள் பாதிப்படையக்கூடிய வாய்ப்பு 50 சதவீதம் வரை இருக்கிறது. பொதுவாக, 65 வயதுக்கு அதிகமாக இருக்கும் பெண்கள், குழந்தைப் பேறின்மை அல்லது குழந்தைப்பேறு சம்பந்தமான சிகிச்சைகள் மேற்கொண்ட பெண்கள் மற்றும் மார்பகப்புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் வர அதிகம் வாய்ப்புள்ளது. மேலும், ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலமும் சினைப்பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படும் ஆபத்து கொஞ்சம் அதிகரிக்கிறது.

  இதுதவிர, பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதும் சினைப்பை புற்றுநோய்க்கு காரணமாகிறது. சினைப்பை புற்றுநோய்க்கான தோற்றங்களும், அறிகுறிகளும் ஆரம்ப நிலையில் அடிக்கடி மறைந்து விடும் தன்மையுள்ளவை அல்லது மிக நுட்பமாகவும் தோன்றலாம். இதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது, காலம் கடந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.

  இடுப்பு வளையத்தில் வலி, முதுகு வலி, உடலுறவின்போது வலி, உடலின் கீழ் பகுதியில் வலி ஆரம்ப நிலையில் தோன்றும் அறிகுறிகள்.புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்படத் தொடங்கும். எப்பொழுதும் உப்புசமாக இருப்பதாக உணர்தல், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் நலமற்று உணர்தல், வீக்கமான வயிறு, சிறிது உணவு உண்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு அல்லது பசியின்மை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தேவை அல்லது சிறுநீரை வழக்கத்துக்கு மாறாக கட்டுப்படுத்த முடியாமை, மூச்சுத்திணறல் போன்றவையின் மூலம் கண்டுகொள்ளலாம்.

  சினைப்பை புற்றுநோய் இருப்பதை பரிசோதனையில் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

  முதலில் CA125 என்ற புரதத்தின் அளவை பரிசோதனை செய்து, பின்னர் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்வது. பரிசோதனையின் முடிவுகள் சினைப்பை புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தால் நோயாளி ஒரு மகளிர் நலவியல் புற்றுநோய் நிபுணரை அணுகி, மற்ற பல தேவையான  பரிசோதனைகளையும் கண்டறியும் முறைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

  சினைப்பை புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன?

  சினைப்பை புற்றுநோய் சிகிச்சைக்கான வழிமுறைகள் நோயின் தன்மை மற்றும் பாதிப்பு சார்ந்து இருக்கும். புற்றுநோய் நிபுணர் ஒற்றைமுறை அல்லது பல்வேறு சிகிச்சை முறைகள் இணைந்த ஒரு சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றுவது பொதுவான அணுகுமுறை.

  சில தீவிர நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு கர்ப்பப்பை, அண்டக்குழாய், கருப்பை, கருப்பை. அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகள் மற்றும் உதரமடிப்பு ஆகியவற்றையும் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதிருக்கும். இது முழு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்று அறியப்படும். கீமோதெரபி சிகிச்சையில் நோயாளிகளுக்கு குறிப்பாக கார்போப்ளாடின் மற்றும் பாக்லிடாக்செல் ஆகிய மருந்துகளின் கலவை நரம்புகள் ஊடாக செலுத்தப்படும்.

  புற்றுநோய் அணுக்களுக்கு ஈஸ்ட்ரோஜென் கொண்டு செல்லப்படுவதை தடுத்து அவற்றின் வளர்ச்சியை குன்றச்செய்ய ஹார்மோன் சிகிச்சை சேர்த்து செய்யலாம்.இனப்பெருக்க அமைப்பில் புற்றுநோய் இருப்பதற்கான சுவடுகள் தென்பட்டால் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் சில சமயங்களில் கதிர்வீச்சு சிகிச்சையை பயன்படுத்தலாம், அனால் அதை மட்டும் தனியாக பயன்படுத்தக் கூடாது!

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print