search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business Loan"

    • தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு நடந்தது.
    • தமிழக அரசின் மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் , முதலீட்டார்கள் முன்னிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த இலக்கீடு தஞ்சை மாவட்ட த்திற்கு 667 நபர்களுக்கு ரூ.1000 கோடி நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    இதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடங்கு விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கிட மாபெரும் கடன் வழங்கு விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.

    அப்போது அவர் மாவட்ட தொழில் மையத் திட்டங்களை விளக்கியதோடு தமிழக அரசு மானிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முதலீட்டு மானியமாக தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி வரை கடனுதவி பெற்ற தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் 5 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை வளர்க்க வும் முதலீட்டாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்த வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் 23 பேரிடம் இருந்து ரூ.697 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கடன் வழங்கு முகாம் மூலமாக 512 பேருக்கு ரூ.121.93 கோடி கடன் வங்கியில் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஆல்வின் ஜோசப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் நாயர், இந்தியன் வங்கி மேலாளர் ஆகியோர் வங்கி திட்டங்களை விளக்கினர்.

    இதில் மகளிர் திட்ட உதவி இயக்குனர், தாட்கோ மேலாளர், தொழில் முனைவோர்கள், பயனாளிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மதுரை கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற 17-ந் ேததி முதல் அடுத்த மாதம் 2-ந் ேததிவரை நடைபெறுகிறது. இதில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள். 0452-2533331, 87780 40572, 9444396842 மூலமாக தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×