என் மலர்

  நீங்கள் தேடியது "BSP"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது.
  • ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

  புதுடெல்லி:

  ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

  இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

  இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.

  இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராம்வீர் உபாத்யாய் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார்.
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலத்தின் சிகந்த்ரா ராவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவருமான ராம்வீர் உபாத்யாய் மீது கட்சி தலைமையிடத்தில், கட்சி விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி குற்றம் சாட்டப்பட்டது.

  இந்த புகாரின் அடிப்படையில் ராம்வீர் இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பொது செயலாளர் மேவலால் கவுதம் கூறுகையில், ‘மாநில சட்ட மன்றத்தில் கட்சியின் தலைமை கொறடா பொறுப்பில் இருந்து ராம்வீர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

  ஆக்ரா, பாதேக்பூர் சிக்ரி, அலிகிராக் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தின்போது கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டுள்ளார். இதனால் உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களுடன் மாயாவதி சந்திக்க எந்த திட்டமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
  லக்னோ:

  இந்தியாவின் 17-வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

  வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

  ஆனால், டெல்லியில் இன்று மாயாவதி எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மாட்டார் என பகுஜன் சமாஜ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு டெல்லியில் இன்று எந்த நிகழ்ச்சியோ, சந்திப்புகளோ இல்லை என்றும், லக்னோவில்தான் இருப்பார் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் மிஷ்ரா கூறியுள்ளார்.  எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஆர்வம் காட்டி வரும் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சரத் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் லக்னோவில் மாயாவதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
  லக்னோ:

  பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

  இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

  இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019 #BSPSupporter

  புதுடெல்லி:

  உத்தரபிரதேசம் மாநிலம் ஷிகர்பூரை அடுத்த அப்துல்லாபூர் ஹூல சேன் கிராமத்தைச் சேர்ந்தவர் பவன்குமார் (25).

  இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்.

  நேற்று 2-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் பவன்குமாரின் ஊர் அடங்கிய புலந்த்சாகர் தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஓட்டு போட பவன்குமார் வாக்குச்சாவடி மையத்துக்கு சென்றார்.

  அப்போது சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சி வேட்பாளர் யோகேஷ் வர்மாவின் சின்னத்தை அழுத்துவதற்கு பதிலாக பா.ஜனதாவின் தாமரை சின்னத்தை அழுத்தி விட்டார்.

  பா.ஜனதா வேட்பாளரும், தற்போதைய அத்தொகுதி எம்.பி.யுமான போலாசிங்குக்கு ஓட்டு போட்டு விட்டார். தான் தவறாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டதால் பவன்குமார் அதிர்ச்சியும், வெறுப்பும் அடைந்தார்.

  அவரது ஆத்திரம் திடீரென்று தாமரை சின்னத்தை அழுத்திய தனது கை விரல் மீது திரும்பியது.

  இதனால் கைவிரலை துண்டிக்க முடிவு செய்தார். உடனே கத்தியால் கை விரலை வெட்டி தண்டித்து கொண்டார்.

  அதன்பின் பவன்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறும் போது, “தான் தவறுதலாக பா.ஜனதாவுக்கு ஓட்டு போட்டு விட்டேன். எனது தவறுக்கு தண்டனையாக கை விரலை துண்டித்து கொண்டேன்” என்று கூறி உள்ளார். #LokSabhaElections2019 #BSPSupporter

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். #Loksabhaelections2019 #ElectionCommission
  புதுடெல்லி:

  பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

  வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

  அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


  காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.

  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன. #Loksabhaelections2019 #ElectionCommission
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி ரபேல் ஊழலில் ரகசிய ஆவணங்களை மறைக்கும் காவலாளி என மோடியை சாடியுள்ளார்.#Mayawati #BSP #PMModi #BJP
  லக்னோ:

  உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் மற்றும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளன.

  இந்நிலையில் பிரதமர் மோடி, பாராளுமன்ற தேர்தலையொட்டி இணையதள பயன்பாட்டளர்களை கவரும் முனைப்புடன் கடந்த வாரம் 'காவலாளி (சவுகிதார்) நரேந்திர மோடி ' என தனது டுவிட்டர் பக்கத்தில் பெயர் மாற்றம் செய்தார்.

  இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள், பாஜகவை சேர்ந்த முதல் மந்திரிகள், மாநில மந்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பாஜக பிரமுகர்களும் மோடியைப் பின்பற்றி தங்களது டுவிட்டர் கணக்குகளில் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘காவலாளி’ (சவுகிதார்) என்ற அடைமொழியை இணைத்துள்ளனர்.  இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி, இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

  பிரதமர் மோடி மற்றும் அவரது மந்திரிகள் என அனைவரும் காவலாளி (சவுகிதார்) என தங்கள் பெயரினை மாற்றியுள்ளனர். இந்த காவலாளிகள் ரபேல் ஊழல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதை மறந்துள்ளனர். இந்த ஆவணங்கள் தேர்தல் மற்றும் தங்கள் கட்சியின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக மறைக்கப்பட்டுள்ளன.

  இது போன்ற காவலாளி நம் நாட்டிற்கு நிச்சயம் தேவையா? பாஜக தலைவர்கள் விரும்பும் எந்த பாணியில் வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் பெயரை மாற்றியது போல், சட்டம் ஒழுங்கினை காக்கும் காவலாளியாக இருக்க வேண்டும். மக்கள் இதையே விரும்பி ஏற்பார்கள்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Mayawati #BSP #PMModi #BJP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
  லக்னோ:

  பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

  இதுதொடர்பாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என குறிப்பிட்டார்.  இதேபோல், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். நம் நாட்டிற்கு சகோதரி மாயாவதிஜி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அட்டகாசம் செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகனை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
  புதுடெல்லி:

  டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

  இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டேவின்  மகன் ஆஷிஷ் பாண்டே என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த் ஆஷிஷ் பாண்டே டெல்லி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.  இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

  இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என மாயாவதி தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி 35 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.  இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல் மந்திரியாக பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில்
  மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையாலான கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.#Congress #BSP

  போபால்:

  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறுகிறது. இதைதொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

  மத்திய பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மத்திய பிரதேச சட்டசபையில் 230 தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 17-ந் தேதி போபால் மற்றும் விகிசாவுக்கு வருகை தருகிறார். அதற்கு முன் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் மாநில தலைவர் கமல் நாத் மத்திய பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

  பின்ட், மொரீனா, ரேவா மற்றும் சாத்னா பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. ஏனெனில் அவை உத்தரபிரதேச மாநிலத்தின் எல்லையில் மிக நெருக்கத்தில் உள்ளது.

  ராகுல்காந்தி வருகையின் போது 70 முதல் 80 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான தீவிர முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

  நீண்ட காலமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஆன கூட்டணி கை கொடுக்கும் என நம்புகிறது.

  அதற்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகிறது. தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பலமான கூட்டணி அமைக்க பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது என அக்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

  பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்குகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்காது. மேலும் அக்கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

  இதற்கிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6.42 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன. பா.ஜனதாவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன.

  மத்திய பிரதேசத்தில் மொத்தம் 81 தனி தொகுதிகள் உள்ளன. அவற்றில் தற்போது பா.ஜனதா வசம் 58 தொகுதிகள் உள்ளன. காங்கிரசிடம் 19 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 தொகுதிகளும் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo