என் மலர்

  நீங்கள் தேடியது "BJP candidates"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சி முன்னிலையில் உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்தங்கி உள்ளது.

  7 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதில் சந்திர பிரகாஷ் ஜோஷி (சித்தோர்கர்), நிகல் சந்த் (கங்காநகர்), தேவ்ஜி பட்டேல் (ஜலூர்), துஷ்யந்த் சிங் (ஜல்வாரா பரன்), பிபி சவுத்ரி (பாலி) மற்றும் தியா குமாரி (ராஜ்சமந்த்) ஆகிய 6 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். பில்வாரா தொகுதி பாஜக வேட்பாளர் சுபாஸ் பகேரியா 214184 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.  ஜோத்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், பாஜக வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விட 64341 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த மன்வேந்திர சிங், ராஜ்புத் தொகுதியில் 87145 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கைலாஷ் சவுத்ரி முன்னிலையில் உள்ளார்.

  ஜெய்ப்பூர் (ஊரகபகுதி) தொகுதியில் மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் 91493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதேபோல் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால் (பிகானர்) 86919 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாரதிய ஜனதா கட்சி இதுவரை இல்லாத அளவில் பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகிறது. #Loksabhaelections2019 #BJP
  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆட்சியை பிடிப்பதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

  இரு தேசிய கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளையும் விட்டு கொடுத்துள்ளன.

  இதற்கிடையே பாராளுமன்றத்தில் 272 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கையும் பா.ஜனதாவும், காங்கிரசும் கொண்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

  நாடு முழுவதும் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சுமார் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அதையும் விட அதிகமான இடங்களில் களம் இறங்கி உள்ளது.

  பாரதிய ஜனதா கட்சி கடந்த 1999-ம் ஆண்டு 339 தொகுதிகளில் போட்டியிட்டது. 2004-ம் ஆண்டு 364 தொகுதிகளில் போட்டியிட்டது. 2009-ம் ஆண்டு 433 தொகுதிகளில் போட்டியிட்டது.

  2014-ம் ஆண்டு 428 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த ஆண்டு அதையும் விட அதிகமாக வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்தனர்.

  இதுவரை பா.ஜனதா சார்பில் 408 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 135 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டி உள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.

  பா.ஜனதா இன்னும் 30 முதல் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிவிக்கும்போது பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 440-ஐ எட்டும்.

  பா.ஜனதா வரலாற்றில் இவ்வளவு அதிக தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

  டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. அந்த 7 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. உத்தரபிரதேசத்திலும் இன்னும் 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்.

  அதுபோல மத்திய பிரதேசத்திலும் மிக முக்கிய தொகுதிகளான இந்தூர், போபால் உள்பட 8 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. பஞ்சாபில்-3, அரியானாவில்-2, ராஜஸ்தானில் ஒரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்க வேண்டியது உள்ளது.

  ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணி அமையாததால் பா.ஜனதா கட்சி அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனால்தான் இந்த தடவை பா.ஜனதா வேட்பாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. #Loksabhaelections2019 #BJP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 184 பேரில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். #LSPolls #BJP
  புதுடெல்லி:

  கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர் இந்திய அரசியலில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. என முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

  இவ்வாறு குற்றவாளிகள் அரசியலில் பதவிகளை பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

  நாட்டில் உள்ள பல கட்சிகளும் கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

  இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பல கட்சிகள் கிரிமினல் குற்றவாளிகளை வேட்பாளராக அறிவித்து உள்ளன.

  பாரதிய ஜனதா கட்சியிலும் கூட இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பலர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர்.

  தற்போது பாரதிய ஜனதா தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர்.

  அவர்களில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 184 பேரில் 78 பேர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆவர்.

  ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு அடிப்படையில் இந்த 78 பேரில் யார்-யார்? கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன் படிதான் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்கு உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

  மற்ற 106 பேரில் யார்-யார் கிரிமினல் குற்றவாளிகள் என்பது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தான் தெரிய வரும்.

  35 பேரில் மராட்டிய மாநிலம் சந்திரபூர் தொகுதியில் போட்டியிடும் ஹன்ஸ் ராஜ் கங்காராம் மீதுதான் அதிக வழக்கு உள்ளது. அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஹன்ஸ் ராஜ் கங்காராம் தற்போது மத்திய உள்துறை இணை மந்திரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  ஒடிசா மாநிலம் பால சோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

  பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மீது 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய தலைவர் சாக்‌ஷி மகராஜ் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவில் வெற்றி பெற்ற 282 பேரில் 98 பேர் மீதும், காங்கிரசில் வெற்றி பெற்ற 44 பேரில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. #LSPolls #BJP #BJPCandidates
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #Congress #BJP
  சென்னை:

  தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

  தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

  தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் ஒப்படைத்தார். இதுபோல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை கட்சி மேலிடத்தில் கொடுத்து இருக்கிறார்.

  காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய காங்கிரஸ் செயற்குழு நேற்று பரிசீலனை செய்தது. இதில் தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. இது கட்சி மேலிட பரிசீலனையில் உள்ளது.

  தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. மாலைக்குள் இந்த பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் நிற்கிறது. இதற்கு சீட் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதற்கும் பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிய கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.  தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘இன்று மதியம் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘காங்கிரஸ் பட்டியலில் பெண் பெயரும் இடம் பெறும்’’ என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #LSPolls #Congress #BJP

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP
  சென்னை:

  தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரசுடன் நேரடியாக மோதுகிறது.

  கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தேசிய கட்சியான பா.ஜனதா வேட்பாளர்களை டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும்.

  எனவே தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட உள்ள கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகளிலும் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தமிழக நிர்வாகிகள் தயாரித்துள்ளனர்.  இந்த பட்டியலுடன் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி தலைவர் அமித்ஷாவிடம் பட்டியலை ஒப்படைக்கிறார். கட்சி மேலிடம் பரிசீலித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பட்டியலை வெளியிடாவிட்டாலும் பெரும்பாலான தொகுதிகளில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்கள். கன்னியாகுமரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா ஆகியோருக்கு சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

  தூத்துக்குடியில் தமிழிசை, ராமநாதபுரத்தில் நயினார்நாகேந்திரன் அல்லது குப்புராம் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி தமிழிசையிடம் கேட்டபோது கட்சி அதிகாரப் பூர்வமாக எப்போது யாரை அறிவிக்கிறதோ அதன்பிறகு தான் வேட்பாளர் யார் என்பது உறுதியாக தெரியும் என்றார். #LSPolls #BJP
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜஸ்தானில் பா.ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலில் 25 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் கொடுக்க வில்லை. #BJP #RajasthanElections

  புதுடெல்லி:

  200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

  இதில் ஆளும் பா.ஜனதா கட்சி முதல் கட்டமாக 131 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

  பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஜே.பி. நட்டா இந்த பட்டியலை வெளியிட்டார். முதல்-மந்திரி வசுந்தராராஜே தனது பாரம்பரிய மிக்க ஜால்ரா பதன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

  இந்த பட்டியலில் தற்போதைய எம்.எல்.ஏ.க் கள் 25 பேருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்க வில்லை. அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 85 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

  25 புதுமுகங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 12 பெண்களுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கி உள்ளது. #BJP #RajasthanElections

  ×