search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness program will be conducted every Saturday"

    • வேலூர் மாநகராட்சியில் நடந்தது
    • பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்பு

    வேலூர் :

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு இன்று நடந்தது.

    2-வது மண்டலம் சார்பில் சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் அருகே தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கினார்.

    சுகாதார அலுவலர் லூர்துசாமி வரவேற்றார். இதில் கவுன்சிலர் சுமதி மனோகரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

    இதேபோல 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட கஸ்பா மாசிலாமணி மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் பிரபு குமார் ஜோசப், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வீடுகளுக்கு குப்பை சேகரிக்கும் போது மக்கும் குப்பை மக்காத குப்பை என குப்பைகளை பெற்று மக்கும் குப்பையை உரமாக தயாரிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

    குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வேலூர் மாசிலாமணி பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மூலம் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடந்தது.நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்;

    வேலூர் மாநகராட்சியில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமை தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும்.இதன் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும். வேலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடந்தது. மாநகராட்சி முழுவதும் துப்புரவுப் பணியும் மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    ×