search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Association Meeting"

    • அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
    • ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.

     பல்லடம் :

    தமிழக நான்கு சக்கர மற்றும் கனரக வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. பல்லடம் பகுதி சங்கத் தலைவர் சக்தி தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் முனியப்பன், செயலாளர் ஹேன்குமார், பொருளாளர் பார்த்தசாரதி, உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வாகனம் பழுது பார்ப்போருக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் பழுது பார்க்கும் வகையில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பல்லடத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்காக அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விரைவில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜா, துணைச்செயலாளர்கள் முருகன், சுபாகர், மாவட்ட பிரதிநிதி மாரிராஜா, மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலாடி அருகே ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஐசக் நியூட்டன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நாகேந்திரன், செயலாளர் முருகன், பொருளாளர் செந்தில் பொன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகி ஜெயபால் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மண்டல பொறுப்பாளர் சக்தி முருகன் நன்றி கூறினார்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.
    • அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமாநல்லூரில் நடந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர்வடக்கு ஒன்றியம்அனைத்து வியாபாரி நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் பெருமா நல்லூரில்நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.இதில் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் பந்தல் அமைப்பது மற்றும் மே 5ந்தேதி வணிகர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது, புதிய உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனை நடைபெற்றது.

    இதில் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கண்ணன், துணைச் செயலாளர் சரவணன், ஒருங்கிணை ப்பாளர் பாலா, ஆலோசகர் மூர்த்தி, துணைத் தலைவர் வேலுச்சாமி, துணைப் பொருளாளர் சண்முகம் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் கொண்டப்பன், கோபால், ஜெயக்குமார், சங்கமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பார்த்திபன் பொருளாளர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    விசைத்தறி தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை 16-ந்தேதி, கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் 25ம் நிறைவு ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாட முடிவு.
    • திய குழு ஒன்றை அமைத்து சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

    சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தென்பாதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கச்சேரி ரோடு, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 25 ஆண்டுகள் வர்த்தக சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் இக்கூட்டத்தில் விரைவில் சீர்காழி நகர வர்த்தக சங்கத்தின் 25ம் நிறைவு ஆண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடப்படுவது, அப்போது மாநில தலைவரை அழைத்து மாநில வர்த்தக சங்க கட்டிடம் கட்டப்பட்டு வருவதற்கு நிதி திரட்டித் தருவது, 25 ஆண்டு நிறைவு விழாவில் வர்த்தக சங்கத் தலைவருக்கு பாராட்டு விழா நடத்துவது, புதிய குழு ஒன்றை அமைத்து சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×