search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anthony Albanese"

    • 45 வயதாகும் ஜோடி ஹேடன் எனும் பெண்ணுடன் நட்புடன் இருந்தார் அதிபர்
    • "மகிழ்ச்சியான இந்த தருணத்தை அனுபவிக்க விரும்புகிறோம்" என்றார் அல்பானீஸ்

    ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக தற்போது பதவி வகிப்பவர், 60 வயதாகும் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese).

    கடந்த 2019ல் ஆஸ்திரேலியாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் (Australian Labor Party) தலைவராக பொறுப்பேற்ற அந்தோணி, 2022ல் ஆஸ்திரேலிய பிரதமராக பதவி ஏற்றார்.

    அந்தோணி அல்பானீஸ், தற்போது 45 வயதாகும் ஜோடி ஹேடன் (Jodie Haydon) எனும் பெண்ணுடன் நீண்ட காலமாக நட்புடன் இருந்தார்.

    2019ல் அந்தோணி அல்பானீஸ், ஜோடி ஹேடன் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர்.

    இந்நிலையில், ஜோடி ஹேடனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அந்தோணி அறிவித்தார்.

    பதவியில் உள்ள போது திருமணம் செய்து கொள்ளும் முதல் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணியாவார்.

    சமூக வலைதளங்களில் இது குறித்து இருவரும் பதிவிட்டுள்ளனர்.

    "நீண்ட ஆலோசனைக்கு பிறகு இதற்கு தயாரானேன். எப்பொழுது, எங்கே திருமணம் எனும் விவரங்கள் குறித்து நாங்கள் இருவரும் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம். தற்போது இந்த மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க விரும்புகிறோம்" என அந்தோணி தெரிவித்துள்ளார்.

    நேற்று பிப்ரவரி 14, காதலர் தினத்தையொட்டி இருவரும், ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பர்ரா (Canberra) நகரில் இத்தாலியன் அண்ட் சன்ஸ் எனும் புகழ் பெற்ற உணவகத்தில் விருந்துண்டு மகிழ்ந்தனர்.


    வலைதளங்களில் வெளியான இருவரது புகைப்படங்களில், ஜோடி ஹேடன் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம், அல்பானீஸ் பிரத்யேகமாக வடிவமைத்தது.

    பல துறைகளை சேர்ந்த அமைச்சர்களும், கட்சியின் தலைவர்களும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon), "உங்கள் இருவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

    அந்தோணி, இதற்கு முன்னர், 2000-வது ஆண்டு கார்மல் டெப்புட் (Carmel Tebbutt) என்பவரை திருமணம் செய்தார். 2019ல் இருவரும் பிரிந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் 23-வயதில் ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 41 உயிர்களை மீட்க 17 நாட்களாக பெரும் போராட்டம் நடந்தது
    • ஆஸ்திரேலிய பேராசிரியரின் ஒத்துழைப்புக்கு பெருமை அடைவதாகவும் அல்பனீஸ் தெரிவித்தார்

    உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் எண் 134 தேசிய நெடுஞ்சாலையில் (NH-134) சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதன் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

    சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொழில்நுட்ப ஆலோசனைக்கு சுரங்க கட்டுமான மேலாண்மையில் நிபுணரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் ஆர்னால்ட் டிக்ஸ் என்பவரின் உதவியும் பெறப்பட்டது. மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த பெரிய இயந்திரத்தில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    இதன் காரணமாக எலி வளை சுரங்க தொழிலாளர்களை (rat hole miners) கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி நடைபெற்றது.

    சிறப்பான முறையில் செயல்பட்ட இவர்களின் தடையில்லா உதவியினால், நேற்று மாலை 07:05 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சுமார் 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நல்லவிதமாக முடிவுக்கு வந்தது.


    மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

    பல உயிர்களை காப்பாற்றும் மிக பெரிய பொறுப்பில் ஓய்வின்றி உழைத்து தங்களின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீட்க உதவிய அனைவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது பாராட்டுக்களை அவரது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    "வியத்தகு சாதனை. மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் அற்புதமான சாதனை இது. அனைவருக்கும் பாராட்டுக்கள். களத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டு பேராசிரியர் நல்கிய ஒத்துழைப்பு குறித்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம்" என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் க்ரீன் இந்திய முயற்சிகளை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.

    சிட்னி:

    ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றின.

    இந்த ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக ஜி20 கூட்டத்தை நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.
    • அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில், சண்டை மற்றும் சர்ச்சைகளும் வந்தம் வண்ணம் இருந்தது. பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை. 100-வது டெஸ்டில் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்தை பேர்ஸ்டோவ் கிண்டல் செய்த விதம், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் வம்புக்கு இழுத்தது, லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி உறுப்பினர்கள் கவாஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என்று அடுத்தடுத்து புதிய சர்ச்சைகள் உருவாகியது.


    இந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஸ்டம்பிங் சர்ச்சை இரு நாட்டு பிரதமர்கள் வரை சென்றது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேரில் சந்தித்து கொண்டனர். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஒரு பேப்பரை எடுத்து 2-1 என்று ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருப்பதாக காட்டினார்.

    அதற்கு பதிலடியாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற புகைப்படத்தை காட்டினார். இதற்கு பதிலடியாக பேர்ஸ்டோவை ஸ்டம்பிங் செய்த புகைப்படத்தை ஆஸ்திரேலிய பிரதமர் காட்ட, உடனடியாக சுதாரித்த ரிஷி சுனக், சாண்ட்பேப்பரை மறந்துவிட்டதாக பதிலடி கொடுத்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சாண்ட்பேப்பரை வைத்து பந்தை சேதப்படுத்தியதை அவர் நினைவு கூறினார்.

    இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்த போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை வைத்து கலாய்த்து கொண்டது ரசிகர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

    • வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது
    • சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று காலை அவர் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தெரிகிறது. அவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்கதி துறைகளில் ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்து இடம் பெற்றது. பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பது இந்த பேச்சுவார்த்தையில் முக்கியம்சமாக இருந்தது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு முன் பிரதமர் மோடிக்கு சிட்னியில் கவர்னர் ஜெனரல் அதிகாரப்பூர்வ மாளிகையில் வழங்கப்பட்ட அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த ஆண்டு இறுதிச் செய்யப்பட்டது. தற்போது இரண்டு நாடுகளும் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.

    ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ- பசிபிக்கிற்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொள்கின்றன. இந்த பார்வையில் ஆதரிப்பதில் நாம் ஒன்றாக முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்தார்.

    சுரங்கம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் எங்களது மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினோம்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    நேற்று சிட்னியில் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் உரையாற்றினார்.

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் இந்தியா வந்துள்ளார்.
    • அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானிஸ் (60), அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.

    அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ், அகமதாபாத் சென்று அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிட்டார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் டெல்லி ராஷ்டிரபதி மாளிகை சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்தார். இரு நாடுகளிடையே பரஸ்பரம் நட்புறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
    • அகமதாபாத்தில் நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் கண்டுகளிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் (60), இந்தியாவில் 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    அகமதாபாத்தில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ள 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் பார்க்கிறார்.

    மேலும், இந்தப் பயணத்தில் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மும்பை, டெல்லி நகரங்களுக்கும் செல்கிறார். இது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, பொருளாதார உறவுகளை மட்டுமின்றி இரு தரப்பு மக்களின் உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்.

    டெல்லியில் நடைபெறுகிற ஆஸ்திரேலிய, இந்திய வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கலந்து கொள்கிறார்.

    வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர்.

    • ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
    • இந்தப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் (60), இந்தியாவில் 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் வரும் 8-ம் தேதி இந்தியா வருகிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

    அகமதாபாத்தில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ள 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் பார்க்கிறார்.

    மேலும், இந்தப் பயணத்தில் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மும்பை, டெல்லி நகரங்களுக்கும் செல்கிறார். இது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, பொருளாதார உறவுகளை மட்டுமின்றி இரு தரப்பு மக்களின் உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்.

    டெல்லியில் நடைபெறுகிற ஆஸ்திரேலிய, இந்திய வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கலந்து கொள்கிறார்.

    வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி இருவரும் விவாதிக்க உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:

    ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் 8-ம் தேதி அகமதாபாத் வந்து சேருகிறார். மும்பைக்கு 9-ம் தேதி சென்று விட்டு, டெல்லி வந்தடைகிறார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் 10-ம் தேதி சம்பிரதாய ரீதியிலான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீசும் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். அப்போது இந்திய, ஆஸ்திரேலிய தரப்பு விரிவான பாதுகாப்பு உறவு, பிராந்திய, உலக விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா, ஆஸ்திரேலியா உறவை மேம்படுத்த இந்த பயணம் முக்கியமானதாக அமையும்.
    • இது ஒரு முக்கியமான வருகையாக இருக்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வது குறித்தும், இருநாட்டு உறவை மேம்படுத்தவும் இந்தப் பயணம் முக்கியமானதாக அமையும் என அவர் கூறினார். இதுகுறித்து பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது:

    ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியையும் சந்தித்தேன். ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

    ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவை விரிவுபடுத்துவதற்கு மிகவும் முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். மார்ச் மாதம் இந்தியா வருவேன். நாங்கள் ஒரு வணிகக் குழுவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்வோம்.

    இது ஒரு முக்கியமான வருகையாக இருக்கும். அது நமது இரு நாடுகளுக்கும் இடையே நாம் கொண்டுள்ள உறவை மேம்படுத்தும் என தெரிவித்தார்.

    ×