search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anantnag encounter"

    • ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
    • அனந்தநாக் மாவட்டத்தில் இன்று நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

    பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்துக்குட்பட்ட கச்வான் வனப்பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து, அந்த பகுதியை இன்று பிற்பகல் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அடர்ந்த மரங்களுக்கு இடையில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். 

    சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 6 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.



    இதையடுத்து இன்று அதிகாலையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  #JKEncounter

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #JKEncounter #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். #JKEncounter #MilitantKilled
    ×