search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambai"

    • அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி.
    • மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பையை அடுத்த வி.கே.புரம் சிவந்திபுரம் மடத்து தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). விவசாயி. இவர் நெஞ்சு வலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே மது பழக்கத்திற்கு மாரியப்பன் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10-ந் தேதி வீட்டில் வைத்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து மாரியப்பன் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங், அந்த சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை க்காக அழைத்து வருபவ ர்களின் பற்களை பிடுங்கி யதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அப்போதைய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சூர்யா என்ற வாலிபர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி விசாரணை நடத்தினர்.

    மேலும் சூர்யாவுக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்திய நிலையில் தற்போது சூர்யா மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

    அதன்படி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நாளை(புதன்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சூர்யாவுக்கு சம்மன் வழங்கி உள்ளனர். அவர் நேரில் ஆஜராக வரும் பட்சத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    இவரது புகாரின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • நடராஜன் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு நடராஜன் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    நெல்லை:

    அம்பை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது75). இவர் குடும்பத்தை பிரிந்து சாலையோரம் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி வந்துள்ளார். சம்பவத்தன்று அம்பை அருகே உள்ள முடப்பாலம் கல்வெட்டாங்குழிக்கு சென்றார்.

    இந்நிலையில் திடீரென தண்ணீரில் மூழ்கி பலியானார். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்பை, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி-மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:-

    ஓ. துலூக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பை, மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் அன்று மின்தடை ஏற்படும்.

    அதன்படி ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ. துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழை யூத்து, பனையங்குறிச்சி, நாலா ங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது.

    இதேபோல் கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், வடமலைசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம் மயிலப்பபுரம், வெங்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்திய புகார்கள் தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வருகிறார்.
    • அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணையை நடத்துகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் விசாரணை கைதிகளை துன்புறுத்தியதாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ள உயர்மட்ட விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ. கடந்த 10-ந் தேதி அம்பை தாசில்தார் அலுவல கத்தில் தமது விசா ரணையை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக அவர் வருகிற 17, 18 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தமது அடுத்த கட்ட விசா ரணையை மேற் கொள்ள உள்ளார்.

    அம்பை காவல் உட்கோட்டத்தில் காவல் துறை யால் விசாரணை கைதிகளை துன்புறுத்திய தாக வர பெற்ற புகார்கள் தொடர்பாக விசா ரணை அலுவலரிடம் நேரில் புகார் அளிக்க விரும்பு பவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்கு மூலங்களை அளிக்க விரும்பு வோர் 17, 18-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பை தாசில்தார் அலுவலகத்தில் உயர்மட்ட விசாரணை அலுவலர் முன்பாக நேரில் ஆஜராகலாம்.

    ஏற்கனவே சேரன்மகா தேவி சார் ஆட்சியர், உட்கோட்ட நடுவரிடம் புகார், வாக்குமூலம் அளித்தவர்கள் மீண்டும் ஒரு முறை வர வேண்டியது கட்டாயம் இல்லை.

    ஆனால் உயர்மட்ட விசா ரணை அலுவலர் முன்னிலை யில் மீண்டும் ஒருமுறை வாக்கு மூலம் அளிக்க விரும்பி னாலோ, புகார், கூடுதல் தகவல்களை அளிக்க விரும்பினாலோ அவர்களும் நேரில் வரலாம். பாதிக் கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருப்பினும் அவர்களும் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் விசா ரணை அலுவலரிடம் நேரடி யாக புகார் அளிக்க இயலாத வர்கள் ambai.inquiry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக (18-ந்தேதி மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும்) புகார் அளிக்கலாம் அல்லது 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 918248887233 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது.
    • 8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம்,பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷபம் ஆகிய வாகனங்களில் சப்பர பவனியும், தொடர்ந்து 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம், அன்னதர்மம் ஆகியன நடைபெற்றது.

    8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல், கும்பிட்டு நமஸ்கார நிகழ்ச்சி நடைபெற்றது.

    அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது. திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக 11-ம் திருநாள், 25வது ஆண்டு தேர் திருநாள், 50-வது தேர் பவனி மாலை 4 மணிக்கு செண்டை மேளம், நையாண்டி மேளங்கள் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஏராளமான அன்பு கொடிமக்களும், வாகைபதி அன்பர்களும் அய்யா வழி அன்புக்கொடி மக்களும் கலந்து கொண்டனர். இரவு காளை வாகனத்தில் அய்யா பவனி வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

    • அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.
    • இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ம்றறும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இருப்பினும் அம்பையில் இருந்து பாபநாசத்திற்கு போதிய அளவு அரசு பஸ்கள் இல்லாத காரணத்தால் ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயங்கி வருகின்றன.

    இந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகளவிலான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

    பஸ்சின் உள்ளே மாணவர்கள் நின்று செல்லும் நிலையில், முன், பின் படிக்கட்டுகளிலும் சுமார் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொங்கிய படி பயணம் செய்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மாணவர்களின் புத்தக பைகளை டிரைவரே வாங்கி வைத்து கொள்கிறார். அதனால் கண்டிரக்டர், டிரைவர் உதவியுடனே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு சம்பந்தப்பட்ட அம்பை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். 

    • நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
    • இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலை யாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப் பதால் ஓ.துலுக்கப்பட்டி துணை மின்நிலை யத்திற்கு உட்பட்ட ஆழ்வான் துலூக் கப்பட்டி, ஒ.துலூக்கப் பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்த பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இதேபோல வீரவநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காரு குறிச்சி, அத்தாளநல்லூர், ரெட்டியார்புரம் பகுதிக ளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    அம்ம்பை, ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணி முத்தாறு, ஜமீன் சிங்கம் பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன் மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள் புரம் ஆகிய பகுதி களிலும் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடையானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதி களில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடைபடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
    • மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அருகில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.

    டாஸ்மாக் கடை

    இதில் அம்பை, வி.கே.புரம் பகுதி பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    மேலும் சுமார் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. சுகாதார தேவைகள் எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் விஜயா பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜகோபால், பொரு ளாளர் வணங்காமுடி, சமூக ஆர்வலர் ரஹ்மான் சேட், துணைத்தலைவர் நெல்லையப்பன், செயலாளர் மனோ சித்ரா, இணை செயலாளர் மாரி செல்வி, சண்முகசுந்தரம், ஏசையா, ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தாசில்தாரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    • தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.
    • அம்பை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக புகழ் பெற்ற மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை அம்பை அருகே உள்ள கீழஆம்புரில் இன்று நடைபெற்றது.

    இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். இதில் அம்பை நகராட்சி பகுதிகளில் மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வரும் கைவினை கலைஞர்களுக்கு உலக புகழ் பெற்ற அனுபவம் மிக்க பயிற்சியாளரை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    அம்பை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறையாக புகழ் பெற்ற மரக்கடைசல் பொம்மைகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் குழந்தைகள் விரும்பி விளையாடும் செப்பு சாமான்கள் போன்றவையும் அடங்கும். நலிந்து வரும் இந்த பாரம்பரிய தொழில்முறையில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை என்பது அவர்கள் நீண்ட நாட்களாக கூறிவரும் கோரிக்கையாகும்.

    இதற்கு சீன பிளாஸ்டிக் பொம்மை பொருட்களும் மற்ற மாநிலங்களின், உற்பத்தியாளுடான போட்டியும், தொழில் முன்னேற்றத்திற்கான முதலீட்டின்மையும் காரணமாக கூறப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தொழில் முதலீடுகள் குறைவாக உள்ளதால் தரம் குறைந்த மூலப்பொருட்களை உபயோகிக்க வேண்டியுள்ளதாகவும், இதனால் உற்பத்தி செய்யும் பொருட்கள் நல்ல விலைக்கு விற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

    இதனால் இளைய தலைமுறையினர் இந்த தொழிலை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். காலப்போக்கில் இத்தொழில் அழிந்து விடும் என கவலை தெரிவித்தனர். இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் துணையோடு மேம்பட்ட மரக்கடைசல் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியை அனுபவமிக்க பயிற்சியாளர்கள் கொண்டு அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி ஒரு மாதம் நடைபெறும். பயிற்சியின் முடிவில் கைவினை கலைஞர்களின் தொழில் திறன் விரிவடைவதுடன் அவர்களுக்கான வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்தி தரும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பயிற்சி கலெக்டர் கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்
    • நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி,:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறி யாளர் சுடலையாடும் பெரு மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் தடை ஏற்படும்

    ஓ.துலூக்கப்பட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங் கட்டளை, கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல், சிங்கம்பாறை பகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    வீரவநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவ நல்லூர், சாட்டுபத்து, அரிகே சவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், கூனியூர், காரு குறிச்சி பகுதிகள் மற்றும் அம்பாசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார் ்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டிபகுதி களில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல மணிமுத் தாறு துணை மின்நிலையத்திற்குட்பட்ட மணிமுத் தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைரா விக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.

    கடையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆவுடை யானூர், மனல் காட்டானூர், பண்டார குளம், வள்ளியம்மாள் புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அம்பையில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜயவீரன்(வயது 46). இவர் அம்பையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் குடும்பத்துடன் அம்பையில் குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வேலை பார்த்து வந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்போவதாக கூறி அதனை அடைத்து விட்டனர்.

    இதனால் விஜயவீரன் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்து வந்த அவர் கடந்த 28-ந்தேதி  திடீரென விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுதொடர்பாக அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×