என் மலர்

  நீங்கள் தேடியது "Airport"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சர்வதேச விமான வசதி இல்லாத நாடுகளுக்கும் கூட பாண்டட் டிரக் சேவை மூலம் சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது
  • விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

  கோவை

  கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

  சர்வதேச விமான வசதி இல்லாத நாடுகளுக்கும் கூட பாண்டட் டிரக் சேவை மூலம் சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது.காய்கறிகள், பழங்கள், பூ, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  ெகாரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விமான சேவை மற்றும் சரக்கு போக்குவரத்து மீண்டு வர தொடங்கி உள்ளது. இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் மாதாந்திர சரக்கு கையாளும் அளவு 900 டன் எடையை கடந்துள்ளது.

  இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- கோவை விமான நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் ெகாரோனா தொற்று பரவலுக்கு முன்னர் மாதந்தோறும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 800 டன் மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 200 அல்லது 250 டன் எடையிலான சரக்குகள் கையாளப்படுவது வழக்கம்.

  ெகாரோனா பரவலால் சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்ப ட்டது. தற்போது விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மாதந்தோறும் 600 முதல் 800 டன் எடையிலான சரக்குகள் கையாளப்பட்டன.

  செப்டம்பரில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 790 டன், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 141 டன் என மொத்தம் 931 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளது.தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே மாதத்தில் கையாளப்பட்ட மொத்த சரக்குகளின் எடையளவு 900 டன் எடை அளவை கடந்துள்ளது.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளக்கப்படுகிறது மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
  • இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

  அவனியாபுரம்

  மதுரை விமான நிலை யத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய வளாகத் தினைச் சுற்றி ரூ.35 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தபுள்ளி வெளியிடப்ப ட்டுள்ளது.

  மதுரை விமான நிலையம் 1942 இல் இரண்டாம் உலகப்போரின்போது அமைக்கப்பட்டு, 1957-ம் ஆண்டு முதல் பயணி கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பயணிகள், விமானங்கள் அதிகரித்ததன்பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு புதிய விமான நிலைய முனைய கட்டடம் கட்டப்பட்டது.

  2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் இருந்து இலங்கைக்கு(கொழும்பு)முதல் வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. தொடர்ந்து சரக்கு போக்குவரத்து விமான முனையம் கட்டப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. தென்மாவட்ட மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் வந்து செல்லும் வகையில் சர்வதேச விமான நிலையமாக்க வேண்டும் தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.

  சர்வதேச விமான நிலையமாகாத நிலையில் சுங்க பயன்பாடு உள்ள விமான நிலைய அந்தஸ்தை கொடுத்து மதுரையிலிருந்து துபை, சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவிலான பயணி களை கையாண்டுவரும் மதுரை விமான நிலையம் இந்திய அளவில் பரபரப்பாக இயங்கும் விமான நிலை யங்களில் 36-வது இடத்தை பெற்றுள்ளது.

  மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க பெரிய விமானங்கள்(ஏர்பஸ் வகை) வந்து இறங்கி செல்லும் வகையில், தற்போது உள்ள ஓடு பாதை நீளம் 7 ஆயிரத்து 500 அடியிலிருந்து, 12 ஆயிரத்து 500 அடியாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

  இதற்காக விமான நிலையத்தைசுற்றியுள்ள 610 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 100 ஏக்கர் அரசு(புறம்போக்கு)நிலங்களைத் தவிர்த்து மீதி உள்ள இடங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடமிருந்து பணம் கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது .

  இதையடுத்து தமிழக அரசு விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட இருப்பதை அடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் கைப்பற்றப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க ரூ.35 கோடி ஒப்பந்தபுள்ளி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளிக்கு வருகின்ற ஆகஸ்ட் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு 14 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக விமானங்கள் நிற்பதற்கு என ஏழு விமான நிறுத்த இடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூ.97 கோடியே 44 லட்சம் செலவில் அமைக்க ஒப்பந்தபுள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

  மேலும் சுற்றுச்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு அண்டர் பாஸ் முறையில் பாலம் அமைக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. புதிதாக சரக்கு போக்கு வரத்திற்கு என கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று விமான நிலையம் பின்புறம் உள்ள பரமபட்டி பகுதியில் நில அளக்கும் பணி நடை பெற்றது இந்த பணிக்கு இடையூறாக யாரும் இருந்துவிடக் கூடாது என்ப தற்காக 100-ம் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது

  இப்பணிகள் அனை த்தையும் முடிக்கப்படும் நிலையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்பது மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
  • 2 பக்கமும் சேவை சாலைகளும் அமைக்கப்படும்.

  கோவை:

  கோவை பீளமேட்டில் தற்போது உள்ள பன்னாட்டு விமான நிலையம் 627 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக ராணுவத்துக்கு சொந்தமான 135 ஏக்கரும், புறம் போக்கு நிலம் 30 ஏக்கரும், தனியாருக்கு சொந்தமான 462 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன.

  இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் மற்றும் புறம்போக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டன. தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை சுமார் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட்டுவிட்டன. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு அவை நில உரிமையாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. மீதி 162 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் 2 மாதங்களில் அனைத்து நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

  அதன்பின்னர் இதுவரை கையகப்படுத்தப்பட்ட 627 ஏக்கர் நிலமும், மத்திய அரசின் விமான நிலைய ஆணையத்தின் பெயருக்கு பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் விமான நிலைய விரிவாக்கம் முடிந்த பின்னர் அதற்கு செல்லும் இணைப்பு சாலைகளும் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன.

  அதன்படி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் அதன் முனையம் கோவை-அவினாசி சாலையில் நீலாம்பூர் அருகே அமைக்கப்பட உள்ளது. இணைப்பு சாலை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் முன்பிருந்து தொடங்கி விமான நிலைய முனையம் வரை 4.25 கிலோ மீட்டர் நீளத்துக்கு 6 வழி ஒணைப்புச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: தற்போது உள்ள கோவை விமான நிலையத்திற்கு அவினாசி சாலையில் சிட்ரா சந்திப்பிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலையாக அமைந்துள்ளது.

  ஆனால் விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிந்த பின்னர் புதிய விமான நிலையத்தின் பிரதான வழி தனியார் ஓட்டல் முன்பிருந்து அமைய உள்ளது. அது 6 வழிச்சாலையாக இருக்கும். இதன் 2 பக்கமும் சேவை சாலைகளும் அமைக்கப்படும். விரிவாக்கத்திற்கு பின்னர் புதிய விமான நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் தவிர தற்போது உள்ள பழைய இணைப்பு சாலையும் பயன்பாட்டில் இருக்கும்.

  மேலும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் விரைவாக விமான நிலையத்தை அடையும் வகையில் வ.உ.சி பூங்கா முன்பிருந்து கோல்டு வின்ஸ் வரை உயர் மட்ட மேம் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

  அந்த மேம்பாலத்தில் வருபவர்கள் சிட்ரா சந்திப்பிலிருந்து விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் செல்லும் வகையிலும். கோல்டுவின்சில் இறங்கும் வாகனங்கள் அதன்பின்னர் தனியார் ஓட்டல் முன்பு புதிதாக அமைய உள்ள சாலை வழியாக செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
  • மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

  கோவை 

  கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.

  தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

  கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்னர் தினமும் 35-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் விமானங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது.

  பல நாட்களுக்குப் பின்னர் மெல்ல இயல்பு நிலையை மீண்டும் திரும்ப தொடங்கியது. சமீபத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் விமான போக்குவரத்து குறைய தொடங்கியுள்ளது. தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 24, 23 ஆக குறைந்துள்ளது.

  இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-கோவை விமான நிலையத்தில் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் நிரம்பி செல்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.

  சில சேவைகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளன. போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும் புதிதாக சில நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்
  • குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வருபவர்களை

  திருச்சி:

  தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் மக்கள் நல்வாழ்வுதுறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் பதவியதாக கண்டறியப்பட்ட 23 நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மாதிரி எடுத்து தீவிர சோதனைக்குபட்படுத்த உத்தவிடப்பட்டுள்ளது.

  அதன்படி, துபை, சிங்கப்பூர், அபுதாபி, கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் ஐசிஎம்ஆர் அறிவுத்தல்படி மத்திய,  மாநில அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முன்னேற்பாடாக குரங்கு அம்மை நோயாளிக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.

  இது குறித்து மாநில மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள மருத்துவர் கூறுகையில், வெ ளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி 2 சதவீதம் பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக் குட்படுத்தப்படுகிறது என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • தியோகர் விமான நிலையத்தில், 2500 மீட்டர் நீள ஓடுபாதை உள்ளது.
  • விமான நிலையத்தில் இருந்து தியோகர்- கொல்கத்தா இண்டிகோ விமானத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.

  தியோகர் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய விமான நிலையத்தில் இருந்து தியோகர்- கொல்கத்தா இண்டிகோ விமானத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  விமான நிலையத்தில், 2500 மீட்டர் நீள ஓடுபாதை உள்ளது. இது ஏர்பஸ் ஏ320 விமானங்கள் தரையிறங்குவதையும், புறப்படுவதையும் கையாளும்.

  விமான நிலைய தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "தியோகர் விமான நிலையம் வரும் நாட்களில் ராஞ்சி, பாட்னா மற்றும் டெல்லியுடன் இணைக்கப்படும்" என்றார்.

  பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

  ஜார்கண்ட் மட்டுமின்றி, இந்த திட்டங்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயனளிக்கும். தியோகர் விமான நிலையம் தங்களின் நீண்ட கால கனவு . அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்த திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். 16,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தின் இணைப்பு, சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தும்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.
  • சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

  ஆலந்தூர்:

  மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல், நேற்று இரவு மதுரையில் இருந்து இரவு 7 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு, இரவு 8.30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னையிலிருந்து மும்பைக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.

  ஆனால் மதுரையிலிருந்து இரவு 7 மணிக்கு வர வேண்டிய விமானம் தாமதமாக இரவு 8.15 மணிக்கு தான் சென்னை வந்தது. உடனடியாக அவரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு கிளை போலீசார் அவசரமாக மும்பை செல்ல இருக்கும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்றி வைக்க அழைத்து சென்றனர்.ஆனால் விஸ்தாரா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் போா்டிங் முடிந்து விட்டது. நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள் என்று மந்திரியின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்தனா்.

  இதையடுத்து மத்திய மந்திரி கபில் மொரிஸ்வர் உள்நாட்டு விமானநிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருத்தார்.

  அதன்பின்பு இரவு 10.30 மணிக்கு மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் அவர் புறப்பட்டு சென்றாா்.

  மதுரையில் இருந்து வந்த விமானம் தாமதம் காரணமாக, மத்திய மந்திரி மும்பை செல்ல முடியாமல், 2 மணி நேரம் சென்னை விமானநிலையத்தில் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர்.
  • விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, சனிக்கிழமை அதிகாலை 63 வயது முதியவர் மனைவியுடன் விமானம் மூலம் வெளிநாடு செல்ல வந்தார்.

  அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் செக்-இன் கவுன்டரில் இருந்த ஊழியர்கள், அவர்களது உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

  இது முதியவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறினார். இது விமான நிலையத்தில் பீதியைத் தூண்டியது.அதைத் தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  அவர்கள் விரைந்து வந்து முதியவரை பிடித்து நெடுவாசல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எரிபொருள் பற்றாக் குறையால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் விநியோகிக்கப்படுகிறது.
  • இலங்கையில் டீசல் கிடைக்காததால் பயணிகளின் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  கொழும்பு:

  இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

  உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் என அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

  எரிபொருள் பற்றாக் குறையால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பெட்ரோல்-டீசல் விநியோகிக்கப்படுகிறது. தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இதனால் இலங்கையில் டீசல் கிடைக்காததால் பயணிகளின் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் ரெயில்கள் மற்றும் உள்ளூர் பஸ்களை பயன் படுத்துகிறார்கள். ஆனாலும் வாகன போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் அவதி அடந்துள்ளனர்.

  இந்த நிலையில் விமான எரி பொருள் தட்டுப்பாடு நிலவுவதால் விமான சேவையும் பாதிக்கும் சூழல் உள்ளது.

  இதுகுறித்து விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் சந்திரசிறி கூறியதாவது:-

  டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 90 சதவீத தனியார் பஸ்கள் இயங்கவில்லை. விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களே தற்போது பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். நாட்டின் விமான எரி பொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளது.

  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் சிறிய அளவிலான எரி பொருள் மாத்திரமே கிடைக்கிறது. சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எரி பொருள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  விமான எரி பொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
  • கரூரின் ரூ.10,000 கோடி வர்த்தகத்தை 2030ல் ரூ.30,000 கோடியாக உயர்த்தவேண்டும்.

  கரூர்:

  கரூரில் விமான நிலையத்திற்கான பணிகளை தொடங்கி உள்ளோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

  முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருவதையொட்டி தொழில் முனைவோர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது-

  தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

  அடுத்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தியை இரட்டி ப்பாக்குவதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. சொந்த உற்பத்தியாக 6,270 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். கரூரில் விமான நிலையம் இல்லாததால் ஏற்றுமதியாளர்கள் வர தயங்கும் நிலை உள்ளது. அவர்கள் வந்தால் நமது ஜவுளி நிறுவன கட்டமைப்புகள், மேலும் வர்த்தகம் உயரும். விமான நிலையம் வர அதிக வாய்ப்புள்ளது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்.

  கரூரின் ரூ.10,000 கோடி வர்த்தகத்தை 2030ல் ரூ.30,000 கோடியாக உயர்த்தவேண்டும். கோவையில் தொழிலதிபர்களிடம் சமூக உணர்வு அதிகமாக உள்ளது. கரூரில் சற்று குறைவாக உள்ளது. அதற்காகதான் யங் இந்தியா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூரில் உள்ளவர்களும் சமூக உணர்வை ஏற்படுத்தி க்கொள்ளவேண்டும் என்றார்.

  சிஐஐ சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும். விரைவில் முருங்கை உற்பத்திப்பொருள் தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளோம் என்றனர்.

  இதற்கு பதிலளித்த அமைச்சர் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான அரசு புறம்போக்கு நிலம் கிடைக்கவில்லை. குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டும் உரிய இடம் இல்லை என்றார்.

  பின்னர் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டு கரூர் திருமாநிலையூரில் முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி 1ம் தேதி வரும் முதல்வருக்கு 4 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து விழா மேடைக்கு வரும் முதல்வருக்கு 23 இடங்களில் தலா 5,000 பேர் வீதம் 1.15 லட்சம் பேர் வரவேற்கின்றனர். முன்னதாக முதல்வர் தொழில்முனைவோர்களை சந்திக்கின்றார் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

  சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க,புறப்பட 2 ஓடுபாதைகள் உள்ளன. முதல் ஓடுபாதை 3.66 கி.மீட்டரும், 2-வது ஓடுபாதை 2.89 கி.மீட்டரும் உள்ளது.

  இதில் முதல் ஓடுபாதையில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் பயன்படுத்தப்படுகின்றன. 2-வது ஓடுபாதையில் 76 பயணிகள் பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

  இதில் விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2-வது ஓடுபாதை பகுதி அருகே கொளப்பாக்கம் பகுதியில், உயா்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள்,செல்போன் டவா்கள் போன்ற தடைகள் அதிகம் இருப்பதால், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.

  தற்போது அவ்வப்போது முதல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்படும்போதும், செவ்வாய்,சனி பிற்பகலில் வாராந்திர பராமரிப்பு நடக்கும் போது மட்டும், 2-வது ஓடுபாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  ஒரே நேரத்தில் இயக்க முதல் ஓடுபாதை அளவுக்கு, 2-வது ஓடுபாதையின் நீளத்தை அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்கனவே முடிவு செய்து இருந்தது.

  இதற்காக, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய மாநில அரசிடம் தேவையான நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும்படி கேட்டது. ஆனால் அப்போதைய அரசு நிலம் கையகப்படுத்தி கொடுக்கவில்லை. அதோடு சென்னை அருகே ரூ.40 ஆயிரம் கோடியில் 2-வது விமான நிலையம் கட்டப்பட இருப்பதால் 2-வது ஓடுபாதையை நீட்டிக்கும் திட்டத்தை விமானநிலைய ஆணையம் கைவிட்டு விட்டது.

  இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களின் எண்ணிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்கத்தை துரிதப்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.

  இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த, சென்னை விமானநிலைய நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது.

  அதன்படி, முதல் பிரதான ஓடுபாதையை விமானங்கள் புறப்பாட்டிற்காகவும், 2-வது ஓடுபாதையை, விமானங்களை தரை இறக்கவும் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமி டப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

  சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்க விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  இதற்காக, சென்னை விமானநிலைய போக்கு வரத்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளிலும், விமானங்களை இயக்குவது குறித்த பயிற்சி முடிந்ததும், அவற்றை முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  அதன் பின்னர் 2 ஓடுபாதை களையும் நிரந்தரமாக பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

  சென்னை விமான நிலையத்தில் தற்போது, பிரதான முதல் ஓடுபாதையில், ஒரு மணி நேரத்தில், 30-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, 50-க்கும் அதிகமான விமானங்களை ஒரு மணி நேரத்தில் இயக்க முடியும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

  சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

  இவ்வாறு அவர்கள் கூறினா்.

  விமானங்கள் விரைந்து வர இதேபோல் விமானநிலையத்தில் தரைஇறங்கும் விமானங்கள்,விரைந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  சென்னை விமான நிலையத்தில், தரையிறங்கும் விமானங்கள், ஒரு ஓடு பாதையில் இருந்து, மற்றொரு ஓடு பாதைக்கு விரைவாக செல்ல, 'டாக்சி வே' எனும் இணைப்பு பாதை பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்சி வே 'பி' என்ற 'பிராவோ', முதல் ஓடுபாதைக்கு, நேராக செல்லா மல், வளைந்து செல்லும் வகையில் இருந்தது.

  இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள், டாக்சி வேயில் விரைவாக செல்ல முடியாத நிலை இருந்தது.

  இந்த டாக்சி வே 'பி'யை நேர்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது.

  எனவே இனிமேல் விமானங்கள் தரை இறங்குவது, புறப்படுவது மேலும் வேகமாக இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo