search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk case"

    • எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு.
    • பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பொன்னேரி:

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

    இதை முன்னிட்டு, பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆலோசனைப்படி நகர செயலாளர் செல்வக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், செந்தில்குமார், சுரேஷ் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்பத், அருன்ராஜ், அருண், ஸ்ரீதர் திருக்குமார், நாகராஜ், செல்வம், வெங்கடேசன், லட்சுமி, சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ்.சுடன் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ்பாபு, ஓ.பி.எஸ்.சி.ன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று தீர்ப்பு கூறினார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் முன்பு முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது.

    இதற்கிடையே ஓ.பி.எஸ்.சுடன் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    ஓ.பி.எஸ். மனு மட்டும் பட்டியலிடப்பட்ட நிலையில் மற்ற 3 பேரும் முறையிட்டதால் 4 பேரின் வழக்குகளையும் ஒன்றாக பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். தரப்பினரின் மேல்முறையீடு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நாளை (30-ந்தேதி) விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
    • அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இரட்டை பதவியால் கொள்கை முடிவுகளில் தாமதம் ஏற்படுவதாக கூறி மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் அ.தி.மு.க. பிளவுபட்டது. 98 சதவீதம் அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை ஆதரிக்கின்றனர்.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்து ஓ.பன்னீர் செல்வத்தை அதிரடியாக நீக்கினார்கள். இதையடுத்து அந்த பொதுக்குழு கூட்ட முடிவுகளை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்களை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் இருதரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

    மேலும், இரு தரப்பினரும் எழுத்துபூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து இடைத்தேர்தலுக்காக மட்டும் ஓர் இடைக்கால உத்தரவைப் பெற்றது.

    அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற கே.எஸ்.தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி வாசித்தார்.

    தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்கிறது. எனவே அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லும்.

    அந்த கூட்டத்தில் அ. தி. மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் சரியானதுதான். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பு மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய இமாலய வெற்றி கிடைத்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இறுதி வெற்றியை பெற்று உள்ளார்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க. முழுமை பெற்று உள்ளது. அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கைவசம் ஆகி உள்ளது.

    அடுத்தக்கட்டமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளது. இதனால் அ.தி.மு.க.வில் இனி எடப்பாடி பழனிசாமி மட்டுமே தலைவர் என்ற நிலை உருவாகிறது.

    அதே சமயத்தில் ஜெயலலிதா காலத்தில் இருந்து செல்வாக்குடன் திகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்துக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையில் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் அடுத்தக் கட்டமாக என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது.
    • சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுகளில் ஒரு முறை ஓ.பி.எஸ்.சுக்கு சாதகமாகவும், இன்னொரு முறை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வெளியான நிலையில் தான் ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை வருகிற 4-ந்தேதி (நாளை மறுநாள்) மீண்டும் நடைபெற உள்ளது. இதுவே இறுதி விசாரணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று தீர்ப்பு வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த விசாரணை அரசியல் களத்திலும், அ.தி.மு.க. வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அவரது கையெழுத்திட்ட வரவு செலவு கணக்குகளை அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்டது.

    இதேபோன்று மத்திய அரசு சார்பிலும் 2 முறை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அங்கீகாரமாகவே எடப்பாடி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில்தான் 4-ந்தேதி நடைபெற உள்ள விசாரணை இறுதி விசாரணையாக இருக்கும் என்பதால் யாருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும்? யாருடைய கை ஓங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இருவருமே சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் அங்கீகாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டும் எங்களைத்தான் அ.தி.மு.க.வாக நிச்சயம் அங்கீகரிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த தெம்புடன் காத்திருக்கிறார்கள்.

    இருப்பினும் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும் என்பதே இப்போது எழுந்துள்ள மிகபெரிய கேள்வியாக உள்ளது.

    • தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது.
    • ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது

    இதில், தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி செயல்படாத நிலை உருவாகியுள்ளது என்றும் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பு விவாதித்தது.

    மேலும், ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் இல்லாததால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விவாதித்தது.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், "அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் அதிகாரிகள் நியமனம்.
    • சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்.

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த ஜூலை 11ம் நடந்த மோதல் பற்றி விசாரிக்கும் குழுவில் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    ×