search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "89.78 சதவீதம் தேர்ச்சி"

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் 89.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10,235 மாணவர்களும், 11,683 மாணவிகளும் என மொத்தம் 21,918 பேர் தேர்வு எழுதினர். இதில் 8,880 மாணவர்களும், 10,827 மாணவிகளும் என மொத்தம் 19,677 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்கள் 86.47 சதவீதமும் மாணவிகள் 92.67 சதவீதமும் என மொத்தம் 89.78 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 21-வது இடமாகும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு 90.48 சதவீதமும், கடந்த ஆண்டு 92.80 சதவீதமும், இந்த ஆண்டு 89.78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளை விட தற்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 8,504 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7,001 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 82.31 சதவீதம் ஆகும்.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மற்றும் அடுத்த இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த ஆண்டு முதல் மாணவர்களின் செல்போனுக்கே தேர்ச்சி விகிதம் குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. இதனால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் 7,166 மாணவர்களும் 7,622 மாணவிகளும் என மொத்தம் 14,788 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 6,739 பேரும், மாணவிகள் 7,370 பேரும் என மொத்தம் 14,109 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்த தேர்ச்சி விகிதம் 95.41 சதவீதம் ஆகும். மாணவர்கள் 94.04 சதவீதமும், மாணவிகள் 96.69 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே தேனி மாவட்டத்தில் அதிக அளவு தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 94 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளும், 32 மெட்ரிக் பள்ளிகளும் என மொத்தம் 126 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினர். மாநில அளவில் தேனி மாவட்டம் 9-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு 95.11 சதவீதமும் 2017-ம் ஆண்டு 95.93 சதவீதமும் இந்த ஆண்டு 95.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக 95 சதவீதம் மாணவ-மாணவிகள் தேனி மாவட்டத்தில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5,480 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவர்களில் 5,032 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது 91.82 சதவீதம் ஆகும். #Plus2Result
    ×