search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "509 இடங்களில்"

    • மக்கள் ஆர்வமுடன் வந்து செலுத்திக்கொண்டனர்
    • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது

    கோவை:

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 10 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய ப்பட்டது. இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

    இதையடுத்து, கோவை மாவட்டத்தில் தற்போது வரை 18 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியை 27 லட்சத்து 82 ஆயிரத்து 999 நபர்களும், 2-வது தவணை தடுப்பூசியை 25 லட்சத்து 83 ஆயிரத்து 749 நபர்களும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 4 ஆயிரத்து 494 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் 76 ஆயிரத்து 531 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 44 ஆயிரத்து 302 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கி ழமை) சிறப்பு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 2,304 முகாம்கள், மாநகராட்சி பகுதியில் 950 முகாம்கள், நகராட்சிப்பகுதி களில் 225 முகாம்கள் என மொத்தம் 3,509 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தது.

    தடுப்பூசி செலுத்தாத வர்கள் மற்றும் 2-வது தவணை தடுப் பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகியவை முகாம்களில் செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    ×