என் மலர்
நீங்கள் தேடியது "5 மாநில சட்டசபை தேர்தல்"
- வீடு எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் நாசமானது
- மின்கசிவு காரணமாக நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலபுரம் கிராமத்தில் காளிமுத்து என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது.
மணமேல்குடி தாலுகா கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது62), இவரது மனைவி பேச்சி இவர்களுக்கு மகன் மாரிமுத்து, மகள்கள் கல்பனா, சித்திரா ஆகியோர் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமான நிலையில், ஒரே வீட்டில் குறுக்கே சுவர் வைத்து மகன் ஒரு பகுதியிலும், காளிமுத்து குடும்பம் ஒரு பகுதியிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர்கள் அருகே உள்ள வயல்காட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். அதே போன்று லாரி ஓட்டுனரான மகன் மாரிமுத்து வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக ஜெகதாப்பட்டினம் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே தீ மளமளவென பரவி வீடு முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. தீ விபத்தில் 11 சவரன் நகை, 70 ஆயிரம் ரொக்கப்பணம், தொலைக்காட்சிப்பெட்டி, சலவை எந்திரம் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து நாகுடி காவல்த்து றையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கோவில் சிலைக்கு மாலை அணிவிக்க கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா? என வாக்குவாதம் செய்தனர்.
- பின்னர் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பூட்டை கல்லால் உடைத்து கதவை திறந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா ஆலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர்.
அப்போது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும்படி வலியுறுத்தினர்.
இதற்கு கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா? என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் பூட்டை கல்லால் உடைத்து கதவை திறந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பாரதமாதா உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் பாரதமாதா நினைவாலய கேட்டின் பூட்டை உடைத்த முன்னாள் எம்.பி. ராமலிங்கம், மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், நிர்வாகிகள் ஆறுமுகம், மணி, மவுனகுரு உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த அமிர்தபாண்டியன் மகன் ஹரி பிரசாத் (23). சம்பவத்தன்று காலை இவர், பூமி உருண்டை தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம், முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற வசந்தராஜன் (34) என்பவரை கைது செய்தனர்.
வண்டியூர் ஏஞ்சல் நகர் வாணி முத்து மகன் வஜித்பாலா (24). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32) என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
தென்பரங்குன்றம், விஸ்வகர்மா தெருவை சேர்ந்த அலிகான் மகன் ஷாருக்கான் (24). சம்பவத்தன்று இரவு இவர் கிரிவலப் பாதையில் நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக், பாலா, சுறா ஆகியோரை கைது செய்தனர்.
- திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞசா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் அறிவுறுத்தலின்படி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அனுமந்தராயன் கோட்டை மேலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேலப்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது.அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மேலப்பட்டியை சேர்ந்த ரோஸி (வயது 46), பீட்டர் (38), பேகம்பூரை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (21), செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (22), காந்திநகர் காலனியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக அவர்களுக்குள் பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலப்பட்டியைச் சேர்ந்த ஜான், வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மதுரையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
மதுரை
மதுரை வண்டியூர், சங்கு நகரில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவா ளிகளை கைது செ ய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் சாது ரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று நோட்டமிட்டனர்.
அங்கு 10-க்கும் மேற்பட்ட கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களில் 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், கத்தி, 4 மிளகாய் பொடி பாக்கெட்டுகள், 3 கயிறுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரை பாலாஜி நகர், செந்தில் மகன் அஜய் (20), செங்கல்பட்டு மாவட்டம், மாத்தூர், மாரியம்மன் கோவில் தெரு, ஜெகன் (25), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், இந்திரா நகர், சிவராமன் மகன் லோகேஸ்வரன் (20), முனிச்சாலை கான்பாளையம், பாபுஜி மகன் பிரேம்குமார் (19), செங்கல்பட்டு மாவட்டம், செண்டிவாக்கம், மாதா கோவில் தெரு, மனோஜ் குமார் (30) என்பது தெரிய வந்தது.
அவர்கள் கூறுகையில், "மதுரை தாசில்தார் நகரை சேர்ந்த அஜய் மற்றும் முனிச்சாலை பிரேம்குமார் இருவரும் மதுரையில் கொள்ளை அடிப்பதற்காக நோட்டம் பார்த்து வந்தனர். இதில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத 10-க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அந்த பகுதிகளில் கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் ஆயுதங்களுடன் புறப்பட்டு வந்தோம். மதுரை மாநகரில் எந்தெந்த இடங்களில் கொள்ளையடிப்பது தொடர்பாக 5 பேரும் வண்டியூரில் கூடி சதி திட்டம் தீட்டினோம். இதனை தெரிந்து கொண்ட போலீசார் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்" என்று வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து மதுரை மாநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை அடிக்க பதுங்கி இருந்ததாக, 5 பேரையும் அண்ணா நகர் போலீசார் கைது செய்தனர்.
- கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் வழக்கு தொடந்தார்.
- 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கார்த்திகை ராணி(30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீரிவரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 30 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணம் வாங்கி வரச்சொல்லி கணவர் ரவிச்சந்திரன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகைராணி நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குதொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ரவிச்சந்திரன், பேபி, காமாட்சி, அழகுமலை, மலர்கொடி ஆகிய 5 பேர்மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் விரக்தி
- போலீஸ் விசாரித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சத்யாநகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயகுமாா் (38) இவா் சோளிங்கரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பனியாளா்களை ஏற்றிசெல்லும் பஸ்சை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்தார்.
இவருக்கும் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த தீபாவிற்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4-வயதில் தனுஷ்கா என்ற மகளும் ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனா்.
2-வது பிரசவத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்ற தீபா இதுவரை கணவா் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த ஜீன் மாதம் 8 -ம் தேதி ஜெயகுமார் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் சென்றார்.
இந்நிலையில் மனைவி தீபா மற்றும் அவரது குடும்பத்தினா் அவர் மீது கிருஷ்ணராஜபுரம் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் போலீசார் ஜெயகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயகுமார் நேற்று நள்ளிரவு இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது படுக்கைஅறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா்.
- பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
- அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கவரை கடகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது உறவினர் வேலுவின் குழந்தைகளான நேதாஜி (14), சகுந்தலாதேவி (12) ஆகியோரை தனது ஸ்கூட்டியில் உட்கார வைத்துக் கொண்டு அப்பம்பட்டில் இருந்து கவரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கவரை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஸ்கூட்டியில் சென்ற மேற்படி 3 பேரும் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு, சத்தியசீலன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்த குப்புசாமி மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மற்றவர்களுக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- பஸ்சில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர்.
- சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது.
திருப்பதி:
ஒடிசா மாநிலம் பவானி புறத்திலிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு 60 பயணிகளுடன் தனியார் பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த பஸ்சில் ஒடிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விஜயவாடாவில் வேலை செய்வதற்காக வந்து கொண்டு இருந்தனர்.
பஸ் இன்று காலை 6 மணிக்கு சிந்தூர் மண்டலம், எடுகுரல்லபள்ளி தேசிய நெடுஞ்சாலை மலைப்பாதையில் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து பத்ராச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய 35 பேரை மீட்டு சிகிச்சைக்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இடிபாடுகளில் சிக்கி தனேஷ்வர் (வயது 25) சுனை ஹரிஜன் (30) அவரது மகன் அர்ஜுன் (5) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த 30 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குமாரபாளையம்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ் குமாரபாளையம் நகரில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் குமாரபாளையம் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நகரின் அனைத்து பகுதியிலும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில், ஹான்ஸ் பதுக்கி வைத்த கே.ஒ.என். தியேட்டர் அருகே நாகராஜ் (வயது 63), ஆலங்காட்டுவலசு பகுதியில் சுப்ரமணி ( 44), ஓலைப்பாளையம் பகுதியில் ரத்தினசாமி, (56), பூபதி (36), பெராந்தர்காடு பகுதியில் ராஜேந்திரன் (53), ஆகிய 5 பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து 32 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
- கணக்காளரை கைது செய்தனர்
- கணக்கை காட்டாமல் மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலின் வளாகத்தில் தனியார் நிறுவனத்தினர் சார்பில் உணவு மையம் உள்ளது.
இங்கு கடந்த சில மாதங்களாக செல்வபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த பாலாஜி செல்வராஜ் (வயது 32) என்பவர் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அங்கு நடைபெறும் கணக்கு வரவு, செலவுகளை நிறுவனத்தினர் ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 289 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், அங்கு கணக்காளராக பணியாற்றிய பாலாஜி செல்வராஜ் உரிய கணக்கை காட்டாமல் கணக்கை மறைத்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் கேட்டபோது அவர் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் நிர்வாகத்தினர் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாலிபர் ஒருவர் பாலசுப்பிரமணியனிடம் நான் பணம் எடுத்து தருகிறேன் என கூறியுள்ளார்
- வாலிபர் கார்டை மாற்றி கொடுத்து, நூதன முறையில் திருடியது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். (வயது 56). இவர் சாயர்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சுந்தரவள்ளியும் அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். கடந்த 29-ந் தேதி பாலசுப்பிரமணியன் கே.டி.சி.நகர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது பணம் வரவில்லை. அவரது பின்னால் இருந்த வாலிபர் ஒருவர் பாலசுப்பிரமணியனிடம் கார்டை கொடுங்கள், நான் பணம் எடுத்து தருகிறேன்