என் மலர்

  நீங்கள் தேடியது "46 பேர் மீட்பு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிரடியாக போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அந்தியூர்-பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் 3887 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து கடையின் உரிமையாளர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் அப்பகுதியில் இருந்து ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

  இதையடுத்து 3887 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் பவானி, பெருந்துறை கோபி, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் கடைகளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

  நேற்று ஒரே நாளில் மட்டும் 4, 840 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹான்ஸ் புகையிலை விற்றதாக 46 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

  இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மங்களூரு கடற்பகுதியில் தீப்பிடித்த ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த 16 விஞ்ஞானிகள் உள்பட 46 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். #IndianCoastGuard #ShipFire
  மங்களூரு:

  கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்பகுதியில் நேற்று இரவு சாகர் சம்படா என்ற ஆராய்ச்சிக் கப்பல் சென்றுகொண்டிருந்தது. அதில் கப்பல் ஊழியர்கள் 30 பேர், 16 விஞ்ஞானிகள் பயணம் செய்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.  கடலோர காவல் படையின் விக்ரம், ஷூர் ஆகிய கப்பல்களில் வீரர்கள் விரைந்து சென்று, சாகர் சம்படா கப்பலில் பிடித்த தீயை அணைத்தனர். கப்பலில் பயணம் செய்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பின்னர் சாகர் சம்படா கப்பலை மங்களூரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

  கப்பல் தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #IndianCoastGuard #ShipFire

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் இன்று 46 அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #CitizenshipBill #AssamBandh
  கவுகாத்தி:

  மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

  இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 46 அமைப்புகள் சார்பில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.  ஆனால், முழு அடைப்பு போராட்டத்திற்கு மாநில பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு செல்ல வேண்டும் என்றும், முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும் வர்த்தக நிறுவனங்களின் லைசென்சுகள் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. #CitizenshipBill #AssamBandh
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.ஆர்.பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘46’ திரைப்படம் இல்லீகல் பைக் ரேஸின் கொடூரத்தை தோலுரித்து காட்ட வருகிறது. #46Movie
  விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் டி.ஆர்.பாலா. மேலும் 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது '46' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

  இந்தப்படத்தில் காத்திருப்போர் பட்டியலில் நடித்த சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை ஹீரோ கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி மற்றும் கியான் ஆகியோர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

  சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்.

  இந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த இல்லீகல் பைக் ரேஸில் பலரும் கலந்துகொள்கிறார்கள். இவர்களின் தவறுகளையும் இந்த திறமையை சிலர் தங்களது சுயலாபத்துக்காக எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக்காட்டியுள்ளார்களாம். அந்தவகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம்.   "இந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசன்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தினோம். இதற்காக தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினோம்.. குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகத் தத்ரூபமாக எடுத்துள்ளோம்" என்கிறார் இயக்குநர் டி.ஆர்.பாலா. 

  "சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள் தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண் தான் 46.. அதை பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் '46' என்றே டைட்டில் வைத்துவிட்டோம்" என்கிறார் இயக்குநர் TR.பாலா.
  ×