search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 People arrested"

    சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்ற 4 பேர் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காடீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது‌. இன்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அப்போது பெரியக்காட்டுபாளையம் பகுதியில் திடீரென்று மின்சார தடை ஏற்பட்டு இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது கோவிலில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டு வந்ததால், சந்தேகம் வந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் கொண்ட கும்பல் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 4 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 4 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.இதனை தொடர்ந்து ரெட்டிச் சாவடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சென்னை கோட்டூர்புரம் சேர்ந்தவர்கள் கரண் (வயது 18), செல்வம் (வயது 24), சூரிய பிரகாஷ் (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றதாகவும், அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    கரூர்:

    குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு, சிவாயம், கணக்கப்பிள்ளையூர், மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் அங்கு மது விற்ற கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 55), மேலபட்டியை சேர்ந்த வையாபுரி (62), கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த தமிழழகன் (62), மலைப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 23 பதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    • சாணார்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி அப்பகுதி கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த வைத்திருந்த 480 கிலோ குட்கா பறிமுதல் செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் குட்கா மற்றும் போதை பாக்குகள் விற்க தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாணார்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி அப்பகுதி கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக திண்டு க்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுபடி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூத் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து காரில் குட்கா கடத்தி வந்து கொசவபட்டியில் உள்ள வீட்டில் பதுக்கி இருப்பது தெரிய வந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் ஆர்.எம். காலனி மேற்கு அசோக்நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது42), வேடசந்தூர் மாரம்பாடியை சேர்ந்த சத்யா (35), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து வெளி மாநிலங்களில் இருந்தும் குட்கா கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதற்காக கொசவபட்டியில் உள்ள அலெக்சின் தாயார் வீட்டில் குட்கா பதுக்கியதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அலெக்சின் தாயார் அமுதா (47)வையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 480 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர். அவர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நடன கலைஞரை ஒரு கும்பல் கத்தியால் குத்தினர்.
    • இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் என்ற தேவா. இவர் திண்டுக்கல் விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் மோகன்பிரகாஷ்(24). இவரும் கக்கன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(20) என்பவரும் நடனக்குழு ஆரம்பிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.காலனியில் நடனக்குழுவை அமைத்தனர்.

    ஆனால் அதில் போதிய வருவாய் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்ச்செல்வன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு மோகன் பிரகாசிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்று நடனப்பள்ளி அருகே மோகன்பிரகாஷ் நடந்து வந்த போது தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த மோகன்பிரகாசை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்குபதிவு செய்து மோகன்பிரகாசை கத்தியால் குத்திய தமிழ்ச்செல்வன், கக்கன்நகரை சேர்ந்த சங்கர்கார்த்திக்(22), சங்கரபாண்டி(18), தமிழரசன்(22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    • திண்டுக்கல்லில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கஞ்சா பதுக்கி விற்ற 4 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல்லில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி தனிப்படையினர் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி, தாடிக்கொம்பு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் தாடிக்கொம்பு அடுத்த செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பின்பு விசாரணையில் சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    அந்த வீட்டில் இருந்த கன்னிவாடி அடுத்த தெத்துப்பட்டியை சேர்ந்த வைரவன் (28), அவரது மனைவி நவீனா (22), அவரது அண்ணன் சுந்தரபாண்டி (35), அதே ஊரைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (20), ஆகிய 4 பேரை பிடித்து அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்ேடாங்கரே உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்ேடாங்கரே உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பலர் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    கடமலைக்குண்டு பகுதியில் நூதனமுறையில் ஆட்ேடாவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பாலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பாலூத்து கிராமத்தை சேர்ந்த ஜெயபால்(55), அவரது மகள் சத்யா(39), மகன் ஜெயசூர்யா(38) மற்றும் ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி(23) ஆகிய 4 பேரும் சேர்ந்து ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மேலும் ஆட்டோ மற்றும் அவர்களிடமிருந்த ரூ.40ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினர். இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள். யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேசன் அரிசி பதுக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 13 டன் ரேசன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சரக்கு வாகனம் உள்பட 6 வானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் சின்னாளபட்டி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நல்லதம்பி, ஏட்டு ராஜசேகர் அடங்கிய குழுவினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் அரிசி மூடைகளை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    இதில் சின்னாளபட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது27) என்பவர் வீட்டில் பதுக்கி கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. அங்கிருந்த 13 டன் ரேசன் அரிசி மூடைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சரக்கு வாகனம் உள்பட 6 வானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரேசன் அரிசி கடத்திய சதீஷ்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த லோடுமேன்கள் முருகபவனத்தை சேர்ந்த சிங்கராஜ் (36), பெரியபள்ளப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (42), எரியோட்டை சேர்ந்த ராஜா (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ரேசன் அரிசியை யாரிடம் இருந்து பெற்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • முன்விரோதம் காரணமாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் முத்தழகுபட்டிைய சேர்ந்த வின்சென்ட் மகன் எட்வின்சோபத்(25). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஆர்.வி.நகர் முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

    இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த எட்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முத்தழகுபட்டியை சேர்ந்த வெஸ்லின்அபிஷேக்(23), நவீன்ராஜா(25), எடிசன் சக்கரவர்த்தி்(22), எவின் (21) ஆகியோர் ெகாலை செய்தது தெரியவந்தது.

    அபிஷேக்கின் சகோதரியை எட்வின்சோபத் காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று அவருடன் தனிமையில் இருந்ததை கண்டித்ததாகவும் இதனால் அவர்களுக்குள் முன்விேராதம் ஏற்பட்டது. இதனால் அபிஷேக் தனது நண்பர்களுடன் சேர்ந்த எட்வின்சோபத்தை வெட்டிவிட்டு அவரது பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×