என் மலர்

  நீங்கள் தேடியது "4 பேர் பலி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது.
  • ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

  ராசிபுரம்:

  ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது. அப்போது சப்பை யபுரத்தைச் சேர்ந்த அஜித் ( வயது 25) என்பவருக்கும் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரையும் சமா தானம் செய்து அனுப்பி வைத்தனர்.

  இந்த நிலையில் மறுநாள் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பெரியசாமி(27), ராஜேஸ்குமார் (28), ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சபரி (18) ஆகியோர் அஜித் வீட்டுக்குச் சென்று அஜித் மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன் ஆகி யோரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அஜித் மட்டும் ஹரிஹரன் இருவரும் ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சக்திவேல், பெரியசாமி, ராஜேஷ்குமார், சபரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்துள்ளனர்.
  • 4 பேரை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

  தருமபுரி,

  தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியைச் சேர்ந்த முனியப்பன்-கோவிந்தம்மாள் தம்பதி யினருக்கு செந்தில்குமார், சண்முகம், சத்யா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக இருந்து வருகின்றனர்.

  முனியப்பனின் பூர்வீக சொத்தாக 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த 85 சென்ட்டில், மகள் சத்யாவிற்கு 35 சென்ட் பிரித்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள நிலத்தை பிரிப்பதில் செந்தில்குமார், சண்முகம், சத்யா ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி இரவு செந்தில்குமார் வீட்டின் முன்பு முனியப்பன், கோவிந்தம்மாள், சத்யா, கோபிநாத், ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

  அப்பொழுது செந்தில்கு மாரின் மனைவி கவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனை அறிந்த செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்து கேட்டுள்ளார். அப்பொழுது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கவிதா இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்துள்ளனர்.

  இதில் தாக்குத லுக்குள்ளான செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் படுக்காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கவிதாவை கடுமையாக தாக்கும் வீடியோ அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

  இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து முனியப்பன், கோவிந்தம்மாள், சத்யா மற்றும் சத்யாவின் மகன் கோபிநாத் ஆகிய 4 பேரையும் தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காருக்குள் பெட்டி,பெட்டியாக கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
  • மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  ஓசூர்,

  ஓசூர் அருகே மாநில எல்லையான சிப்காட் பகுதியில், நேற்று ஓசூர் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில்,போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக, ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் பெட்டி,பெட்டியாக கர்நாடக மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

  விசாரணையில், பெங்களூருவில் இருந்து அவற்றை திருப்பத்தூருக்கு காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையத்து கர்நாடக மது பாட்டில்களை கடத்திச்சென்ற திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே துக்கியம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (34), குமார் (30), வாணியம்பாடி அருகே சின்ன களியம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபு (33) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கீரனப்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  மேலும் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 1லட்சம் மதிப்புள்ள 15 பெட்டி கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.
  • அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் பெருமாபாளையம் பெரளிமேடு பகுதியில் வெள்ளோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் வந்தது.

  இதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டதாக கவுண்டச்சிபாளையம் துய்யம்பூந்துறையை சேர்ந்த சதீஷ்குமார் (32), அவல்பூந்துறையை சேர்ந்த ஞானதண்டபாணி (43), சோலார் புதூரை சேர்ந்த செந்தில்ராஜ் (44), குயிலான்தோப்பை சேர்ந்த மாதேஷ்வரன் (38) ஆகிய 4 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

  மேலும் அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.600 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  கடலூர்:

  விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பியோ தங்கதுரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

  இதில் 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம் பகுதியில் சதீஷ் மற்றும் ஆனந்த், கச்சிராயநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் பாலகொல்லையை சேர்ந்த துரைசாமி ஆகியோர் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

  மதுரை

  மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

  இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

  அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

  அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முகமது ரியாஸ் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.
  • பலூன் வியாபாரி முகமது ரியாசிடம், ஆரோக்கிய–செல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்

  திருச்சி :

  திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது22). பலூன் வியாபாரியான இவர் காஜா பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பலூன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

  அப்பொழுது அங்கு வந்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

  இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் பலூன் வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை இன்ஸ்பெக்டர் நிக்ஸன், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

  இதே போல் திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிந்தாமணி பஜார் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்த சிந்தாமணியை சேர்ந்த வீரமணி(24), பாஸ்கர்(36) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

  இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சப் - இன்ஸ்பெக்டர் சட்டநாதன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரிஷிவந்தியம் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
  • கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

  கள்ளக்குறிச்சி: 

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலத்தில் குடிபோதையில் இருந்த முதியவரை தாக்கி பணம் பறித்த சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அந்த முதியவரிடம் கட்டுகட்டாக பணம் இருப்பதை சிலர் பார்த்தனர்.

  திருமங்கலம்

  திண்டுக்கல்லை சேர்ந்தவர் காஷாமைதீன்(வயது64). தீபாவளி-பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இவர் திருமங்கலத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வந்து பணிபுரிவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அந்த ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

  இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி கடை உரிமையாளரிடம் வேலை பார்த்ததற்கான மீதி ஊதியம் ரூ.11ஆயிரத்து500 பணத்தை வாங்கிக்கொண்டு தனது ஊருக்கு கிளம்பினார். அதற்கு முன்பு திருமங்கலம் தாலூகா அலுவலகம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் அருகே இருந்த பெட்டிக்கடையில் வாழைப்பழம் சாப்பிட்டார்.

  அப்போது காஷாமைதீனிடம் கட்டுகட்டாக பணம் இருப்பதை சிலர் பார்த்தனர். அவரிடமிருந்து பணத்தினை பறிக்க அவர்கள் திட்டம் தீட்டி காஷாமைதீனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவரை அந்த நபர்கள் மது அருந்த அழைத்துள்ளனர்.

  காஷாமைதீனும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். விருதுநகர் ரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மதுபான கடையில் மதுவாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அவரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கரிசல்பட்டி நான்கு வழிச்சாலைக்கு அழைத்து சென்றனர்.

  அங்கு ஆட்கள் இல்லாத இடத்தில் காஷாமைதீனை இறக்கிவிட்டு சரமாரியாக தாக்கிய அந்த கும்பல், அவரிடமிருந்த ரொக்கபணம் ரூ.11ஆயிரத்து500 மற்றும் செல்போன், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் சாலையோரம் மயங்கிக்கிடந்த காஷாமைதீனை மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காஷாமைதீன் பணிபுரிந்த ஜவுளிக்கடையை சேர்ந்த முகமது இத்ரீஸ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் மதுபான கடையில் இருந்த கண்காணிப்பு காமிரா உதவியுடன் காஷாமைதீனை தாக்கி பணம்-செல்போன் பறித்து சென்ற திருமங்கலம் கூழையாபுரத்தினை சேர்ந்த முத்துவேல்(19), சோமசுந்தரம் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(19), 17 வயது சிறுவர்கள் 2 பேர் என 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.
  • மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செம்பட்டி:

  திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் தெற்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 60). பழைய இரும்புகளை சேகரிக்கும் வியாபாரி. இவருடைய மனைவி கலையரசி (56). இவர்களுக்கு கனகராஜ் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.

  கடந்த 27-ந் தேதி சின்னத்துரையை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

  இந்த கொலை வழக்கில் வக்கம்பட்டியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (34), பித்தளைப்பட்டியைச் சேர்ந்த சின்னவர் (34), மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சதீஸ் (24), பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

  கும்மம்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக்கிய குற்றவாளியான தாமரைக்கண்ணன் (30), கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.

  திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  சம்பவத்தன்று பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தபோது சின்னத்துரைக்கும், தாமரைக்கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சின்னத்துரையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரையும், தாமரைக்கண்ணனை தாக்கினார். முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களான விஜயகுமார், சின்னவர், விக்னேஷ், சதீஸ் ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.

  அவர்கள் சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரது மனைவி கண் முன்னே சின்னத்துரையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

  மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டிவனம் பகுதியில் காரில் ஆடு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • 20 ஆடுகள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது.

  விழுப்புரம்:

  திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகே ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போலீசார் செந்தில், சங்கர், பூபாலன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த ஒரு காரை மடக்கிய போது அதிலி ருந்து நபர்கள் தப்ப ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் ஆடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  விசாரணையில் திண்டி வனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த குமார் (வயது 25), சத்யராஜ் (26), சுதாகர் (22), கமல் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரம் செய்வதற்கா கவும், கடைகளில் விற்பனை செய்வதற்காகவும் ஆடு திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 20 ஆடுகள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது. ஆடு திருடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo