என் மலர்

  நீங்கள் தேடியது "4 பேர் பலி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
  • அப்போது அனுமதியன்றி மது விற்ற 4 பேரை கைது செய்தனர்.

  அரியலூர்

  அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

  அப்போது தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூரை சேர்ந்த ராம்குமார் (வயது 17) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (21) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த வைகுண்டன் (43) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களும், நாயகனைபிரியாள் வடக்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (58) என்பவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதையடுத்து, மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை செல்லும் 4 வழிச்சாலையில் திருப்பதிசாரம் பகுதியில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
  • 4 வழிச்சாலை பயன் பாட்டுக்கு வரும் போது சுங்கசாவடி திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  நாகர்கோவில் :

  காவல்கிணறு முதல் களியக்காவிளை வரை செல்லும் 4 வழிச்சாலையில் திருப்பதிசாரம் பகுதியில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையம் இன்று (24-ந் தேதி) முதல் செயல்பட தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த சுங்க கட்டணம் மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த நிலையில் இன்று முதல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்த சுங்க கட்டண மையம் செயல்படவில்லை. வழக்கம் போல கட்டணங்கள் எதுவும் இல்லாமல் சுங்க சாவடியின் ஒருபகுதி வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

  4 வழிச்சாலை பயன் பாட்டுக்கு வரும் போது சுங்கசாவடி திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தார்

  திருச்சி:

  முசிறி அடுத்த ஆமூர் பழைய புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 43) கட்டிட தொழிலாளியாக இவர், சம்பவத்தன்று முசிறி பூங்கா ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது எம் புதுப்பட்டி சொரியம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் தியாகராஜன் (38 ), அவரது தம்பி பாலு(25), அதே பகுதியை சேர்ந்த நெடுமாறன் மகன் கோவிந்தராஜ் (22), சண்முகம் மகன் ராஜேஷ்(19) ஆகியோர், தியாகராஜனிடம் தகராறில் ஈடுபட்டதோடு, தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் காயம் அடைந்த விஜயராஜ் கொடுத்த புகாரின் பேரில் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

  கோவை,

  கோவை ரத்தினபுரி டாடாபாத் 9-வது வீதியில் உள்ள பள்ளி அருகே சிலர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

  அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

  அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகளை வாங்கி அதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தி வந்ததும், இங்கு போதை மாத்திரை விற்பதற்காக நின்றதும் தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (வயது 18) மற்றும் 16 வயது சிறுவன், தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படிக்கும் தனபாலன் (19), மருந்து கடையில் போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1304 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வானூர் அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் கஞ்சா, புகயிலைப் பொருட்கள் மற்றும் மது கடத்தல் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட செயல்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையி லான போலீசார் நேற்று புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் 4 வழிச்சாலையில் கொண்டா மூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.

  அப்போது அந்த வழி யாக 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த னர். உடனே போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்த னர். அந்த சோதனையில் அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த அதே பகுதி யை சேர்ந்த தினேஷ் (வயது 24), ரூபன் ராஜ் (23), வாஞ்சிநாதன் (25) உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
  • செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்து க்களை சேதப்ப டுத்தியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சோலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி கண்டன் (வயது 22), மேலும் போலீசார் மீது கற்களை வீசி வன்முறை யில் ஈடுபட்டதாக சின்ன சேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (46), தெங்கியா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (41), சங்கரா புரம் அருகே செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மானாமதுரை 4 வழிச்சாலையில் தடுப்புசுவர் இல்லை.
  • கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

  மானாமதுரை

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பூர்வீக வைகைபாசனபகுதியாகும். வைகை ஆற்றின் கரைபகுதியில் மதுரை- ராமேசுவரம் 4 வழிசாலை உள்ளது. திருப்புவனம் முதல் மானாமதுரை மேலபசலை ரெயில் மேம்பாலம் வரை கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் உள்ளது. 3 முறை வைகை அணை நிரம்பியதால் 2 மாதங்களாக வைகை ஆற்றில் வந்த தண்ணீர் சாலையோர கால்வாய்களில் செல்கிறது. இந்த சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் இல்லை. கடந்த ஆண்டு மார்நாடு கால்வாயில் தண்ணீர் சென்றபோது நிலை தடுமாறி கார் கால்வாய்க்குள் பாய்ந்தது.

  பின்னால் வந்த திருப்புவனத்தை சேர்ந்த வாடகை கார் டிரைவர் உடனடியாக தண்ணீரில் நீந்தி காரில் இருந்தவர்களை மீட்டார். கால்வாய்களில் தண்ணீர் இல்லாத போதும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

  விபத்துக்களை தடுக்கும் வகையில் மதுரை-ராமேசுவரம் 4 வழிசாலையில் உள்ள கால்வாய் கரைகளில் தடுப்பு சுவர்கள், தற்காலிக இரும்பு வேலி தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார்

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, டி.கீரனூர் முகமது நகரை சேர்ந்தவர் கமருதீனின் மனைவி செல்வகனி என்கிற சையது அம்மாள்(வயது 57). இவர் கடந்த 30-ந் தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வெள்ளூர் கிராமத்தில் ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சையது அம்மாள் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது.

  இந்த சத்தத்தை கேட்ட அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அஜீஸ் (24) என்பவர் வந்து சந்தேகத்துடன் சையது அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அஜீஸ் அக்கம், பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரிடம் பொதுமக்கள் மர்மநபரை ஒப்படைத்தனர். இதையடுத்து மர்மநபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுப்ப ணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
  • இந்த ஏரியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 10-க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திற்கு புகார் சென்றது.

  ஆத்தூர்:

  சேலம் மாவட்டம் தலைவாசல் பேருந்து நிலையம் அருகே பொதுப்ப

  கைதான 4 பேர்.    

  கைதான 4 பேர்.    

   

  ணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக 10-க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகத்திற்கு புகார் சென்றது.

  இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் ஏரி பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்க ளில் மண் கடத்திக் கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

  இதில் 4 பேர் போலீ சாரிடம் சிக்கினர். மேலும் 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு பகுதியை சேர்ந்த சிவமணி(32), தலைவாசல் பட்டுதுறையை சேர்ந்த சரவணன் (36) செல்வம்(30), மும்முடி பகுதியை சேர்ந்த பூபதி (47) என்பது தெரியவந்தது.

  4 பேரையும் கைது செய்த போலீசார் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் வாகனத்தை யும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முக்கிய குற்றவா ளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

  மேலும் இந்த டிராக்டர் வாகனங்களை விடுவிக்க வேண்டும் என டிராக்டர் உரிமையாளர் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளே சென்று ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தனர். உடனடியாக அவர்களை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இரு தரப்பினர் மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கோவில் நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுவயலூரில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் யார் விவசாயம் பார்ப்பது? என்பது தொடர்பாக சிறுவயலூரை சேர்ந்த ராஜேந்திரன் தரப்பிற்கும், சிவகுமார் தரப்பிற்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை போன்றவற்றால் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் ராஜேந்திரன் மற்றும் வீரமுத்து ஆகியோர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சிறுவயலூரைச் சேர்ந்த சிவகுமார் (45), செல்லமுத்து (32), மாயவேல் (43), பாபு (30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்."

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்
  • 2 சேவல், 2 கத்தி பறிமுதல்

  கரூர்:

  கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகேயுள்ள அத்திபாளையம்புதூர் தனியார் கிரஷர் அருகே நொய்யல் ஆற்றுப்படுகையில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக க.பரமத்தி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது அங்கு சேவல் காலில் கத்திக்கட்டி சண்டை நடத்திய கூலித்தொழிலாளிகளான முன்னூர் தமிழரசன் (வயது 29), புன்னம்சத்திரம் பிள்ளையார் கோயில் தெரு திலிப் (21), பெருமாள் நகர் மாதேஷ் (23), ஈரோடு மாவட்டம் குப்பம்பாளையம் வஉசி நகர் சந்திரசேகர் (34) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து, 2 சேவல்கள், 2 கத்திகளை க.பரமத்தி போலீசார் பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நகர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • கஞ்சா கடத்திய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

  கம்பம்:

  தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக நகர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  கோம்பை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்று ெகாண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தனர்.

  அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து கோம்பையை சேர்ந்த ருத்ரன்(26), ஞானேசன்(44), அலெக்ஸ்பாண்டியன்(24), நெல்லுகுத்தி புளியமரம் தெருவை சேர்ந்த ஈஸ்வரன்(48) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.