என் மலர்

  நீங்கள் தேடியது "4ஜி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சப்-இன்ஸ்பெக்டர் உத்தமசோழபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
  • அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

  சேலம்:

  சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் இவர் நேற்று உத்தமசோழபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளி எதிரில் 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் அந்த 4 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 4,500 பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 48), பூலாவரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 72), உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 40), நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் வயது 60 என்பது தெரியவந்தது.கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோட்டில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.
  • இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 15 நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மேலும் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

  மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 961 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

  தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய டெலிகாம் சந்தையில் அதிவேக 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது. #RelianceJio  இந்திய டெலிகாம் சந்தையில் மார்ச் 2019 இல் சராசரியாக 22.2Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  பிப்ரவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்கியிருந்த நிலையில் மார்ச் மாதத்தில் இணைய வேகம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 4ஜி வேகம் வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முன்னணி இடம் பிடித்து வருகிறது. 

  அந்த வகையில் மார்ச் மாதத்தில் ஜியோ வழங்கிய டேட்டா வேகம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விட இருமடங்கு அதிகமாகும். இத்துடன் 2018 ஆம் ஆண்டு முழுக்க வேகமான 4ஜி டவுன்லோடு வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்தது.   பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டவுன்லோடு வேகம் பிப்ரவரியில் 9.4Mbps ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் டேட்டா வேகம் 9.3Mbps ஆக இருந்தது என டிராய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட போதும், டிராய் இருநிறுவனங்களின் விவரங்களை தனியாகவே வெளியிட்டிருக்கிறது. 

  வோடபோனின் சராசரி 4ஜி டவுன்லோடு வேகம் மார்ச் மாதத்தில் 7Mbps ஆக இருந்தது. ஐடியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5.6Mbps வேகம் வழங்கியிருக்கிறது. இருநிறுவனங்களும் பிப்ரவரி மாதத்தில் முறையே 6.8Mbps மற்றும் 5.7Mbps வேகம் வழங்கியிருக்கின்றன.

  வோடபோன் நிறுவனம் 4ஜி அப்லோட்களில் முதலிடம் பிடித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் வோடபோன் அப்லோடு வேகம் 6Mbps ஆக இருந்தது. ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் அப்லோடு வேகம் முறையே 5.5Mbps மற்றும் 3.6Mbps ஆக இருந்தது. ஜியோவின் அப்லோடு வேகம் 4.6Mbps ஆக இருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா முழுக்க 4ஜி சிக்னல் பரப்பளவு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. #4G  ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் சீராக கிடைக்கவில்லை என பலரும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை அதிரச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

  இந்தியாவில் 4ஜி சேவை கிடைக்கும் 50 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு குறைந்தபட்சம் 87 சதவிகிதம் என தெரியவந்துள்ளது. இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் 4ஜி சிக்னல் பரப்பளவு 95.3 சதவிகிதமாக இருக்கிறது.

  4ஜி சிக்னல் பரப்பளவில் இரு இந்திய நகரங்கள் 95 சதவிகித அளவை கடந்துள்ளன. அந்த வகையில் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சி இரண்டாவது இடம்பிடித்திருக்கிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் 50 இந்திய நகரங்கள் 4ஜி பரப்பளவில் 87 மற்றும் அதற்கும் அதிகளவு புள்ளிகளை பெற்றிருக்கின்றன. இது வரும் காலங்களில் மேலும் வளர்ச்சியடையும் என தெரிகிறது.
  தன்பாத், ராஞ்சியை தொடர்ந்து ஸ்ரீநகர், ராய்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில் பாட்னாவில் 4ஜி சிக்னல் பரப்பளவு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இரண்டு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

  ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி இந்தியாவின் பெருநகரங்கள் 4ஜி சிக்னல் பரப்பளவில் சிறு பகுதிதளை வீழ்த்த முடியவில்லை. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சிக்னல் பரப்பளவு 90 சதவிகிதத்திற்கு கீழ் இருக்கிறது. 

  இந்த அறிக்கையின் படி சென்னையில் 4ஜி சிக்னல் பரப்பளவு 91.1 சதவிகிதம் ஆகும். முன்னதாக ஜனவரி மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகங்களில் நவி மும்பை முதலிடம் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் அலகாபாத் கடைசி இடம் பிடித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #RelianceJio
  இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ 20.9Mbps வேகத்தில் 4ஜி டவுன்லோடு வழங்கியிருக்கிறது. 

  மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்குகிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி 2019 இல் 9.4Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து வோடபோன் நிறுவனம் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருக்கிறது.

  ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை தொடர்ந்து ஐடியா நிறுவனம் 5.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. டிராயின் மைஸ்பீடு தளத்தில் வெளியாகியிருக்கும் புதிய தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. 


  ஜனவரி 2019 இல் ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி டேட்டா வேகம் 18.8Mbps ஆக இருந்தது. அதிவேக டேட்டா வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்து வருவதை போன்று ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜனவரி 2019 இல் ஏர்டெலின் டேட்டா வேகம் 9.5Mbps ஆக இருந்தது. 

  வோடபோன் நிறுவனம் பிப்ரவரியில் 6.7Mbps வேகத்தில் 4ஜி டேட்டா வழங்கியிருக்கிறது. இந்நிறுவனம் ஜனவரி மாதத்தில் 6.8Mbps வேகத்தில் டேட்டா வழங்கியிருந்தது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்துவிட்டதால், டிராய் தனது வேகப்பட்டியிலில் இருநிறுவனங்களை தனித்தனியாகவே பட்டியலிடுகிறது.

  ஐடியா நிறுவனம் 5.5Mbps வேகத்தில் 4ஜி சேவை வழங்கியிருக்கிறது. வோடபோன் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 6.0Mbps வேகத்தில் டேட்டா வழங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் வோடபோன் 5.4Mbps வேகத்தில் டேட்டா வழங்கியது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா முழுக்க அதிவேக 4ஜி டேட்டா பெறும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #4G #internet

   

  இந்தியாவில் 4ஜி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நவி மும்பை பகுதியில் வசிப்போர் அதிவேக டவுன்லோடு வேகத்தை அனுபவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் மும்பை முதலிடம் பிடித்துள்ளது. மும்பையில் 4ஜி டவுன்லோடு வேகம் சராசரியாக 8.1Mbps ஆக இருந்ததாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

  லண்டனை சேர்ந்த ஓபன்சிக்னல் மேற்கொண்ட ஆய்வின்படி இந்தியாவில் மிகக்குறைந்த டேட்டா பெறும் நகரமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் அதிகபட்ச டேட்டா வேகம் சராசரியாக 4Mbps ஆக இருந்துள்ளது.   இந்தியாவின் 20 நகரங்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகாலை 4.00 மணிக்கு சராசரியாக 16.8Mbps டவுன்லோடு வேகம் பெற்றிருக்கின்றனர். தினசரி அடிப்படையில் டேட்டா வேகம் சராசரியாக 6.5Mbps ஆக இருந்தது. இரவு நேரங்களில் டவுன்லோடு வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது.

  இந்தியர்கள் வசிக்கும் நகரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விதமான 4ஜி டவுன்லோடு வேகங்களை அனுபவிக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவின் 20 நகரங்களில் நவி மும்பை அதிவேக டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது.   "இந்தியாவில் எப்போதும் சீரான டேட்டா வேகம் வழங்கிய நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அலகாபாத்தில் டேட்டா வேகம் சீரற்று இருக்கிறது. அனைத்து நகரங்களிலும் 4ஜி டவுன்லோடு வேகங்கள் தினசரி அடிப்படையில் ஒவ்வொரு மணிக்கும் மாறிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் டேட்டா வேகம் 4.5 மடங்கு அதிகமாக இருக்கிறது" என ஓபன்சிக்னல் தொழில்நுட்ப ஆய்வாளர் ஃபிராசெஸ்கோ ரிசாடோ தெரிவித்தார்.

  இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் நாள் முழுக்க டேட்டா வேகம் குறைய துவங்கி இரவு 10.00 மணி வாக்கில் டேட்டா வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. இரவு நேரங்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கு சேவைகளை இண்டர்நெட் மூலம் மொபைல்களில் பயன்படுத்துவதால் டேட்டா வேகம் குறைகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) பிளே ஸ்டேஷன் 4இல் வெளியாகிறது. இதன் வெளியீடு மற்றும் பி.எஸ். 4 டிஸ்க் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #PUBG #Playstation4  பிளேயர் அன்-நோன் பேட்டிள்கிரவுன்ட் (பப்ஜி) கேம் பிளே ஸ்டேஷன் 4ல் அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. பப்ஜி கார்ப் மற்றும் சோனி இத்தகவலை உறுதி செய்திருப்பதோடு, இவை டிஸ்க் வடிவில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளன.

  பப்ஜி பி.எஸ்.4 இந்திய வெளியீடு குறித்து சோனி இந்தியா சார்பில் எவ்வித தகவலும் இல்லாத நிலையில், பல்வேறு விற்பனையாளர்கள் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் இந்திய வெளீயட்டை உறுதி செய்துள்ளன. இது பப்ஜி பி.எஸ்.4 டிஜிட்டல் வெர்ஷனை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

  இந்தியாவில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையில் டிசம்பர் 7ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இதே தேதியில் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிகிறது. இந்தியாவில் டிஜிட்டல் வடிவம் ரூ.2,750 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிஸ்க் விலை ரூ.1,999 முதல் துவங்குகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பப்ஜி பி.எஸ்.4 டிஸ்க் கிடைக்கும்.  பப்ஜி பி.எஸ்.4 விலை மற்றும் விவரங்கள்

  டிஸ்க் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.1,999
  லூட்டர்ஸ் டிஜிட்டல் எடிஷன் பேஸ் கேம் விலை ரூ.2,750
  சர்வைவர்ஸ் டிஜிட்டல் எடிஷன் 
  பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 2,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.2,750
  சேம்பியன் டிஜிட்டல் எடிஷன்
  பேஸ் கேம், விகென்டி ஈவென்ட் பாஸ், 6,300 ஜி-காயின் பேக், 20,000 விலை ரூ.3,999

  பப்ஜி சர்வைவர்ஸ் மற்றும் லூட்டர்ஸ் எடிஷன் டிஸ்க் ஒரே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது சோனி தரப்பில் நடைபெற்று இருக்கும் பிழையாக இருக்கலாம் என்றும் இது திறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் ‘பி.எஸ்.4’ ரக வாகனங்களை விற்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. #BS4Vehicle #SupremeCourt
  புதுடெல்லி:

  மோட்டார் வாகனங்கள் மூலம் காற்று மாசுபடுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, வாகனங்கள் மாசு வெளியிடுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் ‘பாரத் ஸ்டேஜ்’ (பி.எஸ்.) என்ற பெயரில் தர நிறுவனம் ஒன்றை அரசு நிறுவியுள்ளது.  இந்த நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், வாகன தயாரிப்பு தொடர்பான பல்வேறு ஒழுங்கு விதிகளை வெளியிடுகிறது. அந்த விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் வாகனங்களை மட்டுமே நாடு முழுவதும் விற்கவும், பதிவு செய்யவும் முடியும்.

  அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பி.எஸ்.4 விதிமுறைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே நாடு முழுவதும் விற்பனையும், பதிவும் செய்யப்பட்டு வருகிறது.

  முன்னதாக அமலில் இருந்த பி.எஸ்.5 விதிமுறைகளை முற்றிலும் கைவிடுவதாக 2016-ல் அறிவித்த மத்திய அரசு, 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பி.எஸ்.6 ரக விதிமுறைகள் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது.

  ஆனால் பி.எஸ்.4 ரக வாகன விற்பனைக்கு சலுகை காலம் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மதன் பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

  அப்போது, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ்.4 ரக வாகனங்கள் விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது முதல் பி.எஸ்.6 ரக வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கண்டிப்பாக கூறிய நீதிபதிகள், தூய்மையான எரிபொருளை பயன்படுத்துவதற்கான நேரம் இது எனவும் குறிப்பிட்டனர்.

  முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, ‘2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை பி.எஸ்.4 ரக வாகனங்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு தங்களுக்கு அனுமதி அளித்திருப்பதாகவும், எனவே தாங்கள் இருப்பு வைத்துள்ள வாகனங்களை விற்க உரிய காலம் வழங்கப்பட வேண்டும்’ எனவும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாதிட்டன.

  ஆனால் காற்று மாசு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல் அபராஜிதா சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக 2020-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை தயாரிக்கப்படும் வாகனங்களை விற்பதற்கு அந்த ஆண்டு ஜூன் 30 வரையும், கனரக வாகனங்களை விற்பதற்கு அதே ஆண்டு செப்டம்பர் 30 வரையும் சலுகை காலம் அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் துவங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், விரைவில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவைகள் துவங்கப்பட இருக்கிறது. #BSNL  இந்தியாவில் 2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 4ஜி சேவைகளை வழங்க ரூ.13,885 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரமை கைப்பற்ற விரிவான அறிக்கை 2017-ம் ஆண்டில் பி.எஸ்.என்.எல். சார்பில் சமர்பிக்கப்பட்டது. 

  இதைத் தொடர்ந்து அரசு சார்பில் முதலீடாக ரூ.6,652 கோடி பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மந்திரி சபை பரிந்துரையின் பேரில் ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளில் இருந்து 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. 

  “2100 Mhz பேன்ட் மூலம் 4ஜி சேவைகளை வழங்குவதற்கு எங்களின் கோரிக்கைக்கு மத்திய டெலிகாம் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.” என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இதன் மூலம் அதிவேக 4ஜி எல்.டி.இ. சேவை வழங்க முடியும்.

  இந்தியாவில் மற்ற டெலிகாம் நிறுவனங்களில், பி.எஸ்.என்.எல். மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்காமல் இருக்கிறது. எனினும், சேவை வழங்க அனுமதி கிடைத்திருக்கும் நிலையி்ல், பி.எஸ்.என்.எல். வழங்கும் சலுகைகள் சந்தையில் போட்டியை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை 2100 Mhz பேன்ட் சேவைகளை உரிமம் பெற்று இருக்கும் 21 வட்டாரங்களில் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4ஜி சேவைகள் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா முழுக்க அதிவேக 4ஜி சேவைகளை விரைவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  புதுடெல்லி:

  இந்திய டெலிகாம் சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் பல்வேறு சலுகைகளை அறிவித்த நிலையில், விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் போட்டியை கருத்தில் கொண்டு அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுக்க 4ஜி சேவைகளை வெற்றிகரமாக துவங்குவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மிகமுக்கிய கட்டமாகும்.

  இந்த திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், புதிய 4ஜி சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.20 என்ற மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கும் என வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


  கோப்பு படம்

  பிஎஸ்என்எல் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படும் 4ஜி சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் புதிதாக யுனிவர்சல் சிம் அல்லது யுசிம் கார்டினை ரூ.20 கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். பின் 4ஜி சேவை துவங்கப்பட்டதும், வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் அல்லது ஸ்டோர் சென்று புதிய யுசிம் கார்டினை ரூ.20 விலையில் வாங்க முடியும். 

  பழைய வாடிக்கையாளர்கள் அதே நம்பரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மற்ற நிறுவன வாடிக்கையாளர்களும் தங்களது பழைய மொபைல் நம்பரை மாற்றாமல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த முடியும்.

  முன்னதாக பிஎஸ்என்எல் 3ஜி சேவைகள் 2009-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு கவர்ச்சிகர சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது. மார்ச் 2018 பிஎஸ்என்எல் நிறுவனம் 40 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக அறிவித்திருந்தது. 

  மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சேவையின் மூலம் இதே மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கவர்ச்சிகர சலுகைகள், புதிய திட்டங்கள் மற்றும் சீரான சேவையை வழங்குவதே பிஎஸ்என்எல் சேவையில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
  ×