search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3rd round of vaccination after 6 months interval"

    • 12 வயதிற்கு மேற்பட்ட 29 லட்சத்து 18 ஆயிரத்து 99 பேருக்கு, தல்தவணையும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 707 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • கடந்த 2021 செப்டம்பர் 12-ந்தேதி முதல் இதுவரை 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 2021 ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயதிற்கு மேற்பட்ட 29 லட்சத்து 18 ஆயிரத்து 99 பேருக்கு, முதல்தவணையும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 707 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட 96 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 88 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

    தற்பொழுது தமிழக அரசின் உத்திரவிற்கிணங்க, சேலம் மாவட்டத்தில் கடந்த 2021 செப்டம்பர் 12-ந்தேதி முதல் இதுவரை 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. நாளை(ஞாயிற்றுக்கிழமை) 35-வது சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்ட உள்ளன. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கென ஊரகப்பகுதியில் 2315 மற்றும் சேலம் மாநகராட்சி பகுதியில் 375 என மொத்தம் 2690 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தடுப்பூசி செலுத்துபவர்கaள், கணினியில் பதிவு மேற்கொள்பவர்கள் தகுதி வாய்ந்த பயனாளிகளை அழைத்து வருபவர்கள் என 15,500க்கு மேற்பட்ட அலுவ லர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர தேர்ந்தெ டுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனர்கள் என அனை வரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், நியமிக்கப்பட்டு மேற்படி பணிகள் கண்கா ணிக்கப்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டத்தில் தற்பொழுது கோவிசீல்டு தடுப்பூசி மருந்து 42,580 டோஸ்களும், கோவேக்சின் 17,640 டோஸ்களும், கோர்பிவாக்ஸ் 7,760 டோஸ்களும் கையிருப்பில் உள்ளன. இதற்கென ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய 5 லட்சத்து 74 ஆயிரத்து 292 ஊசி குழல்கள் கையிருப்பில் உள்ளன. நாளை நடைபெறும் முகாமில் 65 ஆயிரம் பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட 1 லட்சத்து 18 ஆயிரத்து 285 பேர் முதல் தவணை தடுப்பூசியும் தகுதியுள்ள 2 லட்சத்து 88 ஆயிரத்து 204 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும்,16 லட்சத்து 78 ஆயிரத்து 885 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர். 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே நோய் எதிர்பாற்றல் முழுமையாக உருவாகும். எனவே 12 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லும் மற்றும் பள்ளி செல்லா அனைத்து குழந்தைகளும் உரிய முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களை கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட வர்களுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 13 லட்சத்து 67 ஆயிரத்து 543 பேருக்கும்(90.27 சதவீதம்), 2-ம் தவணை தடுப்பூசி 11 லட்சத்து ஆயிரத்து 379 பேருக்கும் (72.70 சதவீதம்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்னும் 1 லட்சத்து 47 ஆயிரத்து 457 பேருக்கு முதல் தவணையும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 164 பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடந்த 34 மெகா தடுப்பூசி முகாம்களில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 291 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதே போல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 35-ம் கட்டமாக 1263 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா நோய் "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவி லியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தமுகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும் முதலாம் தவணை போட்டு முடித்து 2-ம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தடுப்பூசியாக 2-வது தடுப்பூசி போட்டு 6 மாத இடைவெளிக்கு பின் 3-ம் தவணை தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×