search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "31 பேர் பலி"

    இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். #Indonesiafloods
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இடைவிடாது பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரை புரண்டோடும் வெள்ள நீரால் மண் அரிப்பு மற்றும் சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

    தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாகணத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    நூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சாலை பாலங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்தன. சாலை வசதி சரியாக இல்லாததால் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் மீட்பு படையினர் சென்றடைவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



    இன்றைய நிலவரப்படி மழைசார்ந்த விபத்துகளில் 31 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 13 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்குழு அதிகாரி அப்துல் ரோஹ்மான் தெரிவித்தார்.
    #Deathtollclimbs #Indonesiafloods #Indonesialandslides 
    விருதுநகர் அருகே கோவிலில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். #VirudhunagarViolence
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடத்தவந்தபோது மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.



    ஒரு தரப்பினர் பொங்கல் வைக்க முயன்றபோது மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். கற்களை வீசி தாக்கினர். வாகனங்கள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மோதலைத் தொடர்ந்து தொப்பலாக்கரை கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மோதலையடுத்து பதற்றம் நீடிப்பதால்  போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #VirudhunagarViolence
    ×