என் மலர்

  நீங்கள் தேடியது "3 Person"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் குணசேகரன் வீட்டில் நேற்று இரவு தூக்குப்போட்டு கொண்டார்.
  • உடல்நலக்குறைவால் மனமுடைந்த முதியவரும் தற்கொலை செய்துள்ளார்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது35). மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

  தற்கொலை

  இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குணசேகரன் தூக்குப்போட்டு கொண்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  இது தொடர்பாக வடபாகம் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின்ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

  தாளமுத்துநகர் கிழக்கு காமராஜர்நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (70). இவர் மகனுடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக கண்பார்வை குறைந்துள்ளதாக கூறி வந்துள்ளார்.

  இந்நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தி வருகிறார்.

  முதியவர்

  அய்யனடைப்பு கைலாசபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (65). இவர் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் வெய்க்காலிபட்டி பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
  • 15 மது பாட்டில்கள், ரூ.5,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.

  நெல்லை:

  கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று வெய்க்காலிபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

  அதில் அவர்கள் வெய்க்காலிபட்டியை சேர்ந்த ராஜேஷ்(வயது 29), அருன் ஜீசஸ் என்ற விஜித், டி.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி(42) என்பதும், 3 பேரும் அங்குள்ள பாரில் மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்றதும் தெரியவந்தது.

  இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரூ.5,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.

  ×