என் மலர்

  நீங்கள் தேடியது "3 Lady missing"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 பெண்கள் மாயமாகினர்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி அருகே சிந்தலை ச்சேரியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது38). இவரது மனைவி ஆரோக்கிய பெட்ரிஷியா (32). இவர்க ளுக்கு ஆண்டோ பெல்டன் (5), அமல்செல்வி (3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

  சம்பவத்தன்று ஆஸ்பத்தி ரிக்கு சென்று வருவதாக குழந்தைகளுடன் சென்ற ஆரோக்கிய பெட்ரிஷியா மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காத தால் தேவாரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்ற னர்.

  சுருளிபட்டியை சேர்ந்த வர் வைரமுத்து மகள் ஆர்த்தி (17). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு கம்பத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற ஆர்த்தி வீடு திரும்ப வில்லை. இது குறித்து அவரது தந்தை கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து ஆர்த்தியை தேடி வருகின்ற னர்.

  உத்தமபாளையத்தை சேர்ந்தவர் நஸ்ரின்பானு (31). இவரது கணவர் இறந்து விட்டதால் தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீட்டில் பணம் கடன் வாங்கி இரு ந்தார். அது தொடர்பாக நஸ்ரின் பானுவுக்கும் அவ ரது தந்தைக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

  இது குறித்த புகாரின் ேபரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×