search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 kg weight"

    சேலத்தில் 3 கிலோ எடை கொண்ட அரிய வகை மாம்பழம் விளைந்துள்ளது. இது விரைவில் சேலம் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது.
    சேலம்:

    சேலத்தில் மாம்பழ சீசன் உச்சத்தை எட்டி உள்ளது. இனால் கடைவீதி, ஏற்காடு ரோடு, ஜங்சன், பழைய பஸ் நிலைம், புதிய பஸ் நிலையம் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஏராளமான மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி யை சேர்ந்த ஒரு விவசாயியின் தோட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய வகை மாம்பழ வகையான தலையணை மாம்பழம் காய்த்து உள்ளது.

    இந்த மாம்பழம் பார்ப்பதற்கு பெரிய அளவில் சுமார் 3 கிலோ எடை கொண்டதாக உள்ளது. விரைவில் சேலம் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது. இது குறித்து மாம்பழம் விளைவித்த விவசாயி கூறியதாவது:-

    சேலத்தில் தலையணை மாம்பழம் சில தோட்டங்களில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த மாம்பழம் பருவமழை சரியாக பெய்தால் மட்டுமே பூ பூத்து காயாகும். பருவமழை பொய்த்து விட்டால் பூ உதிர்ந்து விடும். கடந்த ஆண்டு பருவமழை பெய்ததாலும், தற்போது கோடையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும் இந்த அரியவகை மாம்பழம் எங்களது தோட்டத்தில் விளைந்துள்ளது.

    இத்தகைய மாம்பழங்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே விளைந்த மாம்பழங்களாகும். அப்போது பருவமழை தவறாமல் பெய்து வந்ததே மாம்பழங்களில் விளைச்சலுக்கு காரணமாகும். எங்களது தோட்டத்தில் அரிதாக விளைந்துள்ள இந்த தலையணை மாம்பழத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×