என் மலர்
நீங்கள் தேடியது "3 பேர் கைது"
- பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
- போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்குரதவீதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(42). இவர் வாரச்சந்தையில் மொத்த வியாபாரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு தேவையான பொருட்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அதனை சரிபார்த்த போது பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5200 மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார்அளித்தார். போலீசார் விசாரணையில் ஜக்கம்மாள் கோவில் தெருவைேசர்ந்த அசோக்குமார்(32), 2-வது வார்டு பொன்னகரை சேர்ந்த அலெக்ஸ்(44), வடக்கு முஸ்லீம்தெருவை சேர்ந்த சேக்அஜ்மீர்(46) ஆகிய 3 பேரும் சேர்ந்து அதனை திருடியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(29). இவர் அதேபகுதியில் விவசாயம் செய்து வருவதுடன் ஆடுமாடுகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அதில் பசுமாடு, ஆட்டுகிடா ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைதிருடியது மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்பாண்டி, கம்பத்தை சேர்ந்த சதீஸ், விஜய், விஜிகுமார் என தெரியவந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது கணேஷ்பாண்டி மற்றும் சதீஸ் தப்பிஓடிவிட்டனர். விஜிகுமாரை போலீசார் கைது செய்து பசுமாடு மற்றும் ஆட்டுகிடாவை பறிமுதல் செய்தனர். படுகாயமடைந்த விஜய் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
- அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
- இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாஉத்தரவுப்படி திண்டிவனம் உட்கோட்டஉதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்திபெக்டர்கள் ஞானசேகரன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் முப்பளி கிராமம் அங்காளம்மன் கோவில் அருகில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சம்பந்தமாக கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை வழி மறித்து சோதனை செய்தனர். சோதனையில் 3 பேர் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரெட்டணை கிராமம் ராஜு நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 23) ராமலிங்கம் (21) இடையஞ்சாவடியை சேர்ந்த சந்துரு (25)ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,500 கிராம் கஞ்சா வை போலீசார் கைப்பற்றினர்.
- கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
முசிறி பழைய ஆர்டிஓ அலுவலகம் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தொட்டியம் திருநாராயணபுரம் அரிசனத் தெரு வை சேர்ந்த ராமசாமி மகன் ராகுல் (வயது23) ,தொட்டியம் வடுகர் தெருவை சார்ந்த ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (19) , அரசலூர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் வசந்த (23) ஆகிய மூன்று பேரும் சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைப் பையை போலீசார் வாங்கி சோதனை செய்தனர். கட்டைப் பையில் 3 கிலோ கஞ்சா இருப்பதை கண்ட போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
- இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, அம்மன் நகர் மாரியம்மன் கோவில் அருகே, புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அதை பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (33) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் புளியம்பட்டி, எரங்காட்டு ப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமா ர் (25), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), புளியம்பட்டியைச் சேர்ந்த அன்சர் ஹசன் (29) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.
- மதுரை அருகே கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.
- எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
மதுரை
மதுரை எஸ்.எஸ்.காலனி சமட்டிபுரம் மெயின் ரோடு, பள்ளிக்கூடம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த அச்சம்பத்து, சந்தானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 19) என்பவர் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார்.
இதேபோல் மதுரை விராட்டிபத்து சுடுகாடு அருகே 25 கிராம் கஞ்சாவுடன் சமட்டிபுரம், பாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் குமார் (26) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
மதுரை வண்டியூர் தியேட்டர் பின்புறம் கஞ்சா விற்கப்படுவதாக அண்ணா நகர் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த வாலிபரை பிடித்தனர். அவரிடம் இருந்து 45 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர் கஞ்சா வைத்திருந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம், கட்டமான்கோட்டை பகுதியைச் சேர்ந்த நீலமேகம் என்ற பண்டாரி (35) என்று தெரிய வந்தது. அவரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
- திண்டுக்கல்லில் நன்னடத்தை விதிகளை மீறிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- நன்னடத்தை பிணை முறிப்பத்திரத்தின் காலம் முடிவதற்குள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மரியராஜ் மகன் ஜான், ஜம்புளியம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாதவன் ஆகியோரை குற்றச் செயல்கள் செய்ததால் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர். இதே போல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் மகன் விக்னேசை திண்டுக்கல் தெற்கு போலீசார் கைது செய்தனர்.
3 பேரையும் நிர்வாகத்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை பிணை முறிப்பத்திரம் பெறப்பட்டது. ஆனால் அந்த காலம் முடிவதற்குள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் 3 பேரையும் கைது செய்ய நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார்.
அதன் படி போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
- மதுரை அருகே வாகனங்களை சூறையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தப்பி ஓடிய கீரைத்துறை வேலு என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை கீரைத்துறை, வேத பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி முனியாயி (வயது 53). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது.
இந்த நிலையில் முனியாயி சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு 4 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.
அப்போது அவர்கள் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த ஷேர்ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சூறையாடிவிட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக முனியாயி கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் இருளப்பன் கோவில் தெரு, கண்ணன் மகன் ஜோதிமாரி (20), திருக்கண்ணன் மகன் திருமுருகன் (21), கீரைத்துறை வசந்தகுமார் (25) என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்டதாக மேற்கண்ட 3 பேரை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய கீரைத்துறை வேலு என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.
இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
- தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர்.
சூலூர்:
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் வசந்த்(41). இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.வசந்த் தனது குடும்பத்தினருடன் சூலூர் அப்பநாயக்கன்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், காஸ் சிலிண்டர் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கலங்கல் பகுதிக்கு சென்றார்.
அப்போது அவரை கார் ஒன்று வேகமாக பின்தொடர்ந்து வந்தது. கலங்கல் குட்டை அருகே வந்தபோது கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.மோதிய வேகத்தில் வசந்த் மற்றும் அவரது மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் 2 பேரும் எழுந்திருக்க முயன்றனர்.
அப்போது காரில் இருந்து 3 பேர் கும்பல் திபு,திபுவென அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கி, வசந்தை அரிவாளால் வெட்டினர். வலி தாங்க முடியாத அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று வெட்டினர்.இதை பார்த்த வசந்த்தின் மனைவி காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டார். இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். மக்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தத சூலூர் இன்ஸ்பெக்டர் மாதைய்யன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த வசந்த்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தம்பதியை கார் ஏற்றி கொல்ல முயன்றவர்கள் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது பற்றி விசாரித்து அந்த கும்பலை தேடி வந்தனர். மேலும் சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த கும்பல் செல்லும் கார் திருப்பூர் அமராவதி செக்போஸ்ட் வழியாக சென்ற தகவல் தெரியவரவே போலீசார் திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் குறிப்பிட்ட காரை மறித்து, அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சூலூர் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர்.
போலீசார் அவர்களை கோவை சூலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கருப்புசாமி உத்தமபாளையம் பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு தேனியில் ெசாந்தமாக 21 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அவரது உறவினர் முருகன் என்பவர் குத்தகைக்கு கேட்டார்.
அவரும், முருகனுக்கு குத்தகைக்கு விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கருப்புசாமி அந்த நிலத்தை பார்க்க சென்ற போது வசந்த் என்பவர் அங்கு கோழிப்பண்ணை அமைத்து இருந்தார்.
இதுகுறித்து கருப்புசாமி வசந்த்திடம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரித்து வசந்த்தை அந்த இடத்தை காலி செய்ய வைத்து கருப்புசாமியிடம் ஒப்படைத்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வசந்த், கருப்புசாமியை அரிவாளால் வெட்டி விட்டு சூலூர் அப்பநா யக்கன்பட்டிக்கு வந்து விட்டார்.
தன்னை வெட்டியவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே கருப்புசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த்தை காரை ஏற்றியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கருப்புசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- 10 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் கள்ளத்தனமாக கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தாமலேரிமுத்தூர், பொன்னேரி காந்திநகர் பகுதியில் சோதனை செய்தபோது ராஜி என்பவரின் மகன் சுந்தர் (வயது24) என்பவர் வீட்டின் பின்புறத்தில் மண்பானையில் 10 லிட்டர் கள்ள சாராயத்தை கள்ளத்தனமாக பதுக்கி வைத்துக்கொண்டிருந்தார்.
அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சின்ன பொன்னேரி பகுதியில் சோதனை செய்தபோது ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி திலகா (45) மற்றும் பெரிய பொன்னேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் செந்தில்குமார் (52) ஆகிய இருவரும் வீட்டில் மறைத்து வைத்து கள்ளத்தனமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்ற பெண் உட்பட 3 பேரையும் கைது செய்து, 10 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து அளித்தனர்.
- கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- இதனால் மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள கஸ்பா பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (51). இவரது கணவர் பழனிசாமி (60). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது.
கட்டிட வேலை பார்த்து வந்த பழனிசாமி, கை, கால், இடுப்பு வலி போன்ற உடல் உபாதைகளால் கடந்த 3 வருடங்களாக வேலைக்கு செல்லவில்லை. மேலும், தனது மகளுக்கு திருமணமாகவில்லை என மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் உடல் உபாதை காரணமாக பழனிசாமி சம்பவத்தன்று இரவு எலி மருந்தை மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டார்.
இதுகுறித்து தெரிய வந்ததையடுத்து அவரது மனைவி கோவிந்தம்மாள் உறவினர்கள் உதவியுடன் அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பழனிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கூச்சிக் கல்லூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (54). இவரது 2வது மகன் கலைநாதன் (24).
இவர், பவானி, காலிங்கராயன்பா ளையம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் நிறுவனம் ஒன்றில் வேன் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இன்னும் திரும ணமாகவில்லை.
கலைநாதனுக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. அதற்காக அந்தியூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் வழக்கம் போல வேலைக்கு சென்றுவந்த கலைநாதனுக்கு அன்றைய தினம் நள்ளிரவில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் விசாரித்த தில், விஷத்தை குடித்து விட்டதாக கலைநாதன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கலைநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகையைச் சேர்ந்தவர் கவுதம் (24). பைக் மெக்கானிக். இவரது தந்தை கிட்டான் (58). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கவுதமின் தாய் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கவுதமின் மூத்த சகோதரி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கிட்டானுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதையில் அவருக்கு புற்று நோய் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவருக்கு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், வாயில் புண் இருந்த காரணத்தால் சரிவர மருந்து, மாத்திரைகளை சாப்பிட முடியவில்லையாம்.
இதனால் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று இரவு , மகன் கவுதம் வீட்டில் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கவுதமின்பாட்டி அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த கவுதம் தந்தை கிட்டானை சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கிட்டான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.