என் மலர்

  நீங்கள் தேடியது "23-ஆம் புலிகேசி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று நம்புவதாக இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.
  வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

  இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.


  இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை.

  இதையடுத்து இயக்குநர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் பிசியாகிவிட்டார். இந்த நிலையில், சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. #ImsaiArasan
  வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார்.

  இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. 

  இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.  இதைத்தொடர்ந்து படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

  யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 10 படங்களில் நடித்து இருந்தார். தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடிவேலுவை மீண்டும் நடிக்க வைப்பதில் படக்குழுவினர் உறுதியாக இருப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் யோகிபாபு நடிப்பது பற்றி சிந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. #ImsaiArasan #IA24P #Vadivelu #YogiBabu
   
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புனித யாத்திரைக்கான விமான கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதற்கு கேரளா மாநில ஹஜ் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது. #GST #GSTCouncilMeeting #KeralaHajCommittee
  புதுடெல்லி:

  நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
   
  வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

  இதற்கிடையே, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடிவானது.
   


  இதில், அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், புனித யாத்திரைக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதற்கு கேரளா மாநில ஹஜ் கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.

  இதுதொடர்பாக ஹஜ் கமிட்டி தலைவர் மொகமது பெய்சி கூறுகையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #GST #GSTCouncilMeeting #KeralaHajCommittee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  32 அங்குலம் கலர் டி.வி., புனித யாத்திரைக்கான விமான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #GST #GSTCouncilMeeting
  புதுடெல்லி:

  நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
   
  வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

  இதற்கிடையே, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

  ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான ஆண்டாந்திர கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதி மார்ச் 31-க்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  மேலும், 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கவும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இவற்றில் 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

  மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் ஜன்தன் யோஜானா வங்கி கணக்குகளுக்கான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.  அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  32 அங்குலம் அகலத்திலான கலர் டி.வி., கம்ப்யூட்டர் மானிட்டருக்கான வரி 28-லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிகளுக்கான பவர்பேங்க், வாகன டயர்கள் மீதான வரியும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

  இந்த புதிய வரி விகிதம் 1-1-2019 முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி  தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் வரி குறைக்கப்பட்ட 23 வகைகளின் மூலம் மட்டும் சுமார் 5500 கோடி ரூபாய் வருமானத்தை அரசு இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  இவை நீங்கலாக மது வகைகள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சூதாட்டங்கள் தொடர்பான ஆடம்பர விவகாரங்களுக்கான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் 28 சதவீதமாகவே தொடரும்.

  இப்படிப்பட்ட ஆடம்பரம் மற்றும் குற்றப் பொருட்களுக்கான பட்டியலில் 28 வகை தொழில்கள் மட்டுமே தற்போது இடம்பெற்றுள்ளன. இதில் வாகன உதிரி பாகங்கள், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெற்றுள்ளன.

  அதிகமாக விற்பனையாகிவரும் இவற்றுக்கு விதிக்கப்படும் வரியை  28-லிருந்து 18 சதவீதமாக குறைத்தால் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை அரசு சந்திக்க நேரிடும் என்பதால் இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  100 ரூபாய்க்கும் அதிகமான சினிமா டிக்கெட் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

  சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான வரிகுறைப்புக்கு மும்பையில் உள்ள அனைத்திந்திய சினிமா தயாரிப்பாளர் சம்மேளனம் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளது. #GST #GSTCouncilMeeting
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. #NepalBusAccident
  காத்மாண்டு:

  நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள கிருஷ்ணா சென் இச்குக் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்சில் கல்விச் சுற்றுலா சென்று இருந்தனர்.

  பல இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  மலைப் பாதையில் ராம்ரி கிராமம் அருகே வந்தபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டோரம் இருந்த 1,640 அடி பள்ளத்தாக்கில் தலைகீழாக கவிழ்ந்தது.

  இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மாணவர்களும்- கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.

  இவர்கள் தவிர படுகாயமடைந்த சிலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

  நேபாளத்தில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. கடந்த வாரம் மலைப் பாதையில் பஸ் உருண்டதில் 16 பேர் பலியாகினர். அங்குள்ள மோசமான ரோடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. #NepalBusAccident
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இம்சை அரசன் 24ஆம் புலிகேசி நடிக்க முடியாது என்று வடிவேலு பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #IA24P #Vadivelu
  இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். 

  சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன. இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

  இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தை நாடினார். எனினும் தீர்வு எட்டவில்லை. இந்த நிலையில் தான் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின. எனினும் வடிவேலு விடாப்பிடியாக இருந்தார்.  இந்த நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

  முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துணை நடிகர், நடிகைகளும் ஒப்பந்தமாகினர். வடிவேலுவின் விடாப்பிடியால் அனைவரும் தேதியை ஒதுக்கிட்டு தவித்தனர்.

  இந்த நிலையில், பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #Vadivelu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இம்சை அரசன் பட விவகாரத்தில் வடிவேலு பிடிவாதமாக இருப்பதால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இதுகுறித்து வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். #ImsaiArasan #Vadivelu
  இயக்குனர் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இவர்கள் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இது.

  சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப் பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவி னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

  இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் விவாதித்து வந்தது .

  இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் தயாரிப்பாளர் ‌ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளர் கலந்து கொண்டனர்.

  இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.  இந்த முடிவால் வடி வேலு தரப்பினர் அதிர்ச் சியடைந்தனர். தன்னுடைய நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் வடிவேலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

  “இம்சை அரசன் 24 ம் புலிகேசியில் நடிக்க 2016-ம் ஆன்டு ஜூன் 1-ந்தேதியில் ஒப்புக் கொண்டேன். அதே ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங் களில் நடிப்பதை தவிர்த்தேன்.

  ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத்தொடங்காமலே காலம் தாழ்த்தினர். தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன்.

  இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பு நிறுவனம் நீக்கியது. அத்துடன், எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

  நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016-2017ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந் தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

  பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற் கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

  இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.  ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப் பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

  இதனைத் தொடர்ந்து, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிரச்சினையை முடிக் கும்வரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப் பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத் தியுள்ளது.

  வடிவேலுவுக்கு தயாரிப் பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. இதுகுறித்து வடிவேலுவின் பதில் அறிய அவரை தொடர்புகொண்டபோது அவர் ‘அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வர வில்லை. யாரோ கிளப்பி விட்ட வதந்தி இதுதொடர்பாக எனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை’ என்றார். #ImsaiArasan #Vadivelu 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பிறகு படத்தில் நடிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vadivelu #IA24P
  வடிவேலு கொடுத்த குடைச்சலால் பாதியில் நின்ற இம்சை அரசன் பார்ட் 2 வின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் வடிவேலு இறங்கி வந்து இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது.

  இதனை இம்சை அரசன் படக்குழு மறுத்துள்ளது. வடிவேலு இன்னும் பிடிவாதம் பிடித்தே வருகிறார். பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்திடம் சென்று இருக்கிறது.

  சங்க நிர்வாகிகளுக்கும் வடிவேலு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வடிவேலு நடிக்க தடை என்று ரெட்கார்டு போடப்படுவது உறுதி. ஏற்கனவே வடிவேலு நடிப்பதாக இருந்த படங்களில் இருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டு விட்டார்’ என்று கூறுகிறது படக்குழு.  வடிவேலு மீது ரெட்கார்டு போடப்பட்டால் அவரது சினிமா வாழ்க்கையே முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கவலை தெரிவிக்கின்றனர் சினிமா ரசிகர்கள். #IA24P #ImsaiArasan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. #IA24P #ImsaiArasan
  ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்.

  இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.

  இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது.   பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது. 

  இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடிவேலு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #ImsaiArasan #Vadivelu
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கோ நாட்டில் மீண்டும் எபேலா வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாகவும், கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Congo #EbolaVirus
  கின்சசா:

  விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

  இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்சுகளும் பாதிப்புக்கு ஆளாகினர்.

  இப்போது மறுபடியும், காங்கோ நாட்டில் இந்த வைரஸ் நோய் பரவத்தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு மபண்டாகா நகரில் இந்த நோய் பரவி வருகிறது. கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி 23 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த வைரஸ் நோய் பரவி வருவதை காங்கோ நாட்டின் சுகாதார மந்திரி ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்தார்.  தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்து உள்ளது.  #Congo #EbolaVirus
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp