search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20th Match"

    3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது. #WIvsENG
    பசட்ரே:

    வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவரில் 71 ரன்னில் சுருண்டது. 3 வீரர்கள் (கேம்பெல், ஹோல்டர், நிக்கோலஸ் பூரண்) மட்டுமே இரட்டை இலக்க ரன்னை தொட்டனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள்.

    வேகப்பந்து வீரர் டேவிட் வில்லே 7 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். மார்க்வுட் 3 விக்கெட்டும், ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இங்கிலாந்து 72 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 37 ரன் எடுத்தார்.

    இங்கிலாந்து பெற்ற ‘ஹாட்ரிக்‘ வெற்றியாகும். ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் 20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் ‘ஒயிட் வாஷ்’ ஆனது.

    டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. ஒரு நாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்து இருந்தது. #WIvsENG
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 45 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சாம்பில்லிங்ஸ் 47 பந்தில் 87 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) ஜோ ரூட் 40 பந்தில் 55 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை மளமள என்று இழந்தது. அந்த அணி 11.5 ஓவரில் 45 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மயர், பிராத் வெயிட் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டனர். ஜோர்டான் 4 விக்கெட்டுட் வில்லி, ஆதில் ரஷீத், புளுனகெட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் 2-வது குறைந்த பட்சஸ்கோர் இதுவாகும். #WIvsENG
    ×