search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

    • குடும்ப பிரச்சினையில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி பெருமாள் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த வருடம் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    மேலும் அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த மோகன்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி வடக்குஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானிசாகர், அம்மாபேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குறிச்சி டாஸ்மாக் கடை, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் கிட்டுசாமி (வயது 55),

    சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.
    • வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமா கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்குவாரியில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி என்பவர் சமையல் செய்யும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்பட்டது. இதில் லட்சுமி மற்றும் பக்கத்து குடியிருப்பில் இருந்த மேலும் 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக அதன் உரிமையாளர்கள் விஜயலட்சுமி, சண்முகசுந்தரம், ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களான கார்த்தி (வயது 32), சக்திவேல் முருகன் (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
    • அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பின்னர் விசாரணையில் அதில் இருந்த 2 பேர் கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பழத்தோட்டம் காந்தி தெருவை சேர்ந்த சங்கரன் மகன் சஜீஸ் (வயது 32), கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளிவாசல் தெரு வேலாயுதம் மகன் பிரகாசம் (38) என்பதும், அவர்கள் விற்பனைக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் இருவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 566 கிலோ எடை மதிப்புள்ள போதைப்பொ ருட்கள் மற்றும் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்தப் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 680 ஆகும். மேலும் ஆசனூர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்தனர்.
    • அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சாணார்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வீரசின்னம்பட்டி பிரிவில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை நம்பர்களின் அடிப்படையில் விற்பனை செய்த அலங்காநல்லூரை சேர்ந்த கண்ணன்( வயது 38), கன்னியாபுரத்தை சேர்ந்த சுரேந்திரன்( வயது 43) ஆகிய 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

    அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 300, பில்புக், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே சிற்பக்கூட ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி(வயது58). அங்குள்ள சிற்பக்கூடம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் சிற்பக்கூடத்தில் பணியில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

    இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கார் ஷெட்டில் உள்ள வாட்ச்மேன் அறையில் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மனைவி, உறவினர்களுடன் அங்கு சென்று அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் பாண்டியன் நகர், கே.டி.கே. தங்கமணி காலனியை சேர்ந்தவர் ராமர்(வயது50). இவர் தனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக மனைவியிடம் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரி முனீஸ்வரன், பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.
    • போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர், புது தோட்டத்தை சேர்ந்தவர் பூவாத்தாள் (57). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தோட்டத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டி இருந்தார்.

    ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலுக்கினர்.

    சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம் (31), கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி என தெரிய வந்தது.

    இதற்கு உடந்தையாக வடக்குப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    இதில் அப்புசாமி 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

    • ரெயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.
    • மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு மக்கள் இன்று முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதலே வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று இரவு முதல் தீபாவளியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று முதல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் பிற மாவட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ெரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பட்டாசு கொண்டு செல்லப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க ப்படும் எனவும் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா தலைமையில் ரெயில்வே போலீசார் பயணிகள் உடை மைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

    பட்டாசு பொருட்கள் பதுக்கி வைத்துள்ளார்களா என்று உடைமைகளை சோதனை செய்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவியை கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும்.

    இதனை தடுக்கும் வகையில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். சந்தேக ப்படும் சில நபர்களை பிடி த்து விசாரணை நடத்திய அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இன்று 2-வது நாளாக ஈரோடு ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயணி களின் உடைமைகளை தீவிர சோதனையிட்டனர்.

    இதேபோல் ஈரோட்டுக்கு வரும் ஒவ்வொரு ரெயில்க ளில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். மேலும் பயணி களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினர்.

    ெரயில் பயணத்தின் போது யாரும் சாப்பிட எது கொடுத்தாலும் அதை வாங்கி சாப்பிடக்கூடாது. அதிக நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    இரவு நேரத்தில் தூங்கும் போது ஜன்னலை மூடி விட்டு தூங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு அடங்கிய நோட்டீசையும் வழங்கினர்.

    இன்று வழக்க த்தை விட ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்ட தால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    • கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் பரமத்தி சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இருக்கூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ரெயிலில்...

    விசாரணையில் இருக்கூரை சேர்ந்த அக்பர் உசேன் என்பவரது மனைவி சுப்பியா(40) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலோக்சிங் என்பவரது மகன் சங்கர் சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும் சங்கர் சிங், சுப்பியா மற்றும் அவரது கணவர் அக்பர் உசேன் என்கிற ராஜு ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்று பலமுறை மொத்தமாக கஞ்சாவை ெரயில் மூலம் கடத்தி வந்து கபிலர்மலை பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    கைது

    சுப்பியா மற்றும் சங்கர் சிங் ஆகியோரிடமிருந்து காய்ந்த விதைகள், இலைகள், காய்கள், பூ மற்றும் தன்டுகளுடன் கூடிய உலர்ந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்தவர் சித்ராதேவி (வயது35). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நாகசூர்யா (22) என்பவரும் சந்தேகபப்படும்படியாக நின்றுகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந் தனர். வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமையிலான போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தி 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் ஆலோசனையின்படி கைது செய்யப்பட்ட 2 பேரும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர். நாகசூர்யா மீது ஏற்கனவே கஞ்சா விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில் மீண்டும் சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.
    • சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டம் பாட்டூரை சேர்ந்தவர் பிச்சுகா ஸ்ரீஹரிபாபு (46), இவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் சேலை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    வியாபாரி

    வழக்கம் போல கடந்த 31-ந் தேதி இளம்பிள்ளையில் சேலைகள் வாங்க சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஐதராபாத்தில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரம் வரும் ரெயிலில் மனைவியுடன் வந்தார். மொரப்பூர் ரெயில் நிலையம் அருகே வந்த போது தனது செல்போன் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் சம்பவம் குறித்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று சேலம் ஜங்சன் ரெயில் நிலைய நடைமேடை எண் 1-ல் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுறறி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரம்மம் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்த அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டு செல்போனையும் பறிமுதல் ெசய்தனர். இந்த செல்போனின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவம்

    இேத போல மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் ஷியாலி உமேஷ் மோர் (39), இவர் கடந்த 31-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் போடிநாயக்கனூ்ரில் இருந்து -சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு ரெயிலில் புறப்பட்டார். ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வரும் போது கண் விழித்து பார்த்த போது அவரது செல்போன் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சம்பவம் குறித்து ேசலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று அதிகாலை சேலம் ரெயில் நிலைய 3-வது பிளாட்பார்மில் சுற்றி திரிந்த நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் பாலாஜி நகரை சேர்ந்த யுவராஜ் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 ஆயிரம் மதிப்பிலான அந்த செல்போனையும் மீட்டனர். 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    ×