என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
- சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செல்வம் (வயது57) என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி செல்வம், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- 1 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை சூலூர் தென்னம்பாளையத்தில் உள்ள பீடா கடை அருகே சிலர் கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரும் தற்போது அரசூரில் வசித்து வரும் சாகர் மெகந்தி (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 கிலோ கஞ்சா சாக்லெட்டை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சாகர் மெகந்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
பேரூர் போலீசார் சீராபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள சமோசா கடை அருகே கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீப் பெகரா (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார் பிரதீப் பெகராவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- இவர் தனியார் வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முருகன் மகள் கமலீஸ்வரி (வயது22). இவர் தனியார் வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகள் தரணிஸ்ரீ (15). இவர் தேனியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
போடி அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா மனைவி குள்ளம்மாள் (வயது90). இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விஜயபிரகாஷ் (20). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித்திரிந்துள்ளார். அதனை அவரது தாய் தட்டிக்கேட்டதால் வேதனை அடைந்த விஜயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
- இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் உள்பட 132 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இப்பணியாளா்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.707 வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ளது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை விட குறைவாக நாளொன்று க்கு ரூ.395 மட்டுமே ஒப்பந்த நிறுவனம் வழங்கி வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். போராட்டம் காரணமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
தொழிலாளர் நல சட்டங்களின் படியான சட்டபூர்வமான பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
ஆனால் ஒப்பந்த நிறுவனம் கோரிக்கைளை நிறைவேற்றாததால் நேற்றிரவு முதல் மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இரவு முழுவதும் கடும் பனியை பொறுப்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக தூய்மை பணியாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் காத்திருப்பு போரா ட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- மளிகை கடையில் சோதனையிட்டபோது புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
- புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குளிங்கரா பகுதியை சேர்ந்தவர் பாபு (53). இவர் தற்போது ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சத்தி ரோட்டில் உள்ள புங்கம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் அங்குள்ள அரசு தொடக்க பள்ளிக்கு அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பாபு தனது மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பாபுவின் மளிகை கடையில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட 10.5 கிலோ எடையிலான ரூ.8,800 மதிப்பிலான புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து புளியம்பட்டி போலீசார் பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பாபுவுக்கு விற்பனைக்காக வினியோகம் செய்த புளியம்பட்டி சேரன் வீதியை சேர்ந்த வேலுசாமி (68) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
- கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூ–ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுனர். அப்போது கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையின் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கோத்தகிரி தவிட்டுமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது54) என்பதும் இவர் அரவேணு பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக பாலன் (வயது64) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இவருக்கும் அதே பகுதி சேர்ந்த வளையாபதி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- அம்சகுமார், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி அவரது இரு சக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த வளையாபதி என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. அந்தபிரச்சினைக்கு சுப்பிரமணியத்தின் அண்ணன் ஆறுமுகம், அவரது மகன் அம்சகு மாரும் காரணம் என கருதி வளையாபதி மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து அம்சகுமார் வீட்டிற்கு சென்றனர்
பின்னர் அம்சகுமார், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி அவரது இரு சக்கர வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டி யன்,சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் இதுகுறித்து வளையாபதி,தியாகராஜன்,ராமச்சந்திரன்,தங்கமணி ஜெய க்கொடி,அருள்பாண்டியன் உள்ளிட்ட 17 பேர் மீதுவழக்கு பதிவு செய்துஅருள்பாண்டியன் (19),சுப்பிரமணியன் (52) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன் (60). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரி வர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை உஷா கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத–போது வெங்கடேசன் திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லலித் ராகவ் தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக வேலை பார்த்து வருகிறார்.
- லலித் ராகவ், முத்து செல்வனை தனது வீட்டிற்கு மது குடிக்க அழைத்தார்.
கோவை,
கோவை வெங்கிட்டா புரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லலித் ராகவ் (வயது 29). தனியார் நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மது குடித்து கொண்டு இருந்த கவுண்டம்பாளைத்தை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் முத்து செல்வன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நட்பாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து மது அருந்தினர்.
சம்பவத்தன்று லலித் ராகவ், முத்து செல்வனை தனது வீட்டிற்கு மது குடிக்க அழைத்தார். அதன்படி அவர் தனது நண்பரான கே.கே. புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷாஜகான் (43) என்பவருடன் சென்றார்.
அங்கு அவர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடித்தனர். அப்போது முத்து செல்வன், ஷாஜகான் ஆகியோர் சேர்ந்து லலித்ராகவுக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்தனர். இதில் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவரிடம் 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலையில் போதை தெளிந்து எழுந்த அவர் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து செல்வன், ஷாஜகான் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே டாஸ்மாக் பாரில் போதையில் இருந்த கே.கே. புதுரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு உதவி செய்வது போல நடித்து அவரிடம் இருந்து 2 பேரும் முக்கால் பவுன் மோதிரத்தை பறித்தது தெரிய வந்தது.
மேலும் போலீசார் இவர்கள் 2 பேரிடமும் இதே போல மது போதையில் இருப்பவர்களை குறி வைத்து வேறு யாரிடமாவது நகைகளை பறித்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட சென்றனர்.
- இரு தரப்பினருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (60). இவரது மனைவி தனலட்சுமி (56). இவரது தங்கை அம்சவேணி (50). இவரது கணவர் கோவிந்தராஜ் (55). இவர்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அம்சவேணி தனது கணவருடன் மேட்டுப்பாளையம் வந்து தனது அக்காள் மற்றும் அக்காளின் கணவருடன் சேர்ந்து ஜடையம்பாளையம் பகுதியில் வீட்டு மனை பார்ப்பதற்காக நேற்று சென்றனர்.
பின்னர் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட சென்றனர். அப்போது அங்கு குட்டையூர் பகுதியை சேர்ந்த நிவேந்த் (30) என்பவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களான காரமடையை சேர்ந்த ராஜேஷ்(34), அருண்குமார்(32), விக்னேஷ்(32) உள்ளிட்டோருடன் பேக்கரிக்கு வந்தார்.
அப்போது இரு தரப்பினருக்கும் கடையில் பொருட்கள் வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி 4 பேரும் சேர்ந்து குடும்பத்தினருடன் வந்த பெண்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
இந்த சம்பவத்தில் பெண்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப் பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காரமடை போலீசார் ராஜேஷ், நிவேந்த் ஆகிய 2 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
போலீசார் தேடுவதை கண்டதும் அருண்குமார், விக்னேஷ் உள்ளிட்ட இருவரும் தலைம றைவாகி உள்ளனர்.அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கார் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்-மனைவி பலியாயினர்.
- விபத்து, 2 பேர் பலி Accident, 2 killed
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது60). இவரது மனைவி கஸ்தூரி (54). இவர்கள் தீயனூரில் நடைபெறும் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அவர்கள் தீயனூர் விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோதியது.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி பொதுமக்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பலியான ராஜாமணி, கஸ்தூரி உடல்களை மீட்டுபிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிய காரை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற கணவன்-மனைவி விபத்தில் பலியான சம்பவம் மிளகனூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.