என் மலர்

  நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தியாகதுருகத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற பேரை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பதாக தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புவனேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸ் இன்ஸ்பெக் டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்ற பேரை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இனாயத்துல்லா என்பவரது மகன் வாஹித் (வயது 20) மற்றும் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது மகன் ருத்திஷ் (வயது 23) என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ.38 ஆயிரத்து 500 பணம் மற்றும் ஒரு கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் வாஹித் மற்றும் ருத்திஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் ருத்திஷ் என்பவர் மீது ஏற்கனவே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வெடிமருந்து தொடர்பான வழக்கும், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய த்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக வும் வழக்குப்ப திவு செய்யப்பட்டு ள்ளது குறிப்பிடத்த க்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயில் மோதி இறந்து கிடந்தார்.
  • கோவையில் வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

  கோவை,

  கோவை சிங்காநல்லூர் ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ெரயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இதேபோன்று வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் பாலம் அருகே 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்தும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கோவையில் வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர்கள் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

  இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
  • 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  விழுப்புரம்:

  திண்டிவனம் போலீசார்,மரக்காணம் சாலையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராஜன், என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

  அவரிடம் இருந்த 20,000 மதிப்பிலான குட்கா ஹான்ஸ் பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாசன் இன்று இரவு மரக்காணம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். புதுவைநோக்கி வந்த (omni)காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 50 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பொருளை கடத்தி வந்த கோவடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது34) வழக்கறிஞர்.
  • கனகராஜ்தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் சென்ற போது லாரி மோதி பலியானார்.

  கரூர்,

  கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது34) வழக்கறிஞர். இவர் கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூர் ராசிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புதுவாடிபுதூரை சேர்ந்தவர் முருகவேல். இவர் மனைவி சுசீலா (50). கனகராஜின் மாமியரானா சுசீலா பாலவிடுதியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மருமகன் கனகராஜுடன் இரு சக்கர வாகனத்தில் காளியப்பனூருக்கு சென்றுள்ளார்.

  வெள்ளியணை அருகேயுள்ள ஒத்தையூர் அருகே செல்லும்போது தோகைமலையிலிருந்து ஓசூருக்கு கிரானைட் கல் ஏற்றிச்சென்ற ட்ரெய்லர் லாரி , கனகராஜ் ஓட்டி சென்று இரு சக்கர வாகனத்தின் (ஸ்கூட்டர்) மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  இதுகுறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜ், சுசீலா சடலங்களை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் பழைய சுக்காம்ப ட்டியைச் சேர்ந்த கர்ணனை (50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி ரெயில் நிைலய மைதானத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள், ஊசி, பாட்டில் மற்றும் கஞ்சாவைபோலீசா பறிமுதல் செய்து உள்ளனர்

  திருச்சி :

  திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாகரில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர்.

  இதில் திருச்சி ரெயில் நிைலய மைதானத்தில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தில்லைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தில்லைநகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று பார்த்த போது, தில்லைநகர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமநாத் (வயது 32), பழைய கருர் ரோடு பகுதியை சேர்ந்த ஆசிக் பாஷா (21) உப்புப்பாறையை சேர்ந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தனர்.

  அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். ஆனாலும் அங்கிருந்த அன்சாரி, உலகநாதன், பிரசன்னா ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட ராமநாத், ஆசிக் பாஷா ஆகியோரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் தான் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்றது உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து அவர்களிடமிருந்து 18 போதை மாத்திரைகள், ஊசி, பாட்டில் மற்றும் கஞ்சாவைபோலீசா பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தது, யார் சப்ளை செய்கிறார்கள், நெட்ஒர்க் அமைத்து மர்ம நபர்கள் யார், இதுவரை யார், யாருக்கெல்லாம் போதை மாத்திரை விநியோகம் செய்யப்பட்டு உள்ளது என்று துருவித்துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராமநாத், ஆசிக் பாஷா மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
  • விவசாயி வீட்டில் திருட முயன்றவர்

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை அருகேயுள்ள கே.ராசியமங்க லத்தை சேர்ந்தவர் மத்தியாஸ். விவசாயியான இவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சுந்தரநாயகி புறத்தை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவதை கடந்த 2015-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி குற்றவியல கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி விஜய்பாரதி, விவசாயி வீட்டில் திருட முயன்ற செல்வத்திற்கு ஐ.பி.சி. 454-ன்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், ஐ.பி.சி.380-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். ேமலும் இந்த தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடடார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கவலையில் இருந்த வாலிபர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் கோம்பை அரண்மனை தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது37). இவர் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து அங்குள்ள ஏலத்தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார்.

  விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கவலையில் இருந்த ஸ்ரீகாந்த் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  உத்தமபாளையம் ஜோசப்நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). இவரது 5 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. 2 மகன்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேேய இருந்தனர். இதனால் மனமுடைந்த சுப்பிரமணி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மயிலம் அருகே சாராயம், கஞ்சா பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • மயிலம் எல்லைக்குட்பட்ட அவ்வையார் குப்பம் அருகே ரோந்து பணியில் இருந்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ள சாராயம் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை தடுக்கும் நோக்கத்துடன் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே அவ்வையார் குப்பம் கிராமத்தில் கஞ்சா மற்றும் கள்ள சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு தகவல் வந்தது.

  அதன் அடிப்படையில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்.லட்சுமி, மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், போலீசார் இஸ்மாயில், ராஜ்குமார், பிரபாகரன் மற்றும் பழனி ஆகியோர் தலைமையில் மயிலம் எல்லைக்குட்பட்ட அவ்வையார் குப்பம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கொண்டங்கி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 26) முப்புளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமார், மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 200லிட்டர் சாராயம், 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
  • விசாரணையில் இருவரும் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

  புதுக்கோட்டை :

  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

  விசாரணையில் இருவரும் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த ரஜினி(வயது36),மாதவன் (30) என்பதும், அவர்கள் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

  அதனைத் தொடர்ந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்த தனிப்படையினர், அவர்களிடமிருந்த 29 உடும்புகளை பறிமுதல் செய்ததோடு இருவரையும் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

  பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 29 உடும்புகள் மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஒப்படைக்கப்பட்ட உடும்புகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் காடுகளில் பத்ரிரமாக விடப்படவுள்ளது.

  அழிந்துவரும் இனமான உடும்புகளை பிடித்து சாக்குப்பையில் திருச்சிக்கு கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் வடகனந்தல் ஊரைச் சேர்ந்த தோப்புத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்வதாக கச்சிராயபாளையம் போலீசருக்கு தகவல் வந்தது. அதன்படி சப்இன்ஸ்பெக்டர் ராமர் வடக்கனந்தல் தோப்புத் தெருவில் உள்ள ஆறுமுகம் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர.

  அப்போது அருகில் 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதேபோல் வடக்க நந்தல் கடை தெரு போகும் பாதையில் உதயசூரியன் அவர் தனது வீட்டின் அருகில் கள்ள சாராயம் வைத்து விற்பனை செய்து வருகிறார் என்ற தகவல் கச்சிராயபாளையம் போலீசாருக்கு தெரியவந்தது.

  அதன் அடிப்படையில் கச்சிராயபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ர் ஏழுமலை கடைத்தெரு போகும் பாதை உதயசூரியன் வீட்டிற்கு சென்று சோதனைசெய்தனர்.

  அங்கு 2 லாரி டியூப்பில் 55 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் மற்றும் உதயசூரியன் ஆகியோர் வீடுகளில் மொத்தம் 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு ஆறுமுகம், உதயசூரியன் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடத்துாரன் கொட்டாய் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி வருவதாக, தருமபுரி கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த ராஜா (வயது 50)என்பவரை பிடித்து விசாரித்தனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம் நூல அள்ளி அடுத்த கடத்துாரன் கொட்டாய் பகுதியில் கள்ளச்சாரயம் காய்ச்சி வருவதாக, தருமபுரி கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதனை அடுத்து கலால் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், எஸ்.ஐ., விஜயசங்கர் தலைமையில் கலால் போலீசார் கடத்துாரன்கொட்டாய் பகுதியில் ரோந்து சென்றனர்.

  அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த ராஜா (வயது 50)என்பவரை பிடித்து விசாரித்தனர்.இதில், ராஜா தனது தேக்கு தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாவின் தோப்பில் பதுக்கி வைத்திருந்த 120 லிட்டர் ஊறல் மற்றும் 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், கள்ளச்சாரயம் காய்ச்சிய ராஜாவை கைது செய்தனர்.

  இதேபோல கிருஷ்ண கிரி மாவட்டம் சிங்கா ரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிப்பட்டி கிராம பகுதி தென்பெண்ணை ஆற்று கறையோரம் உள்ள காட்டுப்பகுதியிகளில் மர்ம நபர்கள் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  அந்த தகவலின் பேரில் ஊத்தங்கரை துணை காவல் கண்காணிப்பாளர் அமலா அட்வின் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு எஸ்.ஐ. மற்றும் குற்றபிரிவு காவலர்கள் பிரபாகரன், அதியமான், நாசில் ஆகியோர் சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எட்டிப்பட்டி காமராஜ் நகர், தென்பெண்ணை ஆற்றங்கரையில் 4 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராய ஊறல்களை கண்டுபிடித்து பேரல்களில் இருந்து கொட்டி அழித்தனர்.

  அந்த பகுதியில் ஊறல் வைத்திருந்த மர்ம நபர்கள் குறித்து சிங்காரபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கிராம பகுதியில் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
  • இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலசொக்கநாதபுரம்:

  தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது24). இவர் அர்ச்சனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி மெட்டு காத்தாடி பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

  தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அர்ச்சனா படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  போடி கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (38). இவர் குரங்கணி பிச்சாங்கரையில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  நேற்று மோட்டார் சைக்கிளில் போடி-முந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஜீப் பைக் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  ஜீப்பில் வந்த பானுமதி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.